search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை இயேசு
    X
    குழந்தை இயேசு

    புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் விழா நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். அனைத்து திருவிழா நாட்களிலும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    அக்டோபர் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு தேர் பவனியும் தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா சிறப்பு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு இன்னாசி ராஜசேகரன் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றி தேர் பவனி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ், இணை பங்குத்தந்தை வெல்லிங்டன், பங்கு பேரவை உதவி தலைவர் ஜோசப் அற்புதம், செயலாளர் ஜோஸ்பின் ராணி, பொருளாளர் பெமிலா, இணை செயலாளர் பின்னி மற்றும் பங்கு மக்கள் பக்த சபைகள் பங்குபேரவை, அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×