என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.
விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம். சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.
ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது.
வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.
பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-
1)முல்லை-அறம்,2)கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், 3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும், 4) அறுகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும், 5) இலந்தை - கல்வி, 6) ஊமத்தை - பெருந்தன்மை, 7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள், 8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு, 9) கண்டங்கத்திரி - வீரம், 10) அரளி-வெற்றி. 11) எருக்கம் இலை- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு, 12) மருதம் - குழந்தை பேறு, 13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு, 14) மாதுளை-பெரும்புகழ், 15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம், 16) மருவு - இல்லற சுகம், 17) அரசு - உயர் பதவி, மதிப்பு, 18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை - செல்வச்செழிப்பு, 20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை, 21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்.
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மரிக்கொழுந்து, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும். பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான். ஆனால் தாழம்பூ, துளசி ஆகியவை மட்டுமே கண்டிப்பாகக்கூடாது. பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள். என்றாலும் இது தவறாகும்.
விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்பின் வருவனவற்றைப் படைக்கலாம். அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை. விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.

சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடிய போது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருவம் கொண்டு அமைந்தது.
அதை அன்னை கங்கையில் எரிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார்.
அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனர்.
இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள்.

இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
மற்றொரு வரலாறு :
விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.
மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு, களிமண்ணை கரைத்தால், அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கணித்தனர். அதனால்தான் விநாயகர் சிலை வைத்து, அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போனதும் அதைக் கொண்டு போய் ஆறுகளில் கரைத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியன்று கணபதிக்கும் 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறாக அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:-
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
7. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
8. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
9. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
10. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
11. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
12. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
12. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
13. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
14. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
15. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
16. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
17. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது. இந்த அவதாரங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது.
வக்ரதுண்ட விநாயகர்: இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
கஜானன விநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரன ராஜர்: காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.
மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
உபமயூரேசர்: சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
பாலச்சந்திரர்: தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
சிந்தாமணி: கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
கணேசர்: பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
கணபதி: கஜமுகாசுரனை வென்றவர்.
மகோற்கடர்: காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்துவந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி: துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
வல்லபை விநாயகர்: மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.

விநாயகருக்கு என்னென்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வது போல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.
பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.
பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.
மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.
தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.
கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.
சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெறும். மனத்திற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.
சொர்ண அபிஷேகம்: நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தால்: கௌரவம் காக்கப்படும்.
எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.
மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொருங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.

நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய விநாயகர் 108 போற்றியை கீழே பார்க்கலாம். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) சொல்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர். தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.
வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர். குடைவரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது. இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.
கால்களை மடக்கியநிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டுவீற்றிருக்கிறார். உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.
இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது. தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.

பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான். அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:-
பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான். அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள். இந்த பஞ்சபூதங்ணீகளை நம்முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.
அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:-
நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்
காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்.

ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.
மூஞ்சூறுஇறைவனின் திருவடியை சரணடைந்தால், அவன் அருகிலேயே இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.
சிறிய கண்
எதையும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.
பெரிய தலை
நிறைய சிந்திக்க வேண்டும். நல்லனவற்றையே சிந்தனை செய்ய வேண்டும்.
பெரிய காது
ஆன்றோர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை அதிகமாக கேட்க வேண்டும்.
வாய்
தும்பிக்கைக்கு அடியில் மறைந்திருக்கும் வாய், குறைவாக பேச வலியுறுத்துகிறது.
அங்குசம்
ஆசைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கோடரி
பாச பந்தங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.
தந்தம்
இது எழுத்தாணியோடு ஒப்பிடப்படுகிறது. விநாயகர் எழுதிய மகாபாரதம் போன்ற தர்ம நூல்களை எழுத வேண்டும்.
அபயகரம்
நல்வழியில் நடப்பதன் மூலம் இறைவனின் ஆசி கிடைக்கும்.
தும்பிக்கை
எடுத்த காரியத்தில் இலக்கை அடைய உறுதிகொள்ள வேண்டும்
மோதகம்- லட்டு
விநாயகரை வேண்டினால் இனிப்பான செய்திகள் வந்து சேரும்.
பெரிய வயிறு
பானை வயிறு, இந்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடப்படுகிறது. உலமே எனக்குள் அடக்கம் என்பதை சொல்கிறது.

என்ன தான் கடின உழைப்பு மேற்கொண்டாலும் வீட்டில் கடன் பிரச்சனை, கஷ்டங்கள், வீண் வழக்குகள் சந்திக்க நேரிடுகிறதா… அப்படி என்றால் அது வாஸ்து குறைபாடு காரணமாகவும் இருக்கலாம்.
வீட்டின் வடக்கு பகுதியில் தடைகள் இருப்பது வீட்டில் கடன் பிரச்னையை ஏற்படுத்தும். வடக்கு திசையில் காற்று உள்ளே வருவதற்கு தடை அல்லது மிக சிறிய அளவில் வழி ஏற்படுத்துவது வாஸ்து பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
வடக்கு பகுதியில் கற்கள், செங்கல், குப்பைகள், பழைய பொருட்கள் என எதையும் போட்டு வைக்க வேண்டாம். இது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், கடன் பிரச்னைகளில் சிக்க வைத்துவிடும்.
மாடி வீடு கட்டும்போது வடக்கு பகுதியில் முழுவதும் கட்டுமானத்தை ஏற்படுத்திவிட்டு, தெற்கு பகுதியில் திறந்த வெளியாக விடுவதும் குடும்பத்தில் கடன் பிரச்னைக்கு வழிவகுக்கும்.
வீட்டின் ஓவர் டேங்க் (தண்ணீர் தொட்டி) தென் மேற்கு திசையில் அமைப்பதும் கடன் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். இவற்றை சரி செய்வதன் மூலம் கடன் பிரச்னையில் இருந்து தீர்வு காணலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வீண் வழக்கு பிரச்னை, சட்ட ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது என்றால் வட கிழக்குப் பகுதியில் பிரச்னை இருக்கலாம். குறிப்பாக தொழில் நிறுவனங்கள் ஒரு பிரச்னை முடிந்தால் அடுத்து ஒரு பிரச்னை வந்து துவண்டுவிடுகின்றன. இதை சரி செய்ய வடகிழக்கு பகுதியில் வெப்பத்தை ஏற்படுத்தும் உபகரணங்களை வைக்க வேண்டும்.
வட கிழக்கு என்பது அக்னி பகவானுக்கு உரிய இடம் ஆகும். அந்த இடத்தில் தண்ணீர் தொட்டி, ஆழ் துளை கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது. அது நெருப்புக்கு உகந்தது இல்லை.
எல்லாம் சரியாக இருந்தும் கடன் பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்துவும் முக்கிய காரணமாக இருக்கலாம். தெற்கு பகுதியை மேடாக்க அல்லது உயரமாக மாற்றுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். தென் பகுதி சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரித்தால் கூட போதுமானது. தெற்கு திசையில் கட்டப்படும் அறைகள் வடக்கு திசையைக் விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
மழை நீர் வடக்கு திசை நோக்கி பாய்ந்து வெளியேறுவது வீட்டுக்கு செல்வச் செழிப்பைத் தரும். வடக்கு பகுதியில் திறந்த வெளி இருப்பது நல்ல செழிப்பைத் தரும்.
தெற்கு பகுதியில் மிகக் குறைந்த அளவில் இடத்தை விட்டும், வடக்கு பகுதியில் அதிக இடத்தை விட்டும் கட்டுமானத்தை மேற்கொள்வது நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்யும்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிள்ளையார்பட்டி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில், பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா எளிமையாக நடைபெற்றது.
இதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6-ம் திருவிழா அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு 9-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நாளை(வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நாளை விநாயகர் சதுர்த்தி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு பிள்ளையார்பட்டி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை பிள்ளையார்பட்டி கோவில் யூடியூப் சேனல் வழியாக பக்தர்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த சத்தியப்பிரமாணம் இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது. அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது. ஒருவர் பார்வையற்றவர். முன்றாம்வரால் கேட்க இயலாது. கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்ற வரும், பார்வையற்றவரும் ஏற்றக் காலில் ஏறி நின்று மிதிக்க ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.
வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைப்பார்த்த அவர் பயந்து ஐயோ என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர் ஆமாம்.
செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார். கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர். உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி வழிந்த இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.
மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம். அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.
ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த சத்தியப்பிரமாணம் இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார். இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம். சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை. இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பி வழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.
நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப் பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்! விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு(12) கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.