search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மிக்கேல்
    X
    மிக்கேல்

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி பிரான்சிஸ் எம்.வின்சென்ட் தலைமை தாங்குகிறார். அன்பரசன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் திருப்பலி, செபமாலை, புகழ்மாலை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

    21-ந் தேதி அருட்பணி பிரான்சிஸ் சேவியர் தலைமையில் ஆன்றனி ரோசாரியோ மறையுரையாற்றுகிறார். 22-ந் தேதி அருட்பணி சுவக்கின் தலைமையில் ஆன்றனி ராஜ் மறையுரையாற்றுகிறார். 23-ந் தேதி அருட்பணி மனோகியம் சேவியர் தலைமையில் ஜோசப் ஜெயில் சிங் மறையுரையாற்றுகிறார்.

    28-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்தில், அருட்பணி வலேரியன் தலைமையில் விஜய ராஜன் பாபு மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு செபமாலை, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி டி.போரஸ் தலைமையில் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு தேர்ப்பவனி, நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
    Next Story
    ×