என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள்.
    இஸ்ரவேலின் யூப்ரடீஸ் ஆறு தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசத்தைக் கடந்து எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா நாடுகளையும் சாலமோன் ஆட்சி செய்தார். அது யூதேயா, இஸ்ரவேல் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பாக இருந்தது. அந்தத் தேசங்களில் கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் குடியிருந்தனர்.

    வயிறுமுட்ட சாப்பிட்டும், குடித்தும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சாலமோனின் வாழ்நாள் முழுவதும், அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள். எகிப்தியர்கள், ஏக இறைவனாகிய பரலோகத் தந்தை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு கற்பனை தெய்வங்களை வழிபட்டு வந்தனர். ஆனால், எகிப்தின் அரசனாகிய பாரோ மன்னனின் மகளை சாலமோன் மணந்துகொண்டார்.

    சாலமோன் தன்னுடைய தந்தை தாவீது சொல்லிக்கொடுத்தபடியே கடவுளாகிய யகோவா அருளிய சட்டங்களைக் கடைப்பிடித்து, கடவுள் மீது மாறா அன்பு காட்டிவந்தார். கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவரிடமிருந்து பெற்றிருந்த திட்டத்தை தாவீது, தான் இறப்பதற்கு முன் சாலமோனிடம் கொடுத்திருந்தார். அரியணை ஏறிய பிறகு தனது ஆட்சியின் நான்காவது ஆண்டில், சாலமோன் அந்த ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார்.

    50 ஆயிரம் எண்ணிக்கையில் கட்டிட வல்லுநர்களும், சிற்பிகளும் வேலை செய்தார்கள். தனது கருவூலத்தில் இருந்த அனைத்து பணத்தையும் செலவழித்து, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டிமுடித்தார், சாலமோன். அதன் காரணமாக கடவுளுக்கான முதல் பேராலயம், எருசலேமில் எழுந்து நின்றது.

    ஆசாரிப்புக் கூடாரத்தில் இருந்ததைப் போன்றே இந்த ஆலயத்திலும் இரண்டு முக்கிய அறைகள் இருந்தன. அவற்றில் ஆலயத்தின் நடுவில் உள்ளறையாக இருந் ததில் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க சாலமோன் உத்தரவிட்டார். ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்த மற்ற புனிதப் பொருட்கள் அனைத்தையும் மற்றொரு அறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

    அவ்வாறு செய்ததும் ஆலயத்தைக் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்ய ஒரு மாபெரும் விழாவை முன்னெடுத்தார். அந்த விழாவுக்கு உலகைப் படைத்துக் காக்கும் கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து அவர் தந்த கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கிற லட்சக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன் குடும்பம் குடும்பமாகக் குவிந்தார்கள்.

    அனைவருக்கும் கூடாரமும், உணவும், நீரும் வழங்கிய சாலமோன், ஆலயத்துக்கு முன் முழங்கால் இட்டு கைகள் இரண்டையும் வானை நோக்கி உயர்த்தி ஜெபித்தார். “பரலோகத் தந்தையே, நீர் தங்குவதற்கு வானுலகம் முழுவதும்கூடப் போதாதே, அப்படியானால் நீர் தங்குவதற்கு இந்த ஆலயம் எப்படிப் போதுமானதாக இருக்கும். என்றாலும், என் தேவனே, உம்முடைய மக்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபிக்கும்போது தயவுசெய்து அவர்களுக்குக் காதுகொடுத்து உன் கருணையை அருளும்” என்று கடவுளிடம் உருக்கமாகக் கேட்டார்.

    சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள். சாலமோன் ஜெபம் செய்து முடித்ததும் வானத்திலிருந்து நெருப்பு வருகிறது.

    ஆலயத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பலிகளையும் எரித்துப்போடுகிறது. வானிலிருந்து வந்த பிரகாசமான ஒளி ஆலயத்தை நிரப்பியது. கடலைப் போல் திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் கடவுள் காட்டிய அடையாளம் முன்பாக மண்டியிட்டு ஆலயத்தை வணங்கினார்கள். கடவுள் நம் வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பார் என்பதை அவ்வளவு பேரும் புரிந்துகொண்டார்கள்.
    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை (நாளைமறுதினம்) சகல ஆன்மாக்கள் நினைவு (கல்லறை திருநாள்) நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று கல்லறை தோட்டங்களில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

    வழக்கம்போல இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி (நாளைமறுதினம்) சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் மற்றும் செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு, சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    கல்லறை தோட்டங்களுக்கு அன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்துவதால், அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாலையில் பங்கு தந்தையர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்திரிப்பார்கள். மேலும் காலை மற்றும் மாலையில் ஆலயங்களில் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக திருப்பலி நடைபெறும்.

    இது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கல்லறை தோட்டங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் பங்கு தந்தைகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்களது முன்னோரின் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைகளில் அஞ்சலி செலுத்துவார்கள்.
    இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார். பலவிதமாகச் சோதிக்கப்பட்டார். நம்பிக்கையிலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் மேன்மேலும் நம்பிக்கையில் வளர்ந்தார்!
    திருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது.

    அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது.

    மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17); இரண்டு : காணாமலே நம்புவது (20 : 19). மாதாவிடம் இந்த நம்பிக்கை இருந்ததால்தான் அவர் பேறுபெற்றவர் ஆனார்.

    எல்லா சோதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்

    மாதாவைக் குறித்து சிந்திக்கும் போது. அவர் உண்மையில் மனிதப் பிறவி தானா? என்ற சந்தேகம் வரும். அவர் நம்மிடமிருந்து எவ்வளவோ மாறுபட்டவராகக் காணப்படுகின்றார். இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார். பலவிதமாகச் சோதிக்கப்பட்டார். நம்பிக்கையிலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் மேன்மேலும் நம்பிக்கையில் வளர்ந்தார்!

    மாதாவிடம் கபிரியேல் வான தூதர் மங்கள வார்த்தை அறிவித்த போது மாதா அதை ஏற்றுக்கொண்டார். உடனே இறைவார்த்தை மாதாவிடம் தங்கியது. அவர் கருத்தரித்த போது தாம் கருவுற்றிருப்பதை அவரால் மறைக்கவும் முடியவில்லை. எப்படி அவர் கருத்தரித்தார் என்பதற்கு சரியான விளக்கமும் கொடுக்க முடியவில்லை.

    தமக்கு மண ஒப்பந்தமான யோசேப்பிடம் என்ன சொல்வது என்று அவர் கண்டிப்பாகக் கலங்கியிருப்பார். கவலைப்பட்டிருப்பார். தமது மணமகளை யோசேப்பு காணச் சென்ற போது மரியா கருவுற்றிருப்பதை அறிய நேர்ந்ததால் அவருடைய மனம் எப்படி துடித்திருக்கும் அவர் மறைவாக அழுதிருப்பார் எப்படி ஒரு மனிதனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்? அது தான் மாதாவின் இதயத்தில் பாய்ந்த முதல் வாளாக இருந்திருக்கும் மாதா

    மாதாவின் வாழ்க்கையில் தோன்றிய மாபெரும் சோதனைதான் கல்வாரியில் தம் ஒரே மகனான இயேசுவின் பெருந்துன்பங்களும் இறப்பும். இயேசு ஆடை எதுவுமின்றி, ஓர் அடிமையைப் போல் சிலுவையில் அழுது இறந்தார். சிலிவையில் இறப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இஸ்ரயேலின் அக்கால எண்ணம்.

    இந்த இயேசு உண்மையில் இறைமகன் தானா? இறைவனின் தேஜஸ். மாட்சிமை, வல்லமை, மாண்பு, பெருமை, சிறப்பு எதுவும் இவரது முகத்தில் இல்லையே! திருத்தூதர்களும் சீடர்களும் இயேசுவை விட்டு ஓடிப் போனது அவர்கள் யூதர்களுக்கு அஞ்சியதால் மட்டுமல்ல, தாங்கள் நினைத்ததைப் போன்ற தெய்வீகம் இந்த இயேசுவிடம் காணப்படாததாலும் கூடத்தான்.

    மாதாவின் நம்பிக்கை உச்ச கட்ட சோதனைக்குட்பட்டது புனித சனியன்றுதான்! இறந்து நிறம் மங்கி, கட்டைபோல் அடக்கம் செய்யப்பட்டவரிடம் மாதா என் மகனே ! என் இறைவா! என் ஆண்டவரே! என்று சொல்லியிருந்தால், அது தான் அற்புதமான நம்பிக்கை! இறந்து போனவரை நோக்கி நாம், என் இறைவா! என் கடவுளே! என்று சொல்வோமா? யாராவது சொல்வார்களா? ஆனால் மாதா சொன்னார்! அது தான் நம்பிக்கையின் மகுடமாகத் திகழ்கின்றது!

    தொமினிக்கன் சபையைச் சேர்ந்தவர்களுக்கு மாதாவைக் குறித்து ஒரு மன்றாட்டு மாலை உள்ளது. அதில் பின்வரும் மன்றாட்டு உள்ளது. புனித சனிக்கிழமையன்றும் இயேசு கடவுள் என்று நம்பிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இது ஓர் அற்புதமான மன்றாட்டு. நாம் தினந்தோறும் சொல்லி மன்றாட வேண்டிய ஒரு மன்றாட்டு. புனித சனியன்று இயேசு இறை மகன் என்று நம்பிய மாதாவின் முன் உயிர்த்தெழுந்த இயேசு தமது முழு மாட்சிமையில் தோன்றிய போது மாதா எந்த அளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார் அவரது நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது அல்லவா?

    நம்பிக்கை இல்லாமல் போவது

    நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்! அவ்வளவு கொடிய சோதனைகளை மாதா ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

    இருந்தும் அவர் நம்பிக்கையில் நிலைத்திருத்தார். உறுதியாக இருந்தார். ஒரு சிறுசோதனை வந்தால்கூட பலர் இறைவனைவிட்டு விலகி விடுகின்றனர். நாற்பது ஆண்டுகள் சோதனைக்குள்ளான போது இஸ்ரயேலர் கூட இறைவனிடமிருந்து விலகினர். அவர்களுள் பலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். தங்களுக்கென ஒரு தலைவனை நியமித்துக் கொண்டு எந்த எகிப்திலிருந்து தப்பியோடி வந்தனரோ அதே எகிப்துக்கு மீண்டும் அடிமைகளாகச் செல்ல நினைத்தனர் (எண் 14 : 1 – 4).

    யோபுவின் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்தன. யோபுக்கு கொடிய நோய் வந்தது அவரது காயங்களில் புழு அரித்தது. அவரது நண்பர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். ஆனால் அவர் இறைவனைப் போற்றித் துதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவரது மனைவி கூட பின்வருமாறு பரிகாசம் செய்தாள்: இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிaர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? (யோபு 2 : 9). சோதனை வந்தபோது அவள் கடவுளை விட்டு விலகினாள்.

    ஆண்டவர் இயேசு திவ்விய நற்கருணையைப் பற்றி போதித்த போது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்று சொன்ன போது (யோவா 6 : 51), அதுவரை அவரைப் பின்பற்றிய சீடர்களுள் பலர் முணுமுணுத்தனர்.

    பலர் அவரை விட்டு விலகினர் (யோவா 6 : 66). ஆனால் தூய கன்னி மரியாவோ இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்! பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!
    கல்லறை திருநாள் அன்று பொதுமக்கள் யாரும் கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம் என்றும் நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மறைந்த கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவுகூருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    அன்று கல்லறை தோட்டங்களில் கூடி மறைந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதியன்று இந்த வழக்கத்தை தவிர்க்கும்படி சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் ஆலோசனைப்படி, இந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதியன்று கீழ்ப்பாக்கம், காசிமேடு ஆகிய கல்லறை தோட்டங்களை பூட்டிவைப்பது என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

    கொரோனா தொற்றின் காரணமாகவும், சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிவுரைகளின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    பொதுமக்கள் யாரும் அன்று கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம். நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இறைவனின் தாயான கன்னி மரியாளின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா செப்டம்பர் 8-ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
    இறைவனின் தாயான கன்னி மரியாளின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா செப்டம்பர் 8-ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. எருசலேம் நகரில் வாழ்ந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மகளாக மரியாள் பிறந்தது தொடர்பான நிகழ்வுகளை இந்த விழா நினைவூட்டுகிறது.

    பின்னணி

    “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்” (லூக்கா 1:68,72-73) என்ற செக்கரியாவின் வார்த்தைகள், மரியாளின் பிறப்புக்கான காரணத்தை விளக்குகின்றன. முதுமை வரை குழந்தைப் பேறில்லாமல் இருந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மன்றாட்டின் பலனாக, உலக மீட்பரின் தாய் அவர்களின் மகளாக பிறந்தார் என்பதை இந்த விழாவில் கொண்டாடுகிறோம்.

    வரலாறு

    கி.பி.150ல் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’ என்ற நூல், மரியாளின் பிறப்பு மற்றும் இளமைப்பருவம் பற்றியத் தகவல்களைத் தருகிறது. கன்னி மரியாள் செப்டம்பர் 8ந்தேதி பிறந்தார் என ஆங்கர்ஸ் ஆயரான புனித மவுரில்லியுஸ் 425ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, கன்னி மரியாளின் பிறப்பை விழாவாக கொண்டாடும் வழக்கம் தோன்றியது. 6ஆம் நூற்றாண்டில் எருசலேம் புனித அன்னா ஆலயம் கட்டப்பட்ட வேளையில், இந்த விழா கீழைத் திருச்சபை முழுவதற்கும் விரிவடைந்தது. 7ஆம் நூற்றாண்டில், ரோம் உள்பட பைசாந்திய பேரரசின் மேற்கத்தியப் பகுதிகளுக்கும் இந்த விழா பரவியது.

    எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேத்து ஆயரான புனித ஆண்ட்ரூ, தமது மறையுரைகளில் மரியாளின் பிறப்பு விழா பற்றி குறிப்பிடுகிறார். 799ஆம் ஆண்டு கூடிய சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதியில், செப்டம்பர் 8ந்தேதி மரியாளின் பிறப்பு விழா இடம் பெற்றுள்ளது. 13ஆம் நூற்றாண்டு முதல், கன்னி மரியாளின் பிறப்பு எண்கிழமையுடன் இணைந்த பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டு நாள்காட்டி, இதை விழாக்களின் வரிசையில் சேர்த்துள்ளது. வேளாங்கண்ணியில் மரியன்னையின் காட்சிகள் செப்டம்பர் 8ந்தேதி நிகழ்ந்ததன் காரணமாக, அங்கு இந்நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
    இரக்கத்தின் இறைவா! இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.
    என் அன்பு தந்தையே இறைவா! உம்மை வாழ்த்துகிறோம். உம்மை போற்றுகிறோம். உம்மை புகழ்கிறோம். உமது பேரன்புக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும், வாழ்வாலும், இறப்பாலும், உயிர்ப்பாலும் திருச்சபையை ஏற்படுத்த நீர் திருவுளமானீர்.

    பெந்தகோஸ்து பெருவிழாவின் போது அன்னை மரியா, திருதூதர்கள் மற்றும் திரளான மக்கள் மீது உமது தூய ஆவியைப் பொழிந்தீர். அதே தூய ஆவியின் ஆற்றலால், தொடக்க கால திருச்சையின் மக்கள், திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும், உடமைகளை பகிர்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கச் செய்தீர்.

    உறவின் இறைவா! தொடக்கக் கால கிறிஸ்துவ சமுகத்தைப் போல சிறு சிறு அன்பியச் சமுகங்களாக நாங்கள் வாழ எங்களை அழைக்கின்றீர். எங்கள் அன்பியச் சமூகங்களின் வாழ்வும் பணியும், எங்கள் பங்குத் தளங்களில், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றாக அமையச் செய்தருளும்.

    இரக்கத்தின் இறைவா! இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.

    எம் பங்கு, பல அன்பியங்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்துவச் சமூகமாகத் திகழச் செய்தருளும். இதனால் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை, பங்கேற்புத் திருச்சபையாக மலரவும், அன்புக் கலாச்சாரத்தின் அடிப்படையில் மனித நேயம் நிறைந்த, புத்துலகு படைக்கவும் அருள்தாரும்.

    எஙகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.  ஆமென்.

    ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.
    கலிலேயா கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தில், இயேசு தன் சீடர்களோடு தங்கியிருந்தார். அப்பொழுது நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக இயேசுவின் போதனையைக் கேட்க குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஐயாயிரம் பேர் திரண்டுவிட்டனர். இயேசுவின் போதனைகளில் மூழ்கியிருந்த மக்கள் நேரம் போனதை உணரவில்லை. சூரியன் மறைய ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்” என்று சொல்கிறார்கள். ஆனால் இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் பயந்துபோய், “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன” என்பதை அவரிடம் சொன்னார்கள்.

    ஆனால், இயேசு அஞ்சவில்லை. தன்னை நம்பி வந்த மக்களின்மேல் இரக்கப்பட்ட இயேசு, தம் சீடர்களிடம் சொல்லி பசும்புல் தரையில் வரிசையாக மக்களை உட்கார வைக்கிறார். பின்னர் அந்த ஐந்து அப்பத்தையும் மீன் துண்டுகளையும் வானை நோக்கி உயர்த்திப் பிடித்து தன் தந்தையை நோக்கி ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, அந்த உணவை மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார். தன் சீடர்கள் சிலரே எனினும் அவர்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவை அளிக்கிறார். அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீதம் இருந்தது.

    இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும், அந்த ஒரு படகில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களேயன்றி இயேசு அவர்களோடு போகவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.

    அப்போது, இயேசு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்துக்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள், கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடி அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்குச் சென்றனர்.

    அங்கே கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் வரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

    தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள் கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, பெரும் மக்கள் திரளுக்கு உணவளித்த தனது அற்புதத்தின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காகத் தன்னைத் தேடி வருகிறார்களே என்ற கவலையும் ஆதங்கமும்தான். இயேசுவின் நோக்கம் வயிற்றுப்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மிகப் பசியைப் போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.
    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் போதிய இடவசதி இன்றி இருந்ததால் சுமார் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் போதிய இடவசதி இன்றி இருந்ததால் இந்த ஆலயத்தை புதுப்பித்து விரிவுபடுத்த ஜஸ்டின் திரவியம், சார்லஸ், மணி, அருள்பிரகாசம், பங்குராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    பழைய ஆலயம் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் செலவில் ஒரே ஆண்டில் புதிதாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலய திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை குரு ஜெயராஜ், பங்கு தந்தைகள் எட்வர்டு பிரான்சிஸ் சேவியர், பால் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை குரூஸ் ஆகியோர் முன்னிலையில் மதுரை உயர்மறை மாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி விரிவாக்கப்பட்ட புதிய அந்தோணியார் ஆலயத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.

    அதன்பின்னர் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் பவன் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கராஜன், கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, கணேசன், வக்கீல் முருகன், திருமுருகன், காமேஸ்வரன் உள்பட இப்பகுதி கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம்.
    ஓர் இளைஞன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி வீட்டுக்கு வந்தான். காவல்துறையினர் அவனை துரத்தினர். இதை கண்ட அண்ணன் தம்பியின் இரத்தக்கறை படிந்த ஆடையை கழற்றி, தான் அதை உடுத்திக்கொண்டான். அண்ணனின் உடையில் இரத்தக்கறையைப் பார்த்த காவல் அதிகாரி அண்ணனைக் கைது செய்து முடிவில் தூக்கு தண்டனைக்கு அழைத்து சென்றனர். தூக்கில் தொங்கும் முன் தூர நின்றுகொண்டிருந்த தன் தம்பியைப் பார்த்த அண்ணன் 'நீ இனிமேல் நீதிமான். பரிசுத்த வாழ்வை கற்றுக்கொள்" என்றான்.

    தம்பியின் குற்றத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது போல இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம். இயேசுவின் சிலுவைப் பயணம் கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக வீரத்தின் அடையாளம். இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தை உருவாக்குகின்றது என்று நினைக்காமல், தீமைக்கு எதிராகப் போராடத் தூண்டுவதாக அமைய வேண்டும். சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று மட்டும் பார்க்காமல், பகிர்வின், மன்னிப்பின், புதுவாழ்வின் அடையாளம் என்பதை உணரவேண்டும்.

    "நீதிமான்களின் வாழ்வில் நீதிபிறக்கின்றது.
    போராளியின் சாவில் போராட்டம் பிறக்கின்றது
    இலட்சியவாதியின் சாவில் இலட்சியம்
    வலுப்பெறுகிறது.
    இறைவனின் தாயாக திகழும் கன்னி மரியாள் தமது தாயின் வயிற்றிலேயே அமல உற்பவியாக தோன்றியதைக் கொண்டாடும் இந்த திருநாள், டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
    இறைவனின் தாயாக திகழும் கன்னி மரியாள் தமது தாயின் வயிற்றிலேயே அமல உற்பவியாக தோன்றியதைக் கொண்டாடும் இந்த திருநாள், டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. தொடக்கப் பாவத்தின் கறைகள் அனைத்தில் இருந்தும் இறையன்னை மரியாள் பாதுகாக்கப்பட்டதை இந்த பெருவிழாவில் கொண்டாடி மகிழ்கிறோம்.

    பின்னணி

    கடவுளின் பிரதிநிதியாக நாசரேத்துக்கு சென்ற வானதூதர், “அருள் நிறைந்தவரே வாழ்க!” (லூக்கா 1:28) என்று கன்னி மரியாளை வாழ்த்துகிறார். தூய ஆவியால் நிரப்பப்பட்ட எலிசபெத்து, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்” (லூக்கா 1:42) என போற்றுகிறார். மீட்பராம் இறைமகனை தம் கருவில் தாங்குமாறு, மரியாள் பாவமின்றி உற்பவத்தார் என்பதையே மேற்கண்ட வார்த்தைகள் உறுதி செய்கின்றன. ஆகவே தான், “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது” என மரியாள் பாடினார் என்பதில் சந்தேகமில்லை.

    வரலாறு

    முதன்முதலாக, புனித அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உற்பவித்ததைக் கொண்டாடும் விழா கி.பி.7ஆம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் தோன்றியது. 8ஆம் நூற்றாண்டில், ‘மரியாளின் உற்பவ விழா’ மேலைத் திருச்சபையில் கொண்டாடப்பட்ட சான்றுகளை அக்காலத் திருப்பலி நூல்களில் காண்கிறோம். 11ஆம் நூற்றாண்டில், “கன்னி மரியாள் தொடக்கப் பாவமின்றி உற்பவித்தார்” என்று கூறும் ‘அமல உற்பவ நம்பிக்கை’ உருவானது. 1050ல் கூடிய வெர்செல்லி சங்கத்தில், மரியாளின் அமல உற்பவத்துக்கான விழாவை திருத்தந்தை 9ம் லியோ பரிந்துரை செய்தார்.

    பைசாந்திய பேரரசு முழுவதும் மரியாளின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுமாறு, பேரரசர் முதலாம் மனுவேல் 1166ஆம் ஆண்டு ஆணையிட்டார். 1439ல் கூடிய பாசல்-புளோரன்ஸ் பொதுச்சங்கத்தின் அமர்வு, மரியாளின் அமல உற்பவத்தை உறுதி செய்தது. 1476ல் மரியாளின் உற்பவ விழாவுக்கு அனுமதி வழங்கிய திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ், 1477 பிப்ரவரி 28ந்தேதி அதற்கான ஞானப்பலன்களை அறிவித்தார். திரெந்து பொதுச்சங்கத்தை அடுத்து, உருவான நாள்காட்டியிலும் இந்த விழா இடம் பெற்றது. 1568ல், மரியாளின் உற்பவ விழாவுக்கான திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை செபத்துக்கு திருத்தந்தை புனித 5ம் பியுஸ் அனுமதி வழங்கினார்.

    17ஆம் நூற்றாண்டில், மரியாளின் உற்பவ விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. 1708ல் திருத்தந்தை 11ம் கிளமென்ட், மரியாளின் உற்பவ விழாவை கடன் திருநாளாக அறிவித்தார். திருத்தந்தை 14ம் கிரகோரி (1831-1846) காலத்தில், மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1854 டிசம்பர் 8ந்தேதி, ‘மரியாளின் அமல உற்பவம்’ குறித்த நம்பிக்கையை திருத்தந்தை 9ம் பியுஸ் திருச்சபையின் விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதையடுத்து, ‘மரியாளின் அமல உற்பவம்’ என்ற பெயரை இந்த விழா பெற்றது. 1969ல் சீரமைக்கப்பட்ட நாள்காட்டியில், இந்த திருநாள் பெருவிழாக்களின் பட்டியலில் உள்ளது.
    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறை மாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும்.

    இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

    சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர்

    சாந்தோம் கோவில் வரலாறு :

    பண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.

    1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது "பெத் தூமா" ("தோமாவின் வீடு" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.

    1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.

    போர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.

    கோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.

    கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.

    சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.

    2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.
    திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 10-ம் திருவிழா அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவி பாலன் நடத்தினார்.

    தொடர்ந்து குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து மற்றும் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை விக்டர் சாலமோன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    ×