search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா தொடங்கியது

    மேல ஆசாரிபள்ளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் 127-வது குடும்பவிழா நேற்று தொடங்கியது. விழா 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை நடைபெற்றது. மங்கலகுன்று பங்குத்தந்தை பிரான்சிஸ் வின்சென்ட் தலைமையில், இனயம் பங்குத்தந்தை அன்பரசன் கொடி ஏற்றி வைத்தார். இதில் பங்குமக்கள் மற்றும் ஊர்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கொடியேற்றத்துக்கு பிறகு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இன்று(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு செபமாலை, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை மற்றும் திருப்பலி நடக்கிறது.

    22-ந் தேதி காலை 7 மணிக்கு புனித ஜெரோம் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் சுவக்கின் தலைமையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு குலசேகரம்புதூர் பங்குத்தந்தை தலைமையில் நற்கருணை பவனி, இரவு 8 மணிக்கு மன்ற ஆண்டுவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வரும் விழா நாட்களில், காலை திருப்பலி, மாலை செபமாலை, புகழ்மாலை, இரவு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து, இரவு 7 மணிக்கு செபமாலை, புகழ்மாலை மற்றும் மாலை ஆராதனை. 8 மணிக்கு அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

    29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா திருப்பலி, 10.30 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்தை தொடர்ந்து நற்கருணை ஆசீர், 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் வின்சென்ட், பங்குமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×