search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை இயேசு
    X
    குழந்தை இயேசு

    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா

    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா 27-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாள் காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் சதீஷ் மகிழன் தலைமையில் சிறப்பு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறை தோட்டம் மந்திரிப்பு, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கார்மல் நகர் பங்குபணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் அருட்பணியாளர் மரியதாசன் திருவிழாவை கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து அன்பு விருந்து, 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    வருகிற 1-ந் தேதி இரவு 8.30 மணிக்கு தங்கத்தேர் பவனி, 5-ந்தேதி காலை 7 மணிக்கு மேல்பாலை பங்கு பணியாளர் ஐசக்ராஜ் முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 9.30 மணிக்கு தேர்பவனி, வருகிற 6-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி பெருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குபணியாளர் சகாயஜஸ்டஸ், இணை பங்கு பணியாளர் வெலிங்டன், அருட்பணியாளர் பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×