என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன்.
    பாசன் நகரிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்தனர். பின்னர் எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரின் அருகிலுள்ள யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். அந்த நேரத்தில் பாலாக் என்பவன் மோவாப் நகரின் அரசனாக ஆட்சி செய்துவந்தான்.

    சீகோன், ஓக் ஆகிய இருபெரும் அரசர்களை இஸ்ரவேலர்கள் வீழ்த்திவிட்டு முன்னேறி வந்திருக்கும் செய்திகள் அவனைக் கலங்கடித்திருந்தன. இதனால் மிகவும் பயந்தான். காரணம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் போர்புரியும் திறத்தை கடவுள் அளித்திருந்தார். அவர்களது எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. இதனால் மோதுவதற்கு முன் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைக்காதவாறு அவர்களை சபிக்கச் செய்துவிடலாம் என்று தந்திரம் செய்தான்.

    தனது நகரை ஒட்டியிருந்த பெத்தூர் என்ற ஊரில் வசித்துவந்த பிலேயாம் என்பவரை, இதற்கு சரியான நபர் எனக் கண்டறிந்தான் பாலாக். ஆம்.. பிலேயாத்தின் சாபத்தைப் பெற்றவர்கள் வாழ்ந்ததில்லை. அவனுக்கு அப்படியொரு நாக்கு. உடனே அவனுக்கு அவசரச் செய்தி அனுப்பினான் அரசன்.

    “பிலேயாமே நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட இஸ்ரவேலர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை அறிவேன். நீ ஒருவரை ஆசீர்வதித்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவருக்கு எதிராகப் பேசினால் அவருக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களை சபித்துவிடு. அதனால் நான் அவர்களை எளிதில் தோற்கடித்துவிடுவேன். இதற்கு உனக்குக் கைமாறாக என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்” என்று செய்தி அனுப்பினான்.

    பாலாக், கைநிறைய அள்ளிக் கொடுப்பான் என்று நம்பிய பிலேயாம், தன் கழுதை மேலேறி அவனைக் காணக் கிளம்பினான். ஆனால் பிலேயாம் தன் மக்களைச் சபிப்பதற்கு கடவுள் விரும்பவில்லை. அதனால் பிலேயாமைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்த நீண்ட வாளுடன் கூடிய ஒரு தேவதூதனை அனுப்பினார். கண்களைக் கூசச்செய்யும் வாளுடன் தேவதூதன் கழுதையின் முன்பாகத் தோன்றினார். அந்தத் தேவதூதனை பிலேயாமால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனுடைய கழுதையினால் அவரைப் பார்க்க முடிந்தது. கழுதை எவ்வளவோ முயன்றும் தேவதூதனைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனால் கழுதை வழியிலேயே படுத்துவிடுகிறது. ஆத்திரம் தலைக்கேறிய பிலேயாம், தன் கோலால் கழுதையை மும்முறை அடித்துத் துவைத்தான். அப்போது கழுதை வாய் திறந்து பேசும்படியான அற்புதத்தை கடவுள் அரங்கேற்றினார்.

    “என் எஜமானே.. என்ன தவறு செய்தேன் என்று என்னை இப்படி நையப் புடைக்கிறாய்?” என்று கழுதை கேட்டது. ‘கழுதை பேசுகிறதே’ என்று ஆச்சரியப்படுவதை விடுத்து “என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருந்தால் உன்னை இந்நேரம் கொன்று போட்டிருப்பேன்” என்று பிலேயாம் ஆத்திரம் பொங்கக் கத்துகிறான். அப்போது தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன். இஸ்ரவேல் மக்களை சபிக்கச் செல்லாதே. உன் கழுதைதான் உன்னை கீழே இறக்கிவிடாமல் காப்பாற்றியது. அதுமட்டும் உன்னை விட்டு விலகியிருந்தால் நான் உன்னைக் கொன்று போட்டிருப்பேன்” என்று அந்த தேவதூதன் வழியாகப் பேசினார். அதைக் கேட்டு நடுங்கிய பிலேயாம், வந்த வழியே திரும்பி சென்றான். பாலாக்கின் சதித்திட்டம் வீணாகிப் போனது.
    அழகப்பபுரம் அருகே இந்திரா நகரில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆண்டுக்கான 10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    அழகப்பபுரம் அருகே இந்திரா நகரில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருவிழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடந்தது.

    திருவிழா நாட்களில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் இந்திராநகர் மக்கள் செய்து இருந்தனர்.
    கூடங்குளம் புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கூடங்குளம் புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும்.  கூடங்குளம் தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது. 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து  திறந்துவைத்தார்.

    ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது. 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது. அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

    திருப்பலி நேரங்கள்:
     
    வார வழிபாட்டு நிகழ்வுகள்:

    * தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

    * மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

    * மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை புனித சவேரியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

    * மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித ராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

    ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:

    * ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.45 மணி முதல் 8.00 மணி வரை திருப்பலி நடைபெறும்.

     புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா:

    * ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
    * ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும்  நடைபெறுகிறது.
    * நவ நாட்களில் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்ப சபையினர், புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.
    * ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர் ஊரைச் சுற்றிலும் பவனி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
    * திருவிழா நிறைவுற்ற மறுநாள் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறும்.

    தொடர்புக்கு:

    அருட்தந்தை. ப்ராக்ரஸ் (Fr. Progress) ,
    பங்குத் தந்தை,
    புனித ராஜகன்னி மாதா ஆலயம்,
    கூடங்குளம் -628656,
    தூத்துக்குடி மாவட்டம்.

    தொலை பேசி எண்:  04639 255335
    இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. விழாவில் பங்குதந்தைகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.

    கடந்த 6-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், அன்னையின் தேர்பவனியும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி, நற்கருணை பவனி, தேர்பவனி ஆகியவை நடைபெற்றன. விழாவில் பங்குதந்தைகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பங்குதந்தை சகாயராஜ் வல்தாரிஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.

    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    பக்திமுயற்சி

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன.
    நமக்காக தம் ரத்தத்தையே சிந்திய கிறிஸ்து இயேசுவுக்காக கை விடுவோமா? நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா? இதுவே கர்த்தருக்கேற்ற உபவாசம்.
    என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள் என்று வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 4-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    அன்பானவர்களே!

    இந்த மேற்கண்ட வசனத்தை இயேசு கிறிஸ்து நாம் கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ்வதற்காக சொல்கிறார். கனி என்றால் என்ன? நம் வாழ்க்கையில் கிரியையே கனி அதாவது தன்னைப்போல் பிறரிடமும் அன்பாயிருப்பது, எவ்வேளையிலும், எல்லா நாளிலும் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது, யாவரோடும் எல்லா நேரத்திலும் சமாதானமாயிருப்பது, சோதனை வேளையில் நீடிய பொறுமையோடு கர்த்தர் ஜெயம் தருவார் என ஜெபத்தில் காத்திருப்பது, ஏழைகளுக்கு தயவாய் இரக்கம் செய்வது, நற்குணமாய் கர்த்தருக்கு பயந்து நடப்பது, இன்பத்தில் துன்பம் நேர்ந்தாலும் கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருப்பது, கோபப்படும் மக்களிடையே சாந்தமாய் ஒளிர்வது, மாம்சத்திலும், ஆவியிலும் இச்சை அடக்கத்துடன் வாழ்வது, இவையே கனி கொடுக்கும் ஜீவியம். நாம் இப்படிபட்ட கனிகொடுக்கும் ஜீவியம் வாழ இயேசுவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.

    இந்த தவக்காலங்களில் உலக பிரகாரமாக எதை எதையோ இயேசுவுக்காக கைவிடுகிறோம் ஆனால் கனி கொடுக்கும் ஜீவியம் வாழ பெருமை, பொறாமை, ஆகாத சம்பாஷனை, மாயமான விசுவாசம், கோபம், எரிச்சல், சண்டைகள், பிறரை துன்பப்படுத்தும் வஞ்சக பேச்சு, மற்றவரை ஏளனமாய் கனவீனம் செய்தல், கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை இவை அனைத்தும் நமக்காக தம் ரத்தத்தையே சிந்திய கிறிஸ்து இயேசுவுக்காக கை விடுவோமா? நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா? இதுவே கர்த்தருக்கேற்ற உபவாசம். இதை இந்த தவக்காலங்களில் கடைபிடித்து இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருப்போம்.

    சகோதரி. ரூத்பிமோராஜ், கே.ஜி. கார்டன், திருப்பூர்.
    மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, கிதியோனிடம் படைதிரட்டும்படி கடவுள் பேசினார். அதன்படி 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார்.
    மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, கிதியோனிடம் படைதிரட்டும்படி கடவுள் பேசினார். அதன்படி 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார். ‘இத்தனை வீரர்கள் உனக்குத் தேவையில்லை’ என்று எடுத்துரைத்த கடவுள் ‘எச்சரிக்கையாக இருப்பவர்களை மட்டும் தேர்ந்து கொள்’ என்றார். அதனால் 32 ஆயிரம் படைவீரர்களில், வெறும் 300 பேரை கிதியோன் தேர்ந்தெடுத்து, கடவுளின் கட்டளைக்காக காத்திருந்தார்.

    300 பேர் கொண்ட தன் படையணியை தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்களாகப் பிரித்தார். பின்னர் கடவுள் கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு ஊதுகொம்பும், ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்பட்டது. மண்பானைக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீப்பந்தத்தை மறைத்து வைக்கும்படி கிதியோன் உத்தரவிட்டார். பிறகு தன் வீரர்களைப் பார்த்து “நாம் இந்த இரவில் புறப்பட்டு மீதியானியர்களின் முகாமை நோக்கிச் செல்லப்போகிறோம். முகாமின் எல்லையை அடைந்ததும், நான் செய்வதை நன்றாகக் கவனித்து, அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும். நாம், அவர்களது முகாமைச் சூழ்ந்துகொண்டதும் நான் ஊதுகொம்பை ஊதும்போது நீங்களும் அவரவர் ஊதுகொம்பை எடுத்து ஊத வேண்டும். ஊதிக்கொண்டே ‘இது யகோவாவின் போர்.. கிதியோனின் போர்..’ என்று முழங்க வேண்டும்” என்றார்.

    கிதியோன் கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட 300 வீரர்களும் எதிரிகள் முகாமிட்டிருந்த பாளையத்தின் ஓரம்வரை பதுங்கிச் சென்றார்கள். அப்போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. மீதியானிய வீரர்கள் அனைவரும் வயிறுமுட்ட மதுவருந்தி, பின் உண்ட களைப்பில் நன்கு கண் அயர்ந்திருந்தனர். அவர்களைத் தாக்குவதற்கு ஏற்ற தருணம் இதுவே என்று எண்ணிய கிதியோன், இப்போது தனது ஊதுகொம்பை எடுத்து ஊதுகிறார். தலைவர் செய்வதைக் கண்டு முகாமைச் சூழ்ந்திருந்த 300 வீரர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

    300 மண்பானைகளைக் கீழேபோட்டு உடைக்கும்படி கிதியோன் கூற, வீரர்கள் அவ்வாறே செய்கிறார்கள். 300 மண்பானைகள் ஒரே நேரத்தில் உடைந்த சத்தம், தலைக்கேறிய போதையுடன் அரைத்தூக்கத்தில் இருந்த மீதியானியர்களைத் திடுக்கிடலுடன் விழித்தெழச் செய்து பீதிகொள்ள வைக்கிறது. 300 ஊதுகொம்புகளும் முழங்க, 300 வீரர்களும் ஆரவாரம் செய்தனர். அதிர்ச்சியடைந்த மீதியானியர், யார் எதிரி, யார் நண்பன் என்று அடையாளம் காணமுடியாத குழப்பத்தில் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு தரையில் சாய்ந்து மடிந்தார்கள். இதையும் மீறித் தப்பிச்சென்றவர்களையும், மீதமிருந்தவர்களையும் 300 வீரர்கள் பிடித்துக் கைதிகளாக்குகிறார்கள். இவ்வாறு கானான் தேசத்தை வெட்டுக்கிளிக் கூட்டம்போல் வேட்டையாடி வந்த மீதியானியர்களின் ஆக்கிரமிப்பு முற்றாகத் துடைத்தெறியப்படுகிறது.
    திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
    திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-ம் ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு சப்பர பவனி நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயர் இல்ல தலைமைச்செயலாளர் நார்பட்தாமஸ், மறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.

    மாலையில் ஆலயத்தை சுற்றி திருவிழா சிறப்பு சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, நேர்ச்சையாக உப்பு, மிளகு, மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து இரவில் நற்கருணை ஆசீர் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், பக்தசபைகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. நேற்று திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது.

    பங்குதந்தை பெஞ்சமின் மற்றும் அருட்பணியாளர் சுஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். நேற்று மாலையில் கோவில் வளாகத்தில் தேர்பவனி நடந்தது. இதில் பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆலயத்தின் 136-ம் ஆண்டு திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்து வந்தது. 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் நற்கருணை பவனி, குணமளிக்கும் ஜெப வழிபாடு நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் ஆராதனையை நடத்தினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து சப்பர பவனி நடைபெற்றது.

    விழாவில் பங்குதந்தைகள் நார்பட்தாமஸ், ஜான்பிரிட்டோ, நெல்சன் பால்ராஜ், லியோன், ஜோசப் ரவிபாலன், சகாயராஜ், விஜயன் அந்தோணி, டொமினிக் அருள்வளவன், வசந்தன், விக்டர், இளங்குமரன், செல்வரத்தினம், தனிஸ்லாஸ், டன்ஸ்டன், இன்னாசிமுத்து, செல்வமணி, அருள்மணி, இருதயராஜ், டென்சில், பென்சிகர்அமல், நெல்சன், பிரைட்மச்சாது, அந்தோணிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், பக்தசபைகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய பங்கு திருவிழா நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய பங்கு திருவிழா நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெற்றது. இவற்றை அனைத்து பக்தசபை இயக்கங்கள் சிறப்பித்தன.

    3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதை வழிபாட்டுக்குழு மறைக்கல்வி மன்றத்தினர் சிறப்பிக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு விழா திருப்பலி நடக்கிறது. நிர்வாகக்குழுவினர் சிறப்பிக்கிறார்கள். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி திருப்பலியை 1 முதல் 6 வரை உள்ள அன்பியங்களும், 9 மணி திருப்பலியை 7 முதல் 12 வரை உள்ள அன்பியங்களும், மாலை 5 மணி திருப்பலியை 13 முதல் 18 வரை உள்ள அன்பியங்களும் சிறப்பிக்கிறார்கள். அது முடிந்ததும், கொடி இறக்கப்படும்.

    திருப்பலி நேரடி ஒளிபரப்பு ஏ.எம்.என்.டி.வி. மற்றும் யூ-டியூப் ல் உள்ளூர் டி.வி.யிலும் ஒளிபரப்பப்படுகிறது. திருப்பலிக்கு குறிப்பிட்ட அன்பியங்களின் உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக பங்கு கொள்ள வேண்டும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஏ.எஸ்.மைக்கேல்ராஜ், ஊர் தலைவர் ஐ.ஜே.மணி, செயலாளர் லாரன்ஸ் பீட்டர் ஷா, பொருளாளர் ஜோசப் அருள்ராஜ், தணிக்கையாளர் பால்டுவின் புரூஸ் மற்றும் ஊர் நிர்வாகத்தினர், பங்கு இறை மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளை மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளை மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் முதல் நாளன்று மாலை 6 மணிக்கு இறச்சகுளம் பங்குத்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது.

    புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை ஜெயச்சந்திரன் ரூபன் மறையுரையாற்றுகிறார். விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 8 மணிக்கு தடிக்காரன்கோணம் மனுவேல் பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணி சஜு, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
    ×