என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    விநாயகர் சதுர்த்தியன்று 21 வகை இலை அர்ச்சனை

    விநாயகர் சதுர்த்தியன்று கணபதிக்கும் 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறாக அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:-
    விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-

    1. முல்லை இலை: அறம் வளரும்
    2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
    3. வில்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
    4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
    6. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
    7. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
    8. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
    9. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
    10. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
    11. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
    12. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
    12. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
    13. மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
    14. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
    15. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
    16. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
    17. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    Next Story
    ×