என் மலர்
ஆன்மிகம்

அழகப்பபுரம் புனித தெரசம்மாள் ஆலய திருவிழா
அழகப்பபுரம் புனித தெரசம்மாள் ஆலய திருவிழா
அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அழகப்பபுரத்தில் புனித தெரசம்மாள் சிற்றாலயம் உள்ளது. இங்கு 10 நாள் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் அமல்ராஜ் தலைமையில் மாலை ஆராதனையும், அருட்பணியாளர் ஆனி சேவியர் மறையுரையாற்றி, நற்கருணை ஆசீர் வழங்குகிறார். அக்டோபர் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.
Next Story