search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரிசுத்த திருக்குடும்பம்
    X
    பரிசுத்த திருக்குடும்பம்

    மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா தொடங்கியது

    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய பங்கு திருவிழா நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய பங்கு திருவிழா நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெற்றது. இவற்றை அனைத்து பக்தசபை இயக்கங்கள் சிறப்பித்தன.

    3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதை வழிபாட்டுக்குழு மறைக்கல்வி மன்றத்தினர் சிறப்பிக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு விழா திருப்பலி நடக்கிறது. நிர்வாகக்குழுவினர் சிறப்பிக்கிறார்கள். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி திருப்பலியை 1 முதல் 6 வரை உள்ள அன்பியங்களும், 9 மணி திருப்பலியை 7 முதல் 12 வரை உள்ள அன்பியங்களும், மாலை 5 மணி திருப்பலியை 13 முதல் 18 வரை உள்ள அன்பியங்களும் சிறப்பிக்கிறார்கள். அது முடிந்ததும், கொடி இறக்கப்படும்.

    திருப்பலி நேரடி ஒளிபரப்பு ஏ.எம்.என்.டி.வி. மற்றும் யூ-டியூப் ல் உள்ளூர் டி.வி.யிலும் ஒளிபரப்பப்படுகிறது. திருப்பலிக்கு குறிப்பிட்ட அன்பியங்களின் உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக பங்கு கொள்ள வேண்டும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஏ.எஸ்.மைக்கேல்ராஜ், ஊர் தலைவர் ஐ.ஜே.மணி, செயலாளர் லாரன்ஸ் பீட்டர் ஷா, பொருளாளர் ஜோசப் அருள்ராஜ், தணிக்கையாளர் பால்டுவின் புரூஸ் மற்றும் ஊர் நிர்வாகத்தினர், பங்கு இறை மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    Next Story
    ×