என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. நவகிரஹங்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் நவகிரஹ தோஷங்கள் நீங்கும்.
    சூரிய காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    சந்திர காயத்ரி :

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
    தந்நோ சந்திர ப்ரசோதயாத்

    அங்காரக காயத்ரி :

    ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

    புத காயத்ரி :

    ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
    தந்நோ புதப் ப்ரசோதயாத்

    குரு காயத்ரி :

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குருப் ப்ரசோதயாத்



    சுக்ர காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    சனி காயத்ரி :

    ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சனிப் ப்ரசோதயாத்

    ராகு காயத்ரி :

    ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    கேது காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
    தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

    நவகிரஹ சாந்தி ஸ்லோகம் :

    ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
    குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ
    அந்தத் துதியை சிவனுக்கு உகந்த நாட்களில் துதித்தால் அனைத்து நலன்களும் கிட்டுவதோடு 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்த மகத்தான புண்ணியமும் சேரும்.
    ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம் :

    ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
    ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
    பக்திப்ராதாய க்ருதாவதாரம்
    தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே

    மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.

    ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
    சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
    தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
    நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்



    பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

    அவந்திகாயாம் விஹிதாமதாரம்
    முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம்
    அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
    வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்

    அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.

    தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் இந்த குபேரர் போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
    1. அளகாபுரி அரசே போற்றி
    2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
    3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
    4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
    7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
    11. ஓங்கார பக்தனே போற்றி
    12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
    13. கனகராஜனே போற்றி
    14. கனகரத்தினமே போற்றி
    15. காசு மாலை அணிந்தவனே போற்றி
    16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
    17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
    18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    19. குருவாரப் பிரியனே போற்றி
    20. குணம் தரும் குபேரா போற்றி
    21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
    22. கும்பத்தில் உறைபவனே போற்றி
    23. குண்டலம் அணிந்தவனே போற்றி
    24. குபேர லோக நாயகனே போற்றி
    25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
    29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
    30. சங்கரர் தோழனே போற்றி
    31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    32. சமயத்தில் அருள்பவனே போற்றி
    33. சத்திய சொரூபனே போற்றி
    34. சாந்த சொரூபனே போற்றி
    35. சித்ரலேகா பிரியனே போற்றி
    36. சித்ரலேகா மணாளனே போற்றி
    37. சிந்தையில் உறைபவனே போற்றி
    38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
    40. சிவபூஜை பிரியனே போற்றி
    41. சிவ பக்த நாயகனே போற்றி
    42. சிவ மகா பக்தனே போற்றி
    43. சுந்தரர் பிரியனே போற்றி
    44. சுந்தர நாயகனே போற்றி
    45. சூர்பனகா சகோதரனே போற்றி
    46. செந்தாமரைப் பிரியனே போற்றி
    47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
    50. சொக்கநாதர் பிரியனே போற்றி
    51. சௌந்தர்ய ராஜனே போற்றி
    52. ஞான குபேரனே போற்றி
    53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    56. திருவிழி அழகனே போற்றி
    57. திருவுரு அழகனே போற்றி
    58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
    59. திருநீறு அணிபவனே போற்றி
    60. தீயவை அகற்றுவாய் போற்றி
    61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    62. தூயமனம் படைத்தவனே போற்றி
    63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    64. தேவராஜனே போற்றி
    65. பதுமநிதி பெற்றவனே போற்றி
    66. பரவச நாயகனே போற்றி
    67. பச்சை நிறப் பிரியனே போற்றி
    68. பவுர்ணமி நாயகனே போற்றி
    69. புண்ணிய ஆத்மனே போற்றி
    70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
    71. புண்ணிய புத்திரனே போற்றி
    72. பொன்னிற முடையோனே போற்றி
    73. பொன் நகை அணிபவனே போற்றி
    74. புன்னகை அரசே போற்றி
    75. பொறுமை கொடுப்பவனே போற்றி
    76. போகம்பல அளிப்பவனே போற்றி
    77. மங்கல முடையோனே போற்றி
    78. மங்களம் அளிப்பவனே போற்றி
    79. மங்களத்தில் உறைவாய் போற்றி
    80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    81. முத்து மாலை அணிபவனே போற்றி
    82. மோகன நாயகனே போற்றி
    83. வறுமை தீர்ப்பவனே போற்றி
    84. வரம் பல அருள்பவனே போற்றி
    85. விஜயம் தரும் விவேகனே போற்றி
    86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
    87. வைர மாலை அணிபவனே போற்றி
    88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    89. நடராஜர் பிரியனே போற்றி
    90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
    91. நவரத்தினப் பிரியனே போற்றி
    92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    95. ராவணன் சோதரனே போற்றி
    96. வடதிசை அதிபதியே போற்றி
    97. ரிஷி புத்திரனே போற்றி
    98. ருத்திரப் பிரியனே போற்றி
    99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
    100. வெண்குதிரை வாகனனே போற்றி
    101. கைலாயப் பிரியனே போற்றி
    102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
    104. மாட்சிப் பொருளோனே போற்றி
    105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    106. யௌவன நாயகனே போற்றி
    107. வல்லமை பெற்றவனே போற்றி
    108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    108 குபேரா போற்றி போற்றி
    வறுமை, துன்பம், எதிரிகளின் தொல்லை, தொழிலில் நஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த ஸ்லோகம் தினமும் சொல்லி வந்தால் பலன் நிச்சயம்.
    1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
    ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே -ஓம் நமோ

    2. பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு பல
    பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே -ஓம் நமோ

    3. மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
    மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

    4. மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
    முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா -ஓம் நமோ

    5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
    பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே -ஓம் நமோ

    6. சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
    சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே -ஓம் நமோ

    7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
    அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே -ஓம் நமோ

    8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
    பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா -ஓம் நமோ

    9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
    மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

    10. அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
    அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே -ஓம் நமோ

    11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க
    வேண்டி கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே -ஓம் நமோ

    12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு
    கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா -ஓம் நமோ

    13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர குருவாயூரில்
    கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே -ஓம் நமோ

    14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
    அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே -ஓம் நமோ

    15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாடவைத்து
    பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே -ஓம் நமோ

    16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன் என்று
    நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே -ஓம் நமோ

    17. நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம் செய்வேனென்று
    நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே -ஓம் நமோ

    18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
    பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே -ஓம் நமோ
    சுப்ரமணியருக்கு உகந்த இந்தத் துதியை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் பாராயணம் செய்து வந்தால், செல்வ வளமும், உடல் நலமும் மேலோங்கும்.
    சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே
    சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
    பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே
    ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்

    - சுப்ரமணிய மங்களாஷ்டகம்

    பொருள்: பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமணிய பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம்.
    செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் கீழே கொடுக்கப்பட்டள்ள இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம்.
    “ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம
    லட்ணம் பாணிஜை;
    அவ்யாத் த்ரீணிகனநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ;
    யத்ப்ரா துர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸீர க்ருஹ
    ஸ்த்தூணா பிதா மஹ்யபூத்”

    இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து வரலாம். செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும்.
    ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ்டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பொதுவாக ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது என்பதும், ராகு கேது திசையினால் துன்பம் வருகிறது என்பதும் வேறு வேறு நிகழ்வுகள் ஆகும். ஒரு ஜாதகத்தில் தோஷம் நீக்குவதற்கு திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.  

    ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ்டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். சர்ப்ப திசையானது பாதிப்புகளை செய்யுமானால் விபத்து, மரண பயம், புத்தி பேதலிப்பு, சர்ம வியாதிகள், ஆறாத புண்கள், கட்டிகள், கோர்ட், கேஸ் வழக்குகள் போன்றவை ஏற்படும்.
     
    கருடன் காயத்ரி மந்திரம் :

    ஓம் பகூ ராஜாய வித்மஹே
    ஸுபர்ண பகூய தீமஹி
    தன்னோ கருடப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தை 11 தடவை உச்சரிக்கவும்.



    கருடன் மூலமந்திரம் :

    ஒம் ஈம் ஓம் நமோ பகவதே மஹா கருடாய
    பகூராஜாய விஷ;ணு வல்லபாய த்ரைலோக்ய பரிபூஜிதா
    உக்ர பயங்கர காலாநலரூபாய வஜ்ர நகாய வஜரதுண்டாய
    வஜ்ர தந்தர்ய வஜரதம்ஷ;ட்ராய வஜ்ரபுச்சாய ஸகல
    நாகதோஷ ரகூயாய ஸர்வ விஷம் நாசய நாசய ஹந
    ஹந தஹ தஹ பச பச பஸ்மீ குரு பஸ்மீ குரு
    ஹீம்பட் சுவாஹா.     

    இந்த மந்திரத்தை 54 தடவை உச்சரிக்கவும்.

    1. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
    2. வெண்பட்டு தர்ப்பைபாய் பலா பலகையில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
    3. விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    மந்திரம் சித்தி பெறும் காலம் வரையில் தலையில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் பலன் கொடுக்கும்.
    சித்ரா பவுர்ணமியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி பூஜை செய்து வந்தால் நாம் செய்த தவறுகளை சித்ரகுப்தர் மன்னித்து அருள் புரிவார்.
    சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

    சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
    சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

    என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
    வேண்டுதல்கள் நிறைவேற தினமும் நரசிம்மருக்கு உகந்த இந்த மஹா மந்திரத்தை சொல்லி வந்தால் விருப்பங்கள் நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
    ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
    ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
    நரசிம்மம் பீஷணம் பத்ரம்
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
    உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற காமாட்சி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
    ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
    மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
    காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!

    - மூக பஞ்சசதி

    பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்களின் கண்களின் நிகரற்ற கருப்பு நிறமான சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போல உள்ளது. அந்த உன் கருணை கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.
    கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக தினமும் அகோர மூர்த்தி ஸ்துதியை 21 முறை சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.
    தடைகளைப் போக்கி வெற்றி, நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோர மூர்த்தி. மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண் காட்டில் இப்பெருமானை தரிசிக்கலாம். கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் இத்துதியைச் சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.

    ஸகல கன ஸமாபம்
    பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
    புஜகதரம கோரம்
    ரக்த வஸ்த்ராங்க தாரம்
    பரசு டமரு கட்கம்
    கேடகம் பாணச்சாயை
    திரிசிகநர கபாலை
    விப்ரதாம் பாவயாமி
    வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    தீபஜ்யோதி பரம் பிரம்ம
    தீபஜ்யோதிர் ஜனார்த்தன
    தீபோஹரது மே பாபம்
    சந்த்யாதீப நமோஸ்துதே
    சுபம் கரோது கல்யாணம்
    ஆரோக்யம் சுகசம்பதம்
    மம புத்தி ப்ரகாசாய
    தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
    ×