என் மலர்
நீங்கள் தேடியது "மாதா ஆலய திருவிழா"
- திருச்சி தென்னூர் சங்கீதபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (8-ந்தேதி, வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பேண்டு வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் அன்னையின் வெளி வீதி தேர்பவனி நடைபெறுகிறது
திருச்சி:
திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அன்னையின் ஆண்டுத்திருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் தற்போது புனித ஆரோக்கிய மாதாவின் 110-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியினை திருச்சி புனித பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை பாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
விழாவையொட்டி தினமும் ஆடம்பர பாடல் திருப்பலி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (8-ந்தேதி, வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பேண்டு வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் அன்னையின் வெளி வீதி தேர்பவனி நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (9-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு அன்னையின் உள்வீதி தேர்பவனி நடைபெறுகிறது. 10-ந்தேதி ஆலய முக்கியஸ்தர்கள், சங்கீதபுரம் இளைஞர்கள் மற்றும் தெருவாசிகள் நடத்தும் 32-ம் ஆண்டு அன்னதானம் நடக்கிறது.
இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.அருண்நேரு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.






