என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது. நல்ல பழக்க வழக்கங்களுடனும், இறைவனின் அருளுடனும் அதை எதிர்கொள்வோம்.
    எங்கள் வீட்டின் அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் அவ்வப்போது நண்பர்கள் நாங்கள் கூடி பேசுவதுண்டு. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விஷயத்தை பற்றிப்பேசுவோம். ஒரு நாள் அரசியல் பற்றிய கருத்துக்கள் தீ போல பரிமாறப்படும். இன்னொரு நாள் அது நாங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை தேடும் களமாக அமையும். வேறு சில நாள் பிடிக்காத ஒரு நபரை பற்றிய பேச்சாக இருக்கும் அது.

    அப்படியிருக்க ஒரு நாள் நண்பர் ஒருவர் டீக்கடையில் சோகத்துடன் காணப்பட்டார்.

    ‘என்ன ஆச்சு உனக்கு, எப்போதும் சிரித்துக்கொண்டே கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பாயே’ என்றேன்.

    ‘ஒன்னும் இல்லடா மச்சான், ஒரு கெட்டப்பழக்கம், அதான் யோசிச்சிட்டிருந்தேன்’.

    ‘என்னடா அது, அப்படி என்ன பண்ணிட்டே நீ’ என்றேன்.

    ‘புகை பழக்கத்தை விட முடியலடா’ என்றான்.

    அவன் சொல்லி முடிக்கவும் இன்னொருவன், ‘எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தினமும் முகநூல் மற்றும் வாட்சப்பில் யாரையாவது வம்பிழுக்காமல் தூக்கம் வராது’ என்றான்.

    மற்றொருவன், ‘என்னோட கெட்ட பழக்கம் என்னண்ணா, என் கொள்கைக்கு எதிராக இருக்கும் யாரையாவது எப்போதும் தவறாக நினைத்து வெறுப்பை வளர்த்துகொண்டு பிரச்சினை கொடுத்துகொண்டேயிருப்பேன்’ என்றான்.

    இந்த பட்டியல் விரிவடைந்து கொண்டே இருந்தது. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அது தவறு என்று தெரிந்தும் விடுபட வழி தெரியவில்லை. அது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு தேட வேறு எங்கும் சென்று புலன்விசாரணை மேற்கொள்ளவேண்டியதில்லை, ஏனென்றால் பிரச்சினையே அவர்கள் தான். அவர்களுடைய அணுகுமுறையில் தான் மாற்றம் வேண்டும்.

    ‘தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப்பட்டணம்’ என்று வேதம் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:28)

    சிம்சோன் ஒரு மாவீரனாக இருந்தும் சிற்றின்ப மோகத்தில் வீழ்ந்து வசீகரமான பெண்களிடம் எல்லாம் மனதை பறி கொடுத்தார். அவர் தன்னை நோக்கி சீறி பாய்ந்து வந்த சிங்கத்தை சாதாரணமாக கையால் அடித்து கொல்லும் அளவுக்கு அவர் வலிமை பெற்றிருந்தார்.

    ஆனால் தனது மனதுக்குள் சீறிப்பாய்ந்து திரிந்த சிற்றின்பச் சிங்கத்தைக் கொல்லும் வலிமை அவரிடம் இருக்கவில்லை. அதனால் அவருடைய வாழ்க்கை மிக துயரமான ஒரு முடிவை சந்திக்கிறது.

    ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். இச்சையானது பாவத்தை பிறப்பிக்கும், பாவம் மரணத்தை பிறப்பிக்கும்’ என்று யாக்கோபு நிருபத்தில் படிக்கிறோம்.

    பெரும்பாலானோர் தங்களின் தீய செயல்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று சப்பைகட்டு கட்டுவார்கள். இல்லையென்றால் எல்லோரும் செய்யும் தவறு தானே என நினைப்பதுண்டு.

    நம் பிரச்சினையை நாம் அடையாளம் கண்டுகொள்வது தன்னடக்கத்துக்கான முதல்படி. அது நமக்கு தீங்கானது என்று புரிந்து கொண்டால் நாம் இறைவனின் உதவியை நாடி தீர்வு காணலாம்.

    ஆன்மிக வாழ்க்கையில் வளர வேண்டுமெனில் பழைய தீய பழக்கங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. எப்படி நாம் நம் வெளிப்படையான அழுக்கை போக்க தினமும் குளிக்கிறோமோ, அதைப் போல மனதில் உள்ள தீமையான காரியங்களை களைய தினமும் முயல வேண்டும்.

    ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி தொடர்கிறேன்’ என்ற வேதவசனத்தின் படி வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும்.

    ‘தீய பழக்கத்திலிருந்து விடுதலைபெற என்னால் முடியும்’ எனும் நம்பிக்கை முதலாவது தேவை. ‘என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு’ என்ற வசனத்தின் படி கடவுளின் உதவியுடன் நாம் தன்னடக்கம் உடையவராக மாற முடியும்.

    வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்தவர்கள் ஆனாலும் சில பாவங்களை விட்டுவிடுதல் அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. அதுவே அவர்களுக்கு தோல்வியை தேடித்தரும்.

    ஆதலால் எச்சரிக்கையாய் இருங்கள். தவறுகளை தூண்டும் இடத்தில் இருக்காதீர்கள். சில இடங்களுக்கு செல்லும் போது சில தீய காரியங்கள் செய்ய தோன்றும், அப்படிப்பட்ட இடத்தை தவிர்த்தல் நல்லது.

    எபேசியர் 4:27-ன்படி ‘பிசாசுக்கு இடம்கொடாமல் இருங்கள்’.

    நீங்கள் எந்த பழக்கத்தை விட்டு விட நினைக்கிறீர்களோ அது புகைபிடித்தல், குடிப்பழக்கம், புறம்பேசுதல், தீய எண்ணம், சிற்றின்ப மோகம், கோபம், பொறாமை என்று எதுவாக இருந்தாலும் கடவுளை நாடுங்கள். அவர் உங்களுக்கு விடுதலை தர வல்லவராயிருக்கிறார்.

    அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட, உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடுவது சிறந்தது. வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது. நல்ல பழக்க வழக்கங்களுடனும், இறைவனின் அருளுடனும் அதை எதிர்கொள்வோம்.

    துலீப் தாமஸ், சென்னை.
    செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூர்கிறார்’ என்பது பொருள். செக்கரியா இறைவாக்கினர், சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகின்ற ஒரு நபர்.
    செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூர்கிறார்’ என்பது பொருள். செக்கரியா இறைவாக்கினர், சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகின்ற ஒரு நபர். இந்த நூல் 14 அதிகாரங்களையும், 211 வசனங்களையும், 6444 வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது. இந்த நூல் கி.மு. 480-க்கும், 470-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.

    செக்கரியா என்பது அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பெயர்களில் ஒன்று. இந்த இறைவாக்கினர், குருத்துவ வழி மரபில் வந்தவர். பாபிலோனில் இருந்து யூதேயா விற்கு வந்த முதல் கூட்டமான 50 ஆயிரம் பேரில் ஒருவராக இருந்தவர். முதல் கூட்டத்தினரில் 15 பேருக்கு 2 பேர் குருக்களாகவே இருந்தார்கள். காரணம் அவர்களுடைய நோக்கம் எருசலேமுக்கு வந்ததும் இறைவனின் ஆலயத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதாக இருந்தது.

    கி.மு. 520-ம் ஆண்டில் இறைவாக்கு உரைப்பதற்காக இறைவனால் அழைக்கப்பட்டவர். இவர் ஆலயத்துக்கும் பலிபீடத்துக் கும் இடையே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை “திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் ெசக்கரியாவின் ரத்தம் வரை” (மத்தேயு 23:25) எனும் விவிலிய வாசகம் நமக்கு விளக்குகிறது.

    ஆகாய் இறைவாக்கினர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இவர். இருவருமே சம காலத்தில் இறைவாக்கு உரைத்தார்கள். ஆனால் ஆகாய் இறைவாக்கினருக்குப் பின்பும் இவருடைய இறைவாக்குரைக்கும் பணி தொடர்ந்தது. இருவருமே தங்களது இறைவாக்கின் காலத்தைக் கவனமாய்ப் பதிவு செய்து வைத்துள்ளனர். இருவருமே எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டியெழுப்பப் படவேண்டுமென எருசலேமிலிருந்து இறைவாக்குரைத்தவர்கள். ஆகாய் இறைவாக்கினரின் பணி ஒரே ஒரு மாதத்தோடு முடிவடைய, செக்கரியாவின் பணியோ நீண்ட காலம் தொடர்ந்தது.

    இந்த நூலை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் எட்டு அதிகாரங்களும் யூதாவுக்குத் திரும்பிய இஸ்ரேல் மக்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆலயத்தைத் திரும்பக் கட்டும் மக்களை செக்கரியா உற்சாகமூட்டுகிறார். கடைசி ஆறு அதிகாரங்களும் எதிர்கால தீர்க்க தரி சனங்களாகவும், மெசியாவின் வருகையை முன்மொழியும் இறைவாக்குகளாகவும் அமைந்திருக்கின்றன.

    இந்த நூலில் அமைந்துள்ள எட்டு காட்சிகள் மிக முக்கியமானவை. கடவுளே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகள் அழியும், இஸ்ரேல் மீண்டும் கட்டியெழுப்பப்படும், இஸ்ரேல் ஒரு புனித குருத்துவ தேசமாய் மாறும், இஸ்ரேல் வலிமையான தலைமையின் கீழ் அமையும், கட்டளையை மீறுபவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள், பாவமான அமைப்பு முழுமையாய் விலக்கப்படும், உலகில் நடக்கும் செயல்கள் அனைத்தையும் கடவுளே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். போன்றவையே அந்த எட்டு காட்சிகள் சொல்லும் செய்திகள்.

    செக்கரியாவின் நூல் கவிதைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. புரிந்து கொள்வதற்கு சற்றுக் கடினமாகவும், குறியீடுகளாலும் காட்சிகளாலும் இவருடைய நூல் அமைந்துள்ளது. பிற்காலத்தில் நிகழும் விஷயங்களை ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே அவர் கூறியிருந்தார். கொஞ்சம் தானியேல், கொஞ்சம் எசேக்கியேல், கொஞ்சம் திருவெளிப்பாடு என பல நூல்களின் சில குணாதிசயங்களை இந்த நூலில் காணலாம்.

    இறைவாக்கினர்களுக்கு பதிலாக குருக்களே இனி கோலோச்சுவார்கள். அவர்களே தலைவர்களாக இருப்பார்கள் எனும் சிந்தனையும், குருக்களே அரசர்களைப் போல ஆள்வார்கள் எனும் சிந்தனையும் இவருடைய நூலில் காணலாம். செக்கரியா வெள்ளியாலும் பொன்னாலும் ஒரு கிரீடம் செய்து அதை யோசுவாவின் தலையில் சூட்டுகிறார். மன்னராகவும், குருவாகவும் பழைய ஏற்பாட்டில் மெல்கிசெதேக்குப் பிறகு சித்தரிக்கப்பட்டவர் இவர் தான்.

    இந்த இறைவாக்கின் காலத்துக்குப் பின் நானூறு ஆண்டுகள் இறைவனின் வார்த்தை மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதன்பின் திருமுழுக்கு யோவான் வருகிறார். அவருடன் மனித வடிவ வார்த்தையாக இறைமகன் இயேசுவும் வருகிறார். இயேசு அரசவையின் அரசராக இல்லாமல், மெல்கிசெதேக்கின் முறைப்படி குருவாகவும், இறையரசை நிறுவும் அரசராகவும் வருகிறார். இப்படி இந்த இறைவாக்குகள் மீட்பை நோக்கி நீட்சியடைகின்றன.

    இரண்டாயிரம் ஆண்டைய ஆபிரகாம் முதல் இயேசு வரையிலான இஸ்ரேலர்களின் வாழ்க்கையை நான்காகப் பிரித்தால் முதல் ஐநூறு ஆண்டுகள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பின் ஆட்சிக்காலம். அடுத்த ஐநூறு ஆண்டுகள் இறைவாக்கினர்களின் ஆட்சிக்காலம். அதன் பிறகு ஐநூறு ஆண்டுகள் அரசர்களின் ஆட்சிக்காலம். அதன் பின் இயேசுவின் வருகை வரையிலான ஐநூறு ஆண்டு காலம் குருக்களின் ஆட்சிக்காலம் என அமைகிறது.

    அவருடைய நூலின் இரண்டாவது காலமான எதிர்கால தீர்க்கதரிசனங்கள் மிகவும் சிக்கலானவையாக அமைந்துள்ளன. இவை எதுவும் வரிசையாக அமையாமல் புதிர்களின் குவியலாக அமைந்துள்ளது. இறுதிக்காலத்தின் ரகசியங்களை புதைத்து வைத்தவையாகவும் அமைகிறது.

    “மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம், ஆர்ப்பரி. இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்” என அவர் இயேசுவைக் குறித்து எழுதியுள்ளது மிகப்பிரபலம்.

    தவற விடாமல் வாசிக்க வேண்டிய இறைவாக்கு நூல்களின் பட்டியலில் செக்கரியாவுக்கு தனி இடம் உண்டு.

    சேவியர்
    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாள் காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் சதீஷ் மகிழன் தலைமையில் சிறப்பு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறை தோட்டம் மந்திரிப்பு, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கார்மல் நகர் பங்குபணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் அருட்பணியாளர் மரியதாசன் திருவிழாவை கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து அன்பு விருந்து, 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    வருகிற 1-ந் தேதி இரவு 8.30 மணிக்கு தங்கத்தேர் பவனி, 5-ந்தேதி காலை 7 மணிக்கு மேல்பாலை பங்கு பணியாளர் ஐசக்ராஜ் முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 9.30 மணிக்கு தேர்பவனி, வருகிற 6-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி பெருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குபணியாளர் சகாயஜஸ்டஸ், இணை பங்கு பணியாளர் வெலிங்டன், அருட்பணியாளர் பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    திருச்சி ஆலம்தெரு செல்வநாயகிபுரத்தில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய புதிய கொடிமரம் அர்ச்சிப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
    திருச்சி ஆலம்தெரு செல்வநாயகிபுரத்தில் அமைந்துள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலய புதிய கொடிமரம் அர்ச்சிப்பு விழா கடந்த 14-ந் தேதி நடந்தது பின்னர் புதிய கொடிமரம் புனிதம் செய்யப்பட்டு, திருவுருவ கொடியை அருட்தந்தையர்கள் கொடிமரத்தில் ஏற்றினார்கள். அதன்பிறகு ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றினார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் அலங்கார தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலம்தெரு, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(திங்கட்கிழமை) மாலை திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் 127-வது குடும்பவிழா நேற்று தொடங்கியது. விழா 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை நடைபெற்றது. மங்கலகுன்று பங்குத்தந்தை பிரான்சிஸ் வின்சென்ட் தலைமையில், இனயம் பங்குத்தந்தை அன்பரசன் கொடி ஏற்றி வைத்தார். இதில் பங்குமக்கள் மற்றும் ஊர்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கொடியேற்றத்துக்கு பிறகு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இன்று(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு செபமாலை, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை மற்றும் திருப்பலி நடக்கிறது.

    22-ந் தேதி காலை 7 மணிக்கு புனித ஜெரோம் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் சுவக்கின் தலைமையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு குலசேகரம்புதூர் பங்குத்தந்தை தலைமையில் நற்கருணை பவனி, இரவு 8 மணிக்கு மன்ற ஆண்டுவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வரும் விழா நாட்களில், காலை திருப்பலி, மாலை செபமாலை, புகழ்மாலை, இரவு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து, இரவு 7 மணிக்கு செபமாலை, புகழ்மாலை மற்றும் மாலை ஆராதனை. 8 மணிக்கு அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

    29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா திருப்பலி, 10.30 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்தை தொடர்ந்து நற்கருணை ஆசீர், 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் வின்சென்ட், பங்குமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஜோசப் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இரவு 7 மணிக்கு கீழக்காட்டுவிளை அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    சரல் அருட்பணியாளர் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றினார். இரவு 9.30 மணிக்கு மறைமாவட்ட அன்பிய இயக்குனர் வலேரியன் தலைமையில் அன்பிய ஒருங்கிணைய ஆண்டுவிழா, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    28-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு ஆண்டுவிழா நடக்கிறது. 
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி பிரான்சிஸ் எம்.வின்சென்ட் தலைமை தாங்குகிறார். அன்பரசன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் திருப்பலி, செபமாலை, புகழ்மாலை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

    21-ந் தேதி அருட்பணி பிரான்சிஸ் சேவியர் தலைமையில் ஆன்றனி ரோசாரியோ மறையுரையாற்றுகிறார். 22-ந் தேதி அருட்பணி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 23-ந் தேதி அருட்பணி மனோகியம் சேவியர் தலைமையில் ஜோசப் ஜெயில் சிங் மறையுரையாற்றுகிறார்.

    28-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்தில், அருட்பணி வலேரியன் தலைமையில் விஜய ராஜன் பாபு மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு செபமாலை, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி டி.போரஸ் தலைமையில் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு தேர்ப்பவனி, நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
    நாகர்கோவில்,வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில், வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6.30 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு அருட்பணி ஜோசப் தலைமை தாங்குகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணி தேவதாஸ் தலைமையில் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றுகிறார்.

    மேலும் விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் 21-ந் தேதி அருட்பணி அருள் தலைமையில் சார்லஸ் மறையுரையாற்றுகிறார்.

    22-ந்தேதி காலை 7 மணிக்கு அருட்பணி மைக்கல் ஏஞ்சலுஸ் தலைமையில் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். 23-ந் தேதி அருட்பணி சேவியர் ராஜா தலைமையில் அந்தோணியப்பன் மறையுரையாற்றுகிறார்.

    28-ந் தேதி அருட்பணி ஜோசப் ராஜ் தலைமையில் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆராதனையில், அருட்பணி கிளாரியுஸ் தலைமையில் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, அருட்பணி ஜாண்சன் தலைமையில் கபிரியேல் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு சிறுசேமிப்பு ஆண்டுவிழா மற்றும் பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் வலேரியன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 22-ந் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்திருவிருந்து வழங்கப்படும். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கிள் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
    சோமரசம்பேட்டை எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனியை முன்னிட்டு தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக சென்று அருள்பாலித்து விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
    சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனி விழாவை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி மாலை சோமரசம்பேட்டை திருச்சிலுவை இல்ல அலெக்சாண்டர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    14-ந்தேதி மாலை நவநாள் திருப்பலியும் அதனை தொடர்ந்து இனியானூர் அருள்ராஜ் உரையும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எட்டரையின் முக்கிய வீதியின் வழியாக சென்று அருள்பாலித்து விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பின் திருவிழா கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை பங்குத் தந்தை எட்வர்ட் ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    ‘ஆகாய்’ என்பதற்கு ‘திருவிழா’ என்பது பொருள். இன்றைய நாள்காட்டிக் கணக்குப் படிப் பார்த்தால் கி.மு. 520-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ல் அவருக்கு கடவுளின் வார்த்தை முதன் முதலில் வருகிறது.
    ஆகாய் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம் வெறும் மூன்று மாதங்கள்.

    ‘ஆகாய்’ என்பதற்கு ‘திருவிழா’ என்பது பொருள். இன்றைய நாள்காட்டிக் கணக்குப் படிப் பார்த்தால் கி.மு. 520-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ல் அவருக்கு கடவுளின் வார்த்தை முதன் முதலில் வருகிறது. அதை அவர் யூதா நாட்டின் ஆளுநராக இருந்த தாவீதின் வழிமரபினரான செரூபாபேலுக்கும், குரு யோசுவாவுக்கும் அறிவிக்கிறார்.

    இஸ்ரேல் நாட்டிலும், யூதாவிலும் இரண்டு காலகட்டங்களில் இறைவாக்குரைக்கும் பணி நடைபெற்றது. ஒன்று மக்கள் தங்களுடைய நாட்டிலேயே இருந்த காலகட்டத்தில் நடந்தது. இன்னொன்று மக்கள் நாட்டை விட்டு எதிரிகளால் துரத்தப்பட்ட பின் நிகழ்ந்தது.

    நாட்டிலேயே மக்கள் தங்கியிருந்த காலகட்டத்தில் இறைவாக்குகள் எல்லாம் எச்சரிக்கைகளாக இருந்தன. “பாவ வழியை விட்டு விலகுங்கள், வேற்று தெய்வங்களை விட்டு விலகுங்கள், கடவுளின் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ளுங்கள், மனம் திரும்புங்கள்” என்பவையே அவற்றின் பொதுவான அம்சங்கள்.

    கடவுளின் கோபம் மக்களை வெளியேற்றிய பின்பு வந்த இறைவாக்கினர்கள் இறைவனின் மீட்பின் செய்தியையும், மீண்டும் அவர்களை கட்டமைக்கும் செய்திகளையும், நம்பிக்கையின் வார்த்தைகளையும் உரைத்தனர்.

    ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்கு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் இறைவனால் கொடுக்கப்பட்டது.

    கி.மு. 538-ல் பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனைக் கைப்பற்றுகிறான். அப்போது யூத மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதியளிக்கிறான். சுமார் எழுபது ஆண்டுகளாக பாபிலோனில் இருந்த யூதர்களில் பெரும்பாலானோர் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை. வெறும் 50 ஆயிரம் பேர் மட்டுமே முதல்கட்டமாக நாடு திரும்பினார்கள்.

    அவர்கள் செரூபாபேல் மற்றும் குரு யோசுவா ஆகியோரின் தலைமையில் மீண்டும் நாடு திரும்புகிறார்கள். பாழடைந்த நிலங்கள், உடைந்து போன மதில்கள், சிதைந்து போன தேவாலயம் என பழமையின் தேசத்துக்குள் அவர்கள் திரும்பி வருகிறார்கள்.

    திரும்பி வந்த அவர்கள் முதலில் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி நன்றி செலுத்துகின்றனர். இனிமேல் கோவிலைக் கட்டவேண்டும், நகரைக் கட்டியெழுப்ப வேண்டும் என சிந்திக்கின்றனர், களமிறங்குகிறார்கள்.

    சாலமோன் மன்னன் கட்டியதைப் போல ஒரு கோவிலைக் கட்டுவது என்பது சற்றும் சாத்தியமற்ற ஒன்று என்பது அவர்களுக்குப் புரிகிறது. எனவே சின்னதாய் ஒரு ஆலயம் கட்ட முடிவெடுக்கிறார்கள். அதுவே மாபெரும் பணியாக மாறிவிடுகிறது.

    பலன் கொடுப்பதை மறந்திருந்த நிலமும், பணப் புழக்கம் இல்லாத சூழலும், எண்ணிக்கையில் குறைவான மக்களும் அவர்களுடைய சிந்தனைக்கு முட்டுக்கட்டை போட்டன.

    இரண்டு வருட கட்டுமானத்தோடு ஆலயம் கைவிடப்படுகிறது. தாங்கள் நாட்டுக்குத் திரும்பியது தவறோ?, பாபிலோனிலேயே தங்கியிருக்க வேண்டுமோ?, கடவுளின் அருட்பார்வை இனிமேல் கிடைக்காதோ? என உடைந்து நொறுங்கினர் மக்கள்.

    அந்த சூழலில் தான் ஆகாய் இறைவாக்கினர் பேசுகிறார். நம்பிக்கையூட்டும் மொழிகளையும், திருக்கோவிலைப் புதுப்பிக்க வேண்டியதன் தேவையையும் அவர் விளக்குகிறார்.

    இறைவனிடமிருந்து பெற்ற இருபத்தாறு வார்த்தைகளை அவர் மக்களுக்கு அறிவிப்பதே இந்த நூலின் கட்டமைப்பு. இந்த நூல் வெறும் 2 அதிகாரங்களும், 38 வசனங்களும், 1131 வார்த்தைகளும் அடங்கிய சுருக்கமான நூல்.

    பைபிளில் இறைவாக்குகள் பெரும்பாலும் கவிதை நடையில் தான் எழுதப்பட்டிருக்கும். காரணம் அவை இறைவனின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள். ஆனால் ஆகாய் இறைவாக்கினரின் வார்த்தைகள் உரைநடை வடிவில் இருப்பது ஒரு வித்தியாசம். ஒருவேளை, ‘இறைவன் உரைத்தவை என்பதை விட, உணர்த்தியவை என்பது’ பொருத்தமாய் இருக்கலாம்.

    இறைவனுக்கும், இறைவனுடைய ஆலயத்துக்கும் நாம் முதன்மையான இடத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காமல் இருக்கும் போது நமது வாழ்க்கை இறைவனின் ஆசீரை இழந்து விடும் என்கிறார் ஆகாய். ஆகாயின் வார்த்தைகளுக்கு மக்கள் சட்டென கீழ்ப்படிகிறார்கள். சில வாரங்களிலேயே ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றனர்.

    இப்போது சாலமோனின் பழைய ஆலயத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த ஆலயம் ரொம்ப சின்னதாய் தெரிகிறது. அவர்கள் சோர்ந்து விடுகின்றனர். அவர்களை ஆகாய் ஊக்கப்படுத்துகிறார். ஆலயமே இல்லாமல் இருப்பதை விட, ஆலயம் சிறிதாய் இருப்பது மேலானது என உற்சாகப்படுத்துகிறார். கடவுளின் அருள் கூடவே இருக்கிறது என ஊர்ஜிதப்படுத்துகிறார்.

    இறைவனே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எனும் அதிகபட்ச நம்பிக்கையை மக்களிடையே விதைக்கிறார். அசுத்தங்களை விலக்கி மக்கள் இறைபணியில் ஈடுபடவேண்டும் எனும் இறைவனின் சிந்தனையை மக்களிடம் விதைக்கிறார். செரூபாபேலின் அரசு அமையும் என வியப்பான ஒரு தீர்க்கதரிசனத்தையும் கொடுக்கிறார்.

    செரூபாபேல் உண்மையில் அரசராகவில்லை. எனில், இறைவார்த்தை பொய்க்கவில்லை. இறைமகன் இயேசு அவரது வம்சாவழியில் வருவார் என்பதையே அந்த இறைவார்த்தை மறைவாய் உணர்த்தியது.

    “இறைவனுக்கு ஏற்புடையவைகளையே முதலில் செய்ய வேண்டும், அனைத்தையும் தூய்மையாய்ச் செய்ய வேண்டும்” எனும் இரண்டு முக்கிய சிந்தனைகளை ஆகாய் நூலிலிருந்து படிப்பினைகளாய் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

    சேவியர்
    சிலுவை என்பது ஒரு தண்டனையுடன் தொடர்பு கொண்ட கருவியாகத்தன் பெர்சியா( தற்போதைய ஈரான் ) கீழை நாடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
    சிலுவை என்பது ஒரு தண்டனையுடன் தொடர்பு கொண்ட கருவியாகத்தன் பெர்சியா( தற்போதைய ஈரான் ) கீழை நாடுகளில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ரோம் போன்ற மேலை நாடுகளுக்கு இத்தண்டனைப் படிப்படியாக பரவியது. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், கொள்ளையர்கள் போன்ற கொடுங்குற்றவாளிகளுக்கு மட்டுமே அதுவும் அடிமைகளுக்கு மட்டுமே இத்தண்டனை வழங்கப்பட்து. ரோம குடியுரிமை பெற்றவர்களுக்கு அவர்கள் எவ்வித குற்றம் செய்திருந்தாலும் இந்த சிலுவை தண்டனை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களிடையே இந்த சிலுவை தண்டனை வழக்கில் இல்லவே இல்லை.

    சிலுவை என்ற சொல் சிலுவை வடிவிலான + ஒரு மரத்தை குறிக்கிறது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பெற்றவர் ஒரு நீண்ட மரத்தை தானே தன் தோளில் தீர்ப்பு நிறைவேறும் இடத்திற்கு சுமந்து சென்றவுடன் அந்த மரத்தை இரு துண்டுகளாக்கி + வடிவில்அமைத்து அந்த குற்றவாளியின் கைகளையும் கால்களையும் மரத்தில் பதியும் வண்ணம் கட்டி அல்லது ஆணிகளால் தைத்து அந்த அறையப்பட்ட நபரோடு கூடிய சிலுவையை நிமிர்த்தி நட்டுக்காட்டுவது வழக்கமான தண்டனையாக இருந்தது.

    பெரும்பாலும் குற்றாவளிகள் அனைவரும் நிர்வாணப்படுத்தியே சிலுவையில் அறைப்பட்டனர். நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பெரும்பாலும் பயந்து ஓடியிருப்பார். ஒரிருவர் துணிவுடன் அங்கே இருந்தால் அந்த நிரிவாணத்தை சிறுசிறு துணிகளால் மறைப்பர் குற்றாவளியின் பெயரும் பட்டமும் ஒரு குறும்பலகையில் எழுதப்பட்டு அவரது தலைக்கு மேல் பெருத்தப்பட்டது. இந்த அவமானமிக்க கொடூரமான சிறுவைத்தண்டனையை கான்ஸ்டன்டைன் பேரரசன் கி.பி.3-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மறைத்தழுவியதும் வரலாற்றிலிருந்தே விலக்கி விட்டான். கி.பி.3-ம் நூற்றாண்டுக்குப் பின் எவரும் சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை.

    இயேசு பிரான் இறைமகனாக இருந்தும் குற்றமற்றவராக இருந்தும் பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு பிலாத்து ஆளுநரால் தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையிலேயே மரித்தார். இயேசுபிரான் அந்த சிலுவையை தொட்டதும் அது தண்டனைக்கருவி என்ற முகவரியை இழந்து மீட்பின் கருவி என்ற புதிய விலாசத்தை பெற்றது. அன்று சிலுவையை வெறுத்தவர்கள் இன்று அதை அன்பு செய்ய அணிதிரண்டனர். இயேசு சுபிரான் சிலுவைக்கு புதிய அடையாளத்தை வழங்கினார்.
    ×