search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?
    X
    விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

    விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

    சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடிய போது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருவம் கொண்டு அமைந்தது.

    அதை அன்னை கங்கையில் எரிய பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார்.

    அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனர்.

    இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள்.

    இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    மற்றொரு வரலாறு :

    விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.

    ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.

    மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு, களிமண்ணை கரைத்தால், அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கணித்தனர். அதனால்தான் விநாயகர் சிலை வைத்து, அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போனதும் அதைக் கொண்டு போய் ஆறுகளில் கரைத்துள்ளனர்.

    Next Story
    ×