என் மலர்
கிறித்தவம்
கிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

இன்று நாம் நமக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 மாதம், அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச்சென்று ஆயர் முன்னிலையில் ஜெபித்து பெயர் வைத்து விட்டு காணிக்கையாக பணத்தை செலுத்தி விட்டு வருவோம்.
ஆனால் இயேசுவுக்கு அப்படி நடக்கவில்லை. இயேசுநாதர் பிறந்து எட்டாம் நாளிலே அவருக்கு பெயரிடவும், பலி செலுத்தி காணிக்கை படைக்கவும் அவருடைய பெற்றோர் அவரை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த சிமியோன் என்பவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவர். இன்னொருவர் அன்னாள். இவர் இரவும், பகலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், ஜெபித்து ஆராதனை செய்து வருபவர். இவர்கள் இருவரும் இயேசு தேவாலயத்திற்கு வந்ததை கண்டவுடன் இவர்களோடு அங்கிருந்தவர்களிடம் இயேசுவை புகழ்ந்து பேசினார்கள் என்று வேதாகமத்தில் லூக்கா 2-ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பின்னர் இவர்கள் இருவரின் முன்னிலையில் இயேசுநாதர் தேவாலயத்தில் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டார். அங்கு ஏராளமான பலி பொருட்கள் படைக்கப்பட்டிருந்தது. அந்த பலி பொருட்களோடு சேர்த்து இயேசுநாதரும் ஜீவ பலியாகவே படைக்கப்பட்டார் என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது.
இப்படி குழந்தையாய் இருக்கும் போதே இயேசு என்று பெயரிட்டு நமக்காக நம்முடைய வாழ்க்கையாக அவரையே ஜீவ பலியாய் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆனால் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம். கோவிலுக்கு சென்றால் பல்வேறு வகையில் பொருட்களை கொண்டு போய் படைக்கிறோம். ஆனால் இயேசுவானவரோ நம் இதயத்தை அவருக்காக ஒப்படைக்க கேட்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஜீவ பலியாய் தன்னையே நமக்காக ஒப்புக்கொடுத்தது போல நாம் ஜீவ பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரையே நம்பி இருக்கிற நாமும் நம்முடைய ஆவி, ஆத்மா, சரீரத்தை இயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார், ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.
கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் ‘கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ?’ என்று அஞ்சினார். இதனால் தனது மகன் ஈசாக்கு, ‘எக்காரணம் கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். அவரிடம் “எனது தந்தையின் தேசமும் தற்போது எமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுக்குச் சென்று, என் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வாருங்கள்” என்று அனுப்பினார்.
வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். நீண்ட பயணத்துக்குப் பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தார். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலை நேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனையை கடவுள் கேட்டார்.
வேலைக்காரர் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள்.
ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது ஒட்டகத்தை கண்டு, அது குடிக்கக் குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக் கொண்டே இருந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “பெண்ணே.. உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டகங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார்.
அவள் மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்” என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.
அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபெக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும், அவரது மகனும் ஈசாக்கிற்கு ரெபெக்காளை திருமணம் செய்துவைக்க சம்மதித்தார்கள். ரெபெக்காவும் சம்மதம் தெரிவித்தாள். மறுநாளே ரெபெக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.
அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது, ஈசாக்கை நேருக்கு நேராய்ச் சந்தித்தாள் ரொபெக்கா. இதனால் இருவரது மனதுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கியது.
தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ‘ஏசா’ என்றும், ‘யாக்கோபு’ என்றும் பெயரிட்டனர்.

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி தலைமை தாங்கி கொடியேற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 3-ந் தேதி மாலையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். 4-ந் தேதி மாலை ஆலயத்தை சுற்றி சப்பர பவனி நடக்கிறது. இரவு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் வேதநகரில் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலய திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் வேதநகரில் முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலியும் நடந்தது. திருப்பலியில் அருட்பணியாளர் ஜோசப் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இந்த விழாவை அன்பிய ஒருங்கிணையம் சிறப்பிக்கிறது. 2-ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. பள்ளம் பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமை தாங்குகிறார். பக்தசபை ஒருங்கிணையம் வழிபாட்டு குழுவினர் சிறப்பிக்கின்றனர்.
3-ம் நாள் திருவிழாவன்று காலை 7 மணிக்கு விழா திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். பங்கு மேய்ப்பு பணி பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு, பங்கு மக்கள் சிறப்பிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மேய்ப்பு பணி பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு சேசு சபை அருட்தந்தை ஹென்றி ஜெரோம் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
10 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. இதில் பாட்டாகுறிச்சி பங்குத்தந்தை ரினோய்கட்டிப்பரம்பில் வழிபாடு நடத்தினார். மாலையில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து பிரசங்கம் நடத்தினார். இதைத்தொடர்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. வழக்கமாக இந்த பவனி வீதிகளில் நடைபெறும்.
கொரோனா காரணமாக ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. ஆலயத்திற்குள் பக்தர்கள் குறைவான அளவில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்தனர். இன்று சப்பர பவனி நடைபெறுகிறது.

மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் தலைமை தாங்குகிறார்.
28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து தென்தாமரைகுளம் பங்குத்தந்தை ஜெரி வின்சென்ட் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது. 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, கோட்டார் மறைவட்ட முதன்மைக்குரு மைக்கிள் ஏஞ்சல் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தலமும் ஒன்று. இங்கு 2 நாள் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று மாலையில் ஜெபமாலை, மாலை வழிபாடு, நற்கருணைஆசீர் போன்றவை நடந்தது. 2-வது நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து போன்றவை நடந்தது.
மாலையில் நற்கருணை பவனி நடந்தது. இந்த பவனி ஆலயத்தின் முன்பு இருந்து புறப்பட்டு தோரோடும் 4 வீதிகள் வழியாக மீண்டும் ஆலய வளாகத்தின் முன்பு நிறைவடைந்தது.
நற்கருணை பவனி செல்லும் பாதைகளில் மக்கள் ஏராளமான மலர்களால் வண்ணமிகு கோலங்கள் போட்டு வரவேற்பு அளித்தனர்.
பவனியை பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு தலைமை ஏற்று நடத்தினார். இறுதியாக மறையுரையும் நற்கருணை ஆசீரும் நடந்தது. இதில் இணை பங்குத்தந்தையர்கள் லெனின், சுரேஷ், பங்குப்பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார், துணைசெயலாளர் தினகரன் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள், பங்குமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் விழா நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். அனைத்து திருவிழா நாட்களிலும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
அக்டோபர் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு தேர் பவனியும் தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா சிறப்பு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு இன்னாசி ராஜசேகரன் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றி தேர் பவனி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ், இணை பங்குத்தந்தை வெல்லிங்டன், பங்கு பேரவை உதவி தலைவர் ஜோசப் அற்புதம், செயலாளர் ஜோஸ்பின் ராணி, பொருளாளர் பெமிலா, இணை செயலாளர் பின்னி மற்றும் பங்கு மக்கள் பக்த சபைகள் பங்குபேரவை, அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

நாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம்.
பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
நாம் வாழும் வீடுகளில் சில வீடுகள் பகல் நேரத்திலும் கூட இருளாய் காணப்படும். அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டுக்கு யாராவது வந்தால் இப்படி வீடு இருளடைந்து காணப்படுகிறதே? என்று கேட்பார்கள். ஜன்னலை திறந்து வையுங்கள், விளக்கை போடுங்கள். அப்போதுதான் வெளிச்சம் (ஒளி) வரும் என்று கூறுவார்கள்.
அநேகருடைய வீடுகளில் கரப்பான் பூச்சி, கொசு மற்றும் பல்வேறு பூச்சிகள் இருப்பதை காண முடியும். இந்த பூச்சிகள் நாம் இரவு நேரத்தில் விளக்கை போட்டவுடன் அந்த வெளிச்சத்தை பார்த்து ஓடி மறைந்து விடும். ஏனென்றால் அவற்றுக்கு இருள்தான் சாதகமாக உள்ளது.ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல, நம்முடைய வாழ்க்கையில் ஒளி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உலகத்தில் நமக்கு அலுவலகங்களிலும் சரி, வீடுகளிலும் சரி விளக்கின் ஒளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருளில் இருக்க நம்முடைய மனம் இடம் கொடுப்பதில்லை.
இந்த உலகத்தில் பகல், இரவு என்று படைத்த தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் எத்தனை விளக்குகள் போட்டாலும் இரவு பகலாக மாறலாம். ஆனால் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்துகொண்டு உலகப்பிரகாரமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களின் இருதயம் இருளாகவே உள்ளது. இந்த இருளை எப்படி போக்கப்போகிறீர்கள்? என்று கேட்கிறார். வேதாகமத்தில் யோவான் 8-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.
என்னைப் பின்பற்றுகிறவன், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே தேவபிள்ளைகளே இப்படி நாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருதயத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம். இந்த தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகள் குறித்து தியானித்து வரும் நாம், வேத வசனங்களை தியானித்து, தேவனுக்காக நம்முடைய இருதயத்தின் கதவுகளை திறப்போம். அப்படி நாம் செய்யும் போது நம் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் நிச்சயமாக ஜீவ ஒளியை பிரகாசிக்கப்பண்ணுவார். ஆமென்.
ஜோசப், திருப்பூர்.

உலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார்.
உலகின் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுளாகிய யகோவா நேரடியாகப் பேசி வந்ததுபோலவே ‘விசுவாசத்தின் தந்தை’ என்று புகழப்படும் ஆபிரகாமிடமும் கடவுள் அடிக்கடி பேசிவந்தார். ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கைத் தனக்குப் பலியாகக் கேட்டு அவரது விசுவாசத்தைக் கடவுள் சோதித்தார். கொஞ்சமும் யோசிக்காமல் தனது மகனை பலிமேடையில் ஏற்றி, அவனைக் கொன்று பலி கொடுக்கக் கத்தியை உருவியபோது, கடவுள் தடுத்தார். இதனால் ஆபிரகாம் கடவுளிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளும் மனிதனாக இருந்தார்.
கடவுள் வழிகாட்டலின்படி கானான் நாட்டில் தனது அண்ணன் மகன் லோத்துவுடன் வசித்து வந்த அவருக்குக் கால்நடை வளர்ப்பே முக்கியத் தொழிலாக இருந்தது. ஆபிரகாம், லோத்து இருவருக்குமே கால்நடைச் செல்வங்கள் பல்கிப் பெருகின. வேலைக்காரர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
இதனால் இருவரது கால்நடைக் கூட்டங்களும் வயிறார உண்ணும் அளவுக்குக் கானானின் இருந்த மேய்ச்சல் நிலம் போதுமானதாக இல்லை. மேலும் ஆபிரகாம்-லோத்து இருவரிடமும் கானானியர்களும் பெரிசியரும் மேய்ப்பர்களாக வேலையில் இருந்தனர். இதனால் இனம்சார்ந்து இவர்கள் தங்களுக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதைக்கண்டு ஆபிரகாம்- லோத்து இருவருமே மனம் வருந்தினர்.
ஆபிராம் லோத்துவிடம், “சகோதரா... நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண் டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இடையில் விரோதம் உருவாக நாமே காரணமாக இருக்க வேண்டாம். நல்ல நோக்கத்துக்காக நாம் பிரிந்து செல்வோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றார். லோத்து கண்ணீர் மல்க இதை ஏற்றுக்கொண்டார்.
யோர்தான் நதி பாய்ந்து வளங்கொழித்த சமவெளியைத் தனக்காகக் தேர்ந்தெடுத்தார் லோத்து. தனது சுற்றமும் கால்நடைகளும் சூழ அங்கே குடியேறினார். ஆபிரகாம் கானான் நாட்டிலேயே தங்கினார். காலப்போக்கில் யோர்தான் சமவெளியின் தெற்கு நோக்கி நகர்ந்த லோத்து, அங்கிருந்த சோதோம் நகரில் நிரந்தரமாகக் குடியேறினார். அதன் அருகிலேயே மற்றொரு பள்ளத்தாக்கு நகரமாக கொமோரா விளங்கியது.
காலம் உருண்டோடியது. அந்த இரட்டை நகரங் களில் வாழ்ந்த மக்கள் மிக இழிவான வாழ்வை வாழத் தொடங்கினார்கள். பாலியல் ஒழுக்கக் கேடுகள் மலிந்துபோயின. ஆபிரகாமைப் போலவே கடவுளுக்கு உகந்த மனிதராக வாழ்ந்துவந்த லோத்து இதைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார்.
பாவத்தின் உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டிருந்த சோதோம், கொமோரா ஆகிய நகரங்களை அழிக்க, கடவுள் முடிவுசெய்தார். எனவே இரண்டு தேவதூதர்களை லோத்துவிடம் அனுப்பி, சோதோம் நகரை விட்டுக் குடும்பத்துடன் வெளியேறும்படி எச்சரித்தார். கடவுளின் கருணையில் நெகிழ்ந்த லோத்து, அங்கிருந்து வெளியேறி உயிர் பிழைத்துக்கொள்ள நினைத்தாலும் தனது மனைவியால் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தார்.
‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நகரில் தனக்குச் சேர்ந்த செல்வங்கள், வீடு என அனைத்தையும் துறந்து செல்லவேண்டுமே’ என லோத்துவின் மனைவி கலங்கினாள். தேவ தூதர்கள், லோத்து, அவரது மனைவி, மகள்கள் ஆகியோரின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சோதோம் நகரத்துக்கு வெளியே விட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்கள். போகும்போது “இங்கிருந்து ஓடிப்போங்கள்; எக் காரணம் கொண்டும் திரும்பிப் பார்த்துவிடாதீர்கள்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து லோத்துவும் அவருடைய மகள்களும் சோதோமை விட்டு ஓட்டமும் நடையுமாகத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த லோத்துவின் மனைவியோ சோதோமை விட்டுச் சிறிது தூரம் வந்ததும், ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன அந்தக் கணமே அவள் உப்புத் தூணாக மாறினாள்.
இரவு முழுவதும் நடந்து, சோதோம் நகரை நீங்கி, சோவார் என்ற சிறிய நகரமொன்றின் எல்லைக்குள் லோத்துவும் அவரது மகள்களும் நுழைந்தபோது சூரியன் உதயமாகிஇருந்தது. அப்போது கடவுளாகிய யகோவா, வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் சோதோம், கொமோரா ஆகிய நகரங்களின் மேல் விழுமாறு செய்தார். அவற்றின் முழு சமவெளியையும், அங்கிருந்த மரங்கள், செடிகொடிகள், கால்நடைகள், மக்கள் ஆகியோரையும் முற்றாக அழித்துவிட்டார்.
இவ்வாறு பாவத்தில் ஊறித் திளைத்த மக்களை அவர்கள் வாழ்ந்த நகரங்களோடு அழித்த கடவுள், கீழ்ப்படியாமல் போன லோத்துவின் மனைவியை ஊப்புத் தூண் ஆக்கினார். கீழ்ப்படிந்து நடந்த லோத்துவையும் அவரது மகள்களையும் காப்பாற்றினார்.

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி நற்கருணை பவனியும், 28-ந்தேதி சப்பர பவனியும் ஆலய வளாகத்திலேயே நடைபெறுகிறது.
தென்காசியில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி நற்கருணை பவனியும், 28-ந்தேதி சப்பர பவனியும் ஆலய வளாகத்திலேயே நடைபெறுகிறது.
தற்போது கொரோனா காரணமாக வழிபாடுகள் சமூக இடைவெளியில் நடைபெறுகிறது. பக்தர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆலயத்திற்குள் வரும் பக்தர்களின் வெப்பநிலையும், ஆக்ஸிஜன் அளவும் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் குறைந்தவர்கள் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
அரசு மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்டம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, விழா நடைபெறும். இந்த ஆண்டு குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என ஆலய நிர்வாகத்தினர் கூறினர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், உதவி பங்குத்தந்தை செல்வ தயாளன், பங்கு பேரவையினர் செய்து வருகிறார்கள்.

அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் அமல்ராஜ் தலைமையில் மாலை ஆராதனையும், அருட்பணியாளர் ஆனி சேவியர் மறையுரையாற்றி, நற்கருணை ஆசீர் வழங்குகிறார். அக்டோபர் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.