என் மலர்
ஆன்மிகம்

ராஜாக்கமங்கலம் துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
ராஜாக்கமங்கலம் துறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாக்கமங்கலம் துறையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பங்கின் குடும்ப திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசைக்கு வரவேற்பு, 6.45 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு ஆயர் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார்.
தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடக்கிறது. 3-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருமுழுக்கு திருப்பலிக்கு அருட்பணியாளர் செல்வராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் வலேரியன் மறையுரை ஆற்றுகிறார். 10 மணிக்கு ரத்த பரிசோதனை முகாம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.
8-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, அருட்பணியாளர் மரிய சூசை மறையுரை ஆற்றுகிறார்.
10-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை ஆற்றுகிறார். 8 மணிக்கு பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் அன்டனி அல்காந்தர் மறையுரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது. 6மணிக்கு கொடியிறக்கம், நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவற்றுக்கு அருட்பணியாளர் ரீகன் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை சி.ராஜ், ஊர் தலைவர் ஆல்பின், செயலாளர் ஜான்மில்ட்டன், பொருளாளர் சேவியர், துணைச்செயலாளர் சிலுவைதாசன் மற்றும் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள், ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story