என் மலர்
கிறித்தவம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்த நாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி, பெங்காலி உள்பட பல்வேறு மொழிகளில் தினமும் சிறப்பு திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீர் நிகழ்ச்சியும் நடை பெற்றன. விழாவையொட்டி பேராலயம் மின் விளக்கு அலங்காரத்தில்ஜொலித்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது பேராலயத்தின் மணிகள் ஒலிக்க வண்ண மலர்கள் அலங்காரத்துடன் புனித ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டது.
அப்போது அங்கு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “ஆவேமரியா வாழ்க” என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகிய 6 தேர்கள் மின் விளக்குகளின் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன. தேர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
கடற்கரை சாலை வழியாக தேர் பவனி சென்று பேராலய முகப்பிற்கு வந்து அடைந்தது. பின்னர் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியை வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த அனைத்து பக்தர் களும் காணும் வகையில் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் ஆலய வளாகத்தை சுற்றியிருந்த பக்தர்கள் தங்கள் நின்றிருந்த இடத்திலேயே தேர் பவனியை கண்டு களித்தனர்.
விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.
ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று (வெள்ளிக் கிழமை) காலை கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியிறக்கத்துடன் நிறைவுபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணியும் ஒன்று என்பது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. தேர்பவனியையொட்டி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை, வாகனங்கள் மூலம் வந்துள்ளனர். இதனால் வேளாங் கண்ணி பக்தர்களின் கடலில் தத்தளித்தது. அதைதொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மாறை மாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்படுகிறது. பின்னர் 6.15 மணிக்கு பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி வேளாங்கண்ணியில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாயல்குடி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் பத்தாம் நாள் நிறைவாக மாதாவின் உருவத்தைத் தாங்கிய தேரானது முக்கிய வீதிகளில் பவனி வந்தது.
சாயல்குடியில் ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து பங்குத் தந்தையர்களின் ஆடம்பரத் திருப்பலியும், மாதா வைப்பற்றிய மறையுரையும் நடைபெற்றது.
பத்தாம் நாள் நிறைவாக மாதாவின் உருவத்தைத் தாங்கிய தேரானது முக்கிய வீதிகளில் பவனி வந்தது.
சாயல்குடி பங்கைச் சார்ந்த இறைமக்களுடன் சுற்றுவட்டார பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டு மரியே வாழ்க, மாதாவே வாழ்க என்ற கோஷத்துடன் தேரை வீதிகள் வழியாக இழுத்துச் சென்று ஆரோக்கியமாதா ஆலயம் வந்தடைந்தனர். பின்னர் ஆலயத்தில் நடை பெற்ற வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.

புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா பெரிய தேர் பவனி இன்று நடைபெறுவதையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளில் ‘லூர்து நகர்‘ என்ற பெருமையுடன் அன்னை மரியாள் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக வேளாங்கண்ணி புனித மாதா பேராலயம் விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு தேர்பவனி நடைபெற்று வருகிறது. பேராலயத்தில் இருந்து தொடங்கும் தேர் பவனி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்றும் (வியாழக்கிழமை), அன்னையின் பிறந்தநாள் விழா நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு 7.30 மணியளவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னை மாதா எழுந்தருளி பவனி நடைபெறும். அதற்கு முன்னதாக பேராலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைலமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

விழாவை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பக்தர்களை படத்தில் காணலாம்.
பின்னர் பெரிய தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது. அப்போது அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என்று கோஷம் எழுப்புவார்கள். இந்த பெரிய தேர்பவனியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவேண்டி புதிய மாதா பேராலயத்தில் இருந்து மண்டியிட்டு பழைய பேராலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்கின்றனர். விழா நாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.
மேலும், செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும், விழாவையொட்டி பேராலயம், வின்மீண் ஆலயம், பழைய மாதா கோவில், தியான மண்டபம் உள்ளிட்டவை மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

தென்தமிழகத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் அணைக்கரை மாதா ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

9-ம் திருவிழாவான இன்று(வியாழக்கிழமை) மாலை ஆராதனையில் தூத்துக்குடி ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்துகொள்கிறார். கூத்தன்குழி சலேசியன் சபை அதிபர் கஸ்மீர் மறையுரையாற்றுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மாதா தேர்பவனி நடைபெறுகிது. தொடர்ந்து மல்பின் சூசை தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.
9-ம்தேதி மாலை 6 மணிக்கு திருப்பலியும், இரவு அசனவிருந்தும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர், அருட்சகோதரிகள், பங்குமேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கீழை நாடுகளில் ‘லூர்து நகர்‘ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.
கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா‘ என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினந்தோறும் இரவு தேர்பவனி நடைபெற்று வருகிறது. பேராலயத்தில் இருந்து தொடங்கும் தேர்பவனி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது.

விழாவின் 8-வது நாளான நேற்று வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் புதிய பேராலயத்தில் இருந்து மண்டியிட்டு பழைய பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளையும் (வியாழக்கிழமை), அன்னையின் பிறந்தநாள் விழா நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விழாவிற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை காணிக்கையாக வழங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்கின்றனர்.
விழாவையொட்டி தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலையில் வேளாங்கண்ணியில் திடீரென கடல் சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என்று கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு வந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 438-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலையில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. காலையில் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன், ஆலய கொடிமரத்தில் மகிமை திருவிழா கொடியேற்றினார். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
10-ம் திருநாளான வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மகிமை திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
11-ம் திருநாளான 14-ந் தேதி அதிகாலை 4.30 மணி, 5 மணிக்கு திருப்பலி, 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மகிமை திருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. மாலையில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை இருதயராஜ் பர்னாந்து, உதவி பங்குதந்தை ஜஸ்டின் குழந்தைராஜ், ஆன்மிக குரு தெயோபிலஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

சுரண்டை அருகே வாடியூரில் தூய யோவான் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் சப்பரத்தில் மிக்கேல் அதி தூதர், தூய யோவான் மற்றும் மரியன்னை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.
சுரண்டை அருகே வாடியூரில் தூய யோவான் ஆலய 104-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, இன்னிசை நற்செய்தி பெருவிழா, அன்பியக்கலைவிழா, பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், நற்கருணை பவனி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர் சப்பரத்தில் மிக்கேல் அதி தூதர், தூய யோவான் மற்றும் மரியன்னை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் தலைவர் சேசுராஜன், கட்டளைதாரர் அந்தோணி சேவியர், தர்மகர்த்தா சேசுராஜ், உபதேசியார் சவரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் வாடியூர், மரியதாய்புரம், ஆனைகுளம், குறிச்சான்பட்டி சபைகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்டனர்.

யார் யாரெல்லாம் தேவனுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ அவர்களை நிச்சயம் ஆண்டவர் உயர்த்துவார். தேவ கிருபை உங்களில் அளவில்லாமல் பெருகுவதாக!
எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! உயிர்த் தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வுலகில் நடந்த சரித்திரப்பூர்வமான மூன்று சம்பவங்கள் உண்டு. 1. இயேசுவின் பிறப்பு, 2. இயேசுவின் மரணம், 3. இயேசுவின் உயிர்த்தெழுதல்.
அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவர் மரித்தது உண்மை. அதே வேளையில் தாம் சொன்னபடியே மரித்தோரிலிருந்து மூன்றாவது நாள் உயிரோடெழுந்தார். உயிரோடு அருமை இரட்சகர் எழுந்தபோது நடந்த சம்பவங்களை உங்கள் ஆசீர்வாதத்திற்காக எழுதுகிறேன்.
சொல்லுவதை செய்கிறவர்
“அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்”. மத்.28:6
எனக்கன்பானவர்களே, இப்பூமியிலே எத்தனையோ தேவர்கள் தோன்றி சில காலங்களுக்குப் பிறகு மறைந்து போனார்கள். அப்படிப்பட்டவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய சகாப்தமே முற்றுப்பெறுகிறது.
ஆனால், ‘ஆண்டவராகிய இயேசு தாம் ஊழியம் செய்த போது தனக்கு பாடுகள் உண்டென்றும், சிலுவையில் அறையப்பட வேண்டியது அவசியம் என்றும், உலகத்தின் அனைத்து மனுகுலத்திற்காக ஜீவனை கொடுக்க வந்தேன் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்திலிருந்து உயிரோடு எழும்புவேன்’ என்றும் கூறினார்.
அவர் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.
அவர் உங்களுக்கு என்ன வாக்குத்தத்தம் உரைத்தாரோ அதை உங்களில் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். காரணம் அவர் சொல்வதை செய்கிறார். ஆகவே விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை நம்புங்கள்.
உங்களுக்கு முன் செல்லுகிறார்
“சீக்கிரமாய் போய், ‘அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்’ என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்”. மத். 28:7
எனக்கன்பான சகோதர சகோதரியே, உயிர்த்தெழுந்த இயேசு ராஜா செய்த 2-வது காரியம், ‘அவர் உயிரோடு எழுந்தவுடன் சீஷர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் சென்றார்’.
இவ்வார்த்தையின் அடிப்படையில் நான் உங்களுக்கு கூறுவது என்னவென்றால், ‘ஆண்டவராகிய இயேசு நமக்கு முன்பாக செல்கிறவர்’ என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உங்களுக்கு முன்பாக ஏதாகிலும் ஒரு பிரச்சினை வருகிறது என்றால், உங்களுக்கு முன்பாக இருக்கிற அருமை ஆண்டவரைக் கடந்து தான் வருகிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே அவர் எனக்கு முன்பாக செல்லுகிறவர் என்ற உணர்வு எப்போதும் இருக்கட்டும்.
அவர் முன்னே செல்லும் போது கோணலானவைகள் சீராக்கப்படும் அல்லவா.
‘நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’. ஏசா.45:2
காணக்கூடிய தெய்வம்
“அங்கே அவரைக் காண்பீர்கள்... என்றான்”. மத்.28:7
எனக்கன்பானவர்களே, உயிர்த்தெழுந்த ஆண்டவர் மரித்தோரிலிருந்து எழும்பின பிறகு தம்முடைய சீடர் களுக்கு முன்பாக சென்று அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
இது குறித்து அப்போஸ்தலர் பவுல் கூறுகிறதை பின்வரும் வசனங்களில் நாம் காண்கிறோம்:
“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு, அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர் களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு, அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்”. I கொரி.15:3-8
ஆம், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மற்றொரு சுபாவம் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறவர். ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தெய்வமல்லவா?
நீங்களும் அவரை விசுவாசியுங்கள், நிச்சயம் அவர் உங்களுக்குத் தென்படுவார், உங்கள் வாழ்வில் மாபெரும் எழுப்புதலைக் காண்பீர்கள்.
“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்”. ஏசா.55:6
வாழ்த்துகிற தெய்வம்
“அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு வாழ்க என்றார்”. மத்.28:9
ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்தலின் மற்றொரு அம்சம், ‘மரித்த ஆண்டவர் உயிரோடு இருக் கிறார்’ என்ற விடுதலையின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அன்றைக்கு மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் ஓடினார்கள் என்றால் அது எத்தனை அவசரம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதுவரைக்கும் உலகத்திற்காகவும், மனுஷனுக்காகவும் ஓடின நீங்கள் இயேசுவை அறிவிக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பீர்களா? இன்னும் பல கோடி மக்கள் அறியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
கர்த்தருடை பிள்ளையே, அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையை சுவிசேஷமாக நீங்கள் அறிவிக்கும்போது அவர் தாமே உங்களுக்கு எதிர்ப்பட்டு உங்களை வாழ்த்துவார் என வேதம் கூறுகிறது.
யார் யாரெல்லாம் தேவனுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்களோ அவர்களை நிச்சயம் ஆண்டவர் உயர்த்துவார்.
தேவ கிருபை உங்களில் அளவில்லாமல் பெருகுவதாக!
ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54

தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் மாலை 6.25 மணிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் அன்னையின்கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கார், வேன், பஸ்களில் வந்திருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 142-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்றான இயேசுவின் அருமருந்து 17-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப் பெரும் விழாகூட்டுத்திருப்பலியும் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி அவர்களால் நடத்தப்படுகிறது. இரவு 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
மறுநாள் 9- ந்தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகி ஜோசப் அடிகளார், பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமலநாதன் அடிகளார், ஆன்மீக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் உள்பட இருபால் துறவியர்கள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் திருப்பலியுடன் தொடங்குகிறது. இதற்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்குகிறார். பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ் முன்னிலை வகிக்கிறார்.
3-ம் நாள் திருவிழாவில், காலை 9 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். வட்டம் பங்குத்தந்தை சகாயதாஸ் மறையுரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து அன்பு விருந்து நடைபெறுகிறது.
6-ம் நாள் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு சகாய மாதா அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
9-ம் நாள் திருவிழா அன்று காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் மரிய அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டீபன் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி காலை 9 மணிக்கு நடக்கிறது. 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், இணை பங்குத்தந்தை விக்டர் ஆன்றனி, ஆன்மிக தந்தை ஆன்றனி, பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் ராஜ், செயலர் மரியஜாண்சன், இணை செயலர் மரிய ஜாண் வரதராஜன், பொருளாளர் டெய்சி ராணி, மற்றும் பங்கு மக்கள், பக்த சபையினர், இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம் துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாக்கமங்கலம் துறையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பங்கின் குடும்ப திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசைக்கு வரவேற்பு, 6.45 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு ஆயர் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார்.
தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடக்கிறது. 3-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருமுழுக்கு திருப்பலிக்கு அருட்பணியாளர் செல்வராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் வலேரியன் மறையுரை ஆற்றுகிறார். 10 மணிக்கு ரத்த பரிசோதனை முகாம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.
8-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, அருட்பணியாளர் மரிய சூசை மறையுரை ஆற்றுகிறார்.
10-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை ஆற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் அன்டனி அல்காந்தர் மறையுரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது. 6மணிக்கு கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவற்றுக்கு அருட்பணியாளர் ரீகன் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை சி.ராஜ், ஊர் தலைவர் ஆல்பின், செயலாளர் ஜான்மில்ட்டன், பொருளாளர் சேவியர், துணைச்செயலாளர் சிலுவைதாசன் மற்றும் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள், ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.