என் மலர்
கிறித்தவம்
மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந்தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.
22-ந் தேதி காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.
23-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை வழிபாடு நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட இணை பொருளாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்குகிறார். பார்வதிபுரம் பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார்.
24-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பாம்பன் விளை அசிசி ஆஸ்ரமம் அதிபர் மரியராஜ் இருதயம் தலைமை தாங்குகிறார். பள்ளவிளை பங்குத்தந்தை பிரான்சிஸ் மறையுரை நிகழ்த்துகிறார். பவனியை ஆண்ட்ரூஸ் வழி நடத்துகிறார்.
29-ந் தேதி 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், திருமுழுக்கும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.
30-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
1-ந் தேதி 10-ம்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு நற்கருணை வழிபாடும், 8 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜா மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், நிதிக்குழுவினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

உனக்கு இருக்கும் சொத்து சுகங்கள் எல்லாம் உன்னுடையது அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
மத்தேயு என்ற நற்செய்தியாளர் எழுதிய நற்செய்தியைப் பற்றி ஒரு கணம் சிந்திப்போம். செயல்பட முயற்சிப்போம். இதோ அந்த நற்செய்தியின் வாசகம்.
அக்காலத்தில் செல்வம் பெற்றிருந்த இளைஞர் ஒருவர், இயேசு பெருமானிடம் வந்தார். அவரிடம் நேரிடையாகவே, கீழ்க்கண்ட கேள்வியைத் தொடுக்கிறார்.
“போதகரே! நிலையான வாழ்வைப் பெறுவதற்கு, என்ன நன்மையை நான் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
இயேசு பெருமான் அவரிடம், “நன்மை செய்வதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நிலையான வாழ்வை அடைய விரும்பினால், ‘கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுகும்’ என்று கூறினார்”.
அந்த இளைஞர் அவரிடம், ‘எவற்றை?’ என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக அவரிடம், “கொலை செய்யாதே! விபசாரம் செய்யாதே! களவு செய்யாதே! பொய்ச்சான்று சொல்லாதே! பெற்றோரை மதித்து நடந்து கொள். மேலும் உன் மீது நீர் அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்று கூறினார்.
அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். இன்னும் என்னிடம் என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு பெருமான், “நிறையுள்ளவராக விரும்பினால், நீர் போய் உம்முடைய உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணுலகில் நீர் செல்வராக இருப்பீர். பிறகு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர், மிகவும் வருத்தத்தோடு, அவ்விடம் விட்டு அகன்று சென்று விட்டார்.
ஏனென்றால், அவருக்கு ஏராளமான ‘சொத்துகள்’ இருந்தன.
இந்த நற்செய்தியைப் படிக்கும் நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
இயேசு பெருமானிடம் வந்த இளைஞர், அவரிடம் முதலில் தொடுக்கும் வினாவைக் கவனிப்போம்.
நிலையான வாழ்வைப் பெறுவதற்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும்? என்று கேட்கிறார்.
இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை உணர்ந்ததனால், இக்கேள்வியைக் கேட்டாரா? அல்லது இருக்கும் நிலையிலேயே இருந்து கொண்டு, நிலையான வாழ்வைப் பெறத் துடிக்கிறாரா? என்ற சந்தேகம், நம்மிடையே வலம் வருகிறது. எப்படியிருந்தாலும் நிலையான வாழ்வு ஒன்று வேண்டும் என்பதை அனைவருமே விரும்பத்தான் செய்கின்றனர்.
அப்படிப்பட்ட நிலையான வாழ்வை, நன்மை செய்தால் அடைய முடியும் என்பதை உணர்ந்த அந்த இளைஞன், நிலையான வாழ்வை, எளிதில் பெற்று விட வழியிருக்கிறது என்பதை எண்ணி இப்படி ஒரு கேள்வியைத் தொடுத்தாரா?
உடனே இயேசு பெருமான் மறுமொழியாக, நன்மை செய்வதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்தால், நிலையான வாழ்வைப் பெறலாம் என்று வழி காட்டு கிறார்.
கட்டளைகளை அறிந்திராத இளைஞர், ‘எவற்றை’ என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.
‘கொலை, களவு, விபசாரம், பொய்ச்சான்று போன்றவற்றைச் செய்யாதே - இதுவே கட்டளை’ என்பதை எடுத்துரைக்கிறார், இயேசு பெருமான்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்து விட்டதாக இளைஞர் பதில் கூறுகிறார். அதோடு விட்டு விடாத அந்த இளைஞர், ‘இன்னும் என்னிடம் வேறு என்ன குறை இருக்கிறது’ என்றும் வினாவைத் தொடர்கிறார்.
அந்த இளைஞனைப் பற்றி அறிந்தவராக இருந்த காரணத்தினால், இப்படி ஒரு செயலைச் செய்யச்சொல்கிறார்.
இதோ! இயேசு பெருமான் சொன்ன அந்த வார்த்தைகளை நன்கு கவனிப்போம்.
“நிறைவுள்ளவராக விரும்பினால், உம் முடைய உடைமைகளை எல்லாம் விற்று, ஏழை மக்களுக்குக் கொடும். அப்படிச் செய்தால் வான் வீட்டில், நீர் செல்வம் உடையவராக இருப்பீர். பிறகு வந்து என்னைப் பின்பற்றும்” என்று கூறினார்.
இவ்வுலகிலே நிரந்தர வாழ்வைச் சொத்து சுகங்களோடு இணைந்து அனுபவிக்க எண்ணும் இவர் எப்படி இதற்கு ஒப்புக் கொள்வார்?
அதனால் இவ்வார்த்தைகளைக் கேட்ட ‘செல்வந்த இளைஞர்’ அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டார்.
இந்நற் செய்தியை இக்காலத்திற்கு ஏற்றாற்போல் சிந்தித்துப் பாருங்கள்.
சிலர் வாழையடி வாழையாய்ச் சொத்துகளைச் சேர்ப்பதும், அவற்றைத் தானும், தன் வாரிசுகளுமே அனுபவித்து மகிழ்வதும், நம்மிடையே வாழும் ஏனைய மனிதர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதும் வாடிக்கையாகப் போய் விட்டது.
எந்த மனிதரும் இந்த உலகில் நிரந்தரமாக வாழ்ந்து விடப்போவதில்லை. இந்நிலையை உணர்ந்தும், ஏன் இந்த நிலை? ‘தான்’ ‘தனக்கு’ என்று வாழ்வதால் என்ன பயன்? சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் இயேசு பிரான், இவ்வார்த்தைகளைக் கூறுகிறார், “அழியாத சொத்தை நீ அனுபவிக்க வேண்டுமா? அழியும் சொத்துக்கு ஆசைப்படாதே! அழியாத அந்தச் சொத்தைத் தேடு. அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறுகிறார்.
இவ்வாசகத்தில் இருந்து நாம் உணர்வது என்ன? நீ உன் மீது அன்பைப் பொழிவது போல, உனக்கு அடுத்திருக்கும் அனைவர் மீதும் அன்பைப் பொழி. அவ்விதம் பொழிந்தால், உனக்கு, ‘தான்’, ‘தனக்கு’ என்ற சுயநல எண்ணம் வர வாய்ப்பில்லை. தான், தனக்கு என்பதெல்லாம், சுயநலம் என்ற எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.
நிலையான வாழ்வும், நிலைத்த செல்வமும் இங்கு கிடையாது. இச்செல்வங்கள் அழியக்கூடியவை. கள்வர்கள் அபகரித்துக் கொள்வர் என்பதையெல்லாம், பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில், நற்செய்தி வாயிலாக, இயேசு பெருமான் எடுத்துரைக்கிறார்.
சில கட்டளைகளை கடைப்பிடிப்பதால் மட்டும், நிரந்தர வாழ்வை அடைந்து விட முடியாது.
உனக்கு இருக்கும் சொத்து சுகங்கள் எல்லாம் உன்னுடையது அல்ல என்பதை முதலில் உணர வேண்டும். அவ்விதம் உணர்ந்தால், ‘வெறுமையை’ உணர்ந்தவனாக வெளியே வர முடியும். அவ்விதம் வெறுமையை உணர்ந்து விட்டால், உன்னை அறியாமலேயே, ‘பிறர் சிநேகம்’ அதாவது ‘பிறர் மேல் அன்பு’ என்பது இயல்பாக வந்து விடும்.
பிறகு வாழ்க்கைப் பயணம் எளிதாகி விடும். நிரந்தர வாழ்வை நோக்கிப் பயணம் தொடர்ந்து விடும். இந்த நற்செய்தியைப் படிப்போர் முதலில் எண்ணுங்கள். பிறகு நல்வழியில் செயல்படுங்கள். மனித சமுதாயத்தில் நேர்மைத் தங்கங்களாக ஒளி வீசுங்கள். அன்பு விசாலமானது. அதுவே உயிரைப் பலப்படுத்தக் கூடியது என்பதை உணருங்கள்.
- செம்பை சேவியர்.

இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கவனித்தால் மட்டும் போதாது. எக்கருத்து சொல்லப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நற்செய்தியாளர் மத்தேயுவின் நற்செய்தியைச் செவிமடுப்போம்.
பரிசேயர், இயேசு பெருமானை நெருங்கி, பெருமகனாரைச் சோதிக்கும் எண்ணத்துடன், ‘ஒருவர் தன்னுடைய மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு, விலக்கி விடுவது முறையா?’ என்று கேட்டனர். அதற்கு மறு மொழியாக, ‘படைக்கும் பொழுதே கடவுள், ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்று, நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?’ என்று கேட்டார். மேலும் அவர், ‘ஆகவே கணவன், தன் தாய், தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்து இருப்பான். இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள். இனிமேல் அவர்கள் இருவரும் இருவர் அல்லர். ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும்’ என்றார்.
அவர்கள், இயேசு பெருமானைப் பார்த்து, ‘அப்படியானால், மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து, மனைவியை விலக்கி விடலாம் என்று, ‘மோசே’ கட்டளையிட்டது ஏன்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் மறுமொழியாக, ‘உங்களின் கடின உள்ளத்தின் பொருட்டே, உங்கள் மனைவியரை விலக்கி விடலாம்’ என்று, ‘மோசே’ உங்களுக்கு அனுமதி அளித்தார்.
‘ஆனால் தொடக்க காலம் முதல் அவ்வாறு இல்லை. பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி, வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டு, தன் மனைவியை விலக்கி விட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
அவருடைய சீடர்கள், அவரை நோக்கி, ‘கணவன், மனைவியர் உறவானது இத்தகையது என்றால், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது’ என்றார்கள். அதற்கு அவர், ‘அருட்கொடை பெற்றவர் அன்றி, வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர், பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சில பேர், மனிதரால் அந்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் சிலர், விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தங்களையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் ஏற்றுக் கொள்ளட்டும்’ என்றார்.
இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கவனித்தால் மட்டும் போதாது. எக்கருத்து சொல்லப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இயேசு பெருமகனாரின் போதனை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
முக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இக்கருத்தை ஆராய்வோம்.
பரிசேயர்கள், இயேசு பெருமானைச் சோதிக்கத் திட்டமிட்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். ‘ஒருவர் தன்னுடைய மனைவியை, எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?’ என்று தொடங்குகிறார்கள். அவர்களுக்கு வேண்டுமென்றால், பதில் சொல்ல முடியாமல் இருக்கலாம். எல்லாம் அறிந்த இயேசுவுக்கு விடை சொல்லத்தெரியாதா?
காரணம் கண்டுபிடிக்க முயலும் அவர்களுக்கு, நேரான பதிலை உடனே சொல்லாமல், இவரே ஒரு கேள்வியைத் தொடுக்கிறார்.
‘இவ்வுலகில், கடவுள் படைக்கும்பொழுதே, ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்று மறைநூலில் வாசித்ததில்லையா?’ என்ற எதிர் கேள்வியை போடுகிறார். இதைச் சொல்லி விட்டு, அதோடு விட்டு விடாமல், மேலும் தொடர்கிறார் என்பதையும் எண்ணிப் பார்ப்போம்.
ஆணும் பெண்ணுமாகப் படைத்தது எதற்காக? என்பதற்குத்தான் அடுத்து வரும் செய்தி விளக்கமாகிறது.
ஆகவே கணவனானவன், தன் தாய், தந்தையரை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்து இருப்பான். இருவரும் ஒரே உடல்; அவர்கள் இனிமேல் இருவர் என்று எண்ணக்கூடாது.
இக்கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ‘மணமானவன், தன்னுடைய தாய் தந்தையரைப் புறந்தள்ளி விட்டு’ என்ற கருத்து புலப்படுவதுபோலத் தோன்றலாம். அப்படியல்ல, சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகப் பிரிந்துபோய் வாழ வேண்டும் என்பது பொருளல்ல.
ஒருவன் தன் தாயை நேசிக்கிறான் என்பதற்காக, பிற தாய்மார்களை வெறுக்கிறான் என்பது பொருள் அல்ல.
உடலால் சேர்ந்து வாழ வேண்டும். அவ்வாழ்வில் ‘அன்பு’ பலப்பட வேண்டும். யாரும் பிரித்து விடக்கூடாது. மனிதனுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆகவே, ‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும்’ என்று கூறு கிறார்.
இதற்கு மேலும் பரிசேயர் கூட்டம், அவரை விடுவதாக இல்லை. சோதிக்க வந்தவர்கள் விடுவார்களா? எப்படியாவது அவரை மடக்கி விட வேண்டும் என்றல்லவா, துடியாய்த் துடிப்பார்கள்.
வேறு ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். இக்கேள்வி அக்காலத்தில் ‘மோசே’யின் கட்டளைக்கு உட்பட்டதாக இருக்கிறது.
‘அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து விட்டு மனைவியை விலக்கி விடலாம்’ என்ற மோசேயின் கட்டளையை எடுத்துக் காட்டுகிறார்கள்.
இயேசு பெருமான் தக்க பதிலை அவர்களின் உளப்பாங்கை வைத்தே கூறுகிறார்.
‘உங்களின் கடின உள்ளத்தின் பொருட்டே’ இப்படியொரு கட்டளை, மோசேயிடம் இருந்து வருகிறது.
அப்படியென்றால் என்ன?
‘எப்படியும் மணவிலக்குப் பெற வேண்டும் என்ற கடின உள்ளம் இருப்பதால், இப்படிச் சொல்லியிருக்கிறார்’, என்கிறார்.
இயேசு பெருமான் சொல்கிறபொழுது, இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்து கிறார். எப்படி?
தொடக்க காலம் முதல் அப்படி இல்லை. ‘பரத்தமையில் ஈடுபட்டால் மட்டும்’ என்று சொல்லி விட்டு, விளக்கம் அளிக்கிறார்.
அக்காலத்தில் ‘பரத்தமை’ (விபசாரம்) என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. வேறு காரணங்களுக்காக விலக்கி வைப்பவனும், விபசாரம் செய்கிறார் என்கிறார்.
அவர்களும் அவரை விட்டபாடில்லை. கணவன்-மனைவி உறவானது இத்தகையது என்றால், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்று வாதிடுகிறார்கள்.
அதற்கு அவர் சொல்லும் பதில் அர்த்தம் உள்ளது, வாழ்க்கைக்கு ஏற்றது.
ஆகவே புதிய கருத்தைக் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறார்:
‘அருள் கொடை பெற்றவர்களைத் தவிர வேறு எவரும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சொல்லி விட்டு, ‘பிறவியிலேயே மண உறவு கொள்ள இயலாதவர்களையும், மனிதரால் அந்நிலைக்குத் தள்ளப்படுபவர்களையும், மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுபவர்களையும், தங்களைத் தாங்களே விண்ணரசின் பொருட்டு ஆக்கிக் கொள்பவர்களையும் பிரித்துக் காட்டி, ஏற்றுக் கொள்பவர் ஏற்கட்டும்’ என்ற புதிய கருத்தை விதைக்கிறார். நாமும் சிந்திப்போமாக!

கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் அற்புதர். உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்யக்கூடியவர். மூன்றாம்நாள், மரித்தோரி லிருந்து உயிர்த்தெழுந்து இன்றும் அற்புதமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த தேவன் உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்”. யோபு 9:10
அன்று கானாவூர் கல்யாண வீட்டிலே முதல் அற்புதத்தை செய்த ஆண்டவர் உங்கள் குடும்பத்திலும் அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.
“இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்”. யோவான் 2:2
கானாவூர் கல்யாணத்தில் திராட்சை ரசம் குறைவுபட்ட போது அந்த திருமண வீட்டிலே இயேசு அற்புதம் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? இயேசு அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களை செய்யவேண்டுமானால், அவருக்கு முதலிடம் கொடுங்கள். ஒவ்வொருநாளும் காலை வேளையில் அவரோடு பேசுங்கள். அவர் வாசற்படியில் நின்று தட்டுகிறவர். அவருக்கு உங்கள் உள்ளக்கதவைத் திறந்தால் அவர் உங்களுக்குள் உலாவி உங்களோடு வாசம் பண்ணுவார். உங்கள் குடும்பத்தில் வருகிற எல்லா போராட்டங்களையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி உங்களுக்கு அற்புதம் செய்வார்.
“திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்”. யோவான் 2:3
கல்யாண வீட்டில் ஒரு குறைவு ஏற்பட்டபோது இயேசுவின் தாயார் இயேசுவிடம் சொன்னார்கள். உடனே ஆண்டவர் குறைவுகளை நிறைவாக்கி ஒரு அற்புதம் செய்தார்.
உங்கள் குடும்ப வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சனையோ, போராட்டமோ, வியாதியோ, நஷ்டமோ ஏற்பட்டால் உடனே ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுங்கள். இன்று அநேகர் மனுஷரைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என அவர்களையே நோக்குகிறார்கள். ஆனால் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவரிடம் உங்கள் பிரச்சனைகளையும், குறைவுகளையும் சொல்வீர்களேயானால் நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார்.
இயேசுவுக்கு கீழ்ப்படியுங்கள்
“இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்”. யோவான் 2:7
கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் ஆண்டவர் என்ன சொன்னாரோ அதன்படி செய்ததால் தான் சாதாரண தண்ணீர் ருசியுள்ள திராட்சரசமானது.
பிரியமானவர்களே! ஆண்டவர் ஜெப வேளையிலோ அல்லது வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தர் நல்லவர். நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்வில் பெரிய அற்புதங்களைச் செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார். சிறிய காரியமோ, பெரிய காரியமோ தேவனுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பெரிய பெரிய அற்புதங்களை தேவன் உங்கள் வாழ்வில் செய்வார்.
இந்த நாளில் கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவு களை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

சின்னப்பாவத்தையும் நியாயப்படுத்தினோம் என்றால், அதை வெல்வதற்கு இறைவன் தரும் ஆயுதங்களால் பயனில்லாமல் போய்விடும்.
உலகத்தில் ஒவ்வொருவரையும் அவர்களின் குணநலன்களை வைத்தே தரம் பிரிக்கிறோம். அதற்கேற்றபடி அவர்களுடனான பழக்கத்தை ஏற்படுத்துகிறோம்.
பக்தனும் அவனது பக்திக்கான குணங்களின் மூலமே உலகத்தால் அடையாளம் காணப்படு கிறான். வெறும் வெளிஅடையாளங்கள் மட்டுமே பக்தியை வெளிப்படுத்துவதில்லை. இயல்பு குணங்களுடன் வாழ்பவரையும், பக்தி குணங்களுடன் வாழ்பவரையும் இனம் பிரிப்பது அவர்களின் அன்றாட நடத்தைதான்.
பக்தி நிறைந்த குணங்களுடன் உலகில் வாழ்வது மிகப்பெரிய சவால்தான். அதுவும் இயேசு குறிப்பிட்டுள்ள பக்திக்கான குணங்களை பின்பற்றுவதற்கு இறைவனின் பலம் கிடைக்காவிட்டால் அது முடியாமல் போய்விடும்.
வேதத்தில் இயேசு கூறியுள்ள ஜெபம் போன்ற தனிப்பட்ட ஒழுக்கங்களை முழுமனதுடன் பின்பற்றாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி நிலையில் இருந்து விலகும் நிலைக்கு பக்தன் தள்ளப்பட்டுவிடுவான். இந்த நிலை உடனே தெரிவதில்லை.
உதாரணமாக, உண்மை பக்திமார்க்கத்தில் இருக்கும் ஒருவனை, இறைவனின் எதிரியாக கருதப்படும் சாத்தான் திடீரென்று கொடும் பாவங் களில் வீழ்த்திவிடுவது மிகவும் கடினம். ஆனால் மிகநுண்ணிய அளவில் இச்சைகளை அவனது மனதுக்குள் நுழையச் செய்துவிட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி, கொடிய பாவங்களை நோக்கி பக்தனை அவனால் தள்ளிச்செல்ல முடியும்.
இந்தத் தந்திரத்தை பயன்படுத்தி மிகப்பெரிய பக்தனையும் ஒரு கட்டத்தில் சாத்தான் வீழ்த்தி விடுகிறான். அதற்கென்று ஒரு காலஅளவை அவன் நிர்ணயித்துக்கொள்கிறான். உலகில் அப்படி இச்சையிலும், பொருளாதார ரீதியிலும் அவன் வீழ்த்திய பக்தர்களின் எண்ணிக்கை அனேகம். நுண்ணளவில்கூட இச்சைக்கு இடம் கொடுக்காத பக்தர்களை அவனால் ஒன்றும் செய்ய இயலாது.
பக்தியின் ஆரம்பகட்டத்தில் பாவத்தை எதிர்ப்பதில் பக்தன் மிகத்தீவிரம் காட்டுகிறான். ஆனால் பொருளாதார தேவைகள் எழும்போது அநீதியான பணத்தை தவிர்ப்பதில் பக்தர்கள் பலர் சோர்ந்துபோகிறார்கள். அநீதியான பணவரவு தேவையில்லை என்று ஒரேயடியாக முடிவு எடுக்கும் பக்தனிடம் சாத்தான் செயல்பட முடியாது.
ஆனால் அதை ஏற்பதா, தவிர்ப்பதா என்ற இரண்டுங்கெட்டான் மனநிலை எழும்போதுதான், ஆசையையும், தேவையையும் காட்டி சாத்தான் நெருக்கடி கொடுக்கிறான். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில்தான் பக்தர்கள், இறைப்பணியாளர்கள் பலர் சோர்ந்து போகிறார்கள்.
விளைவு, முதலில் கொஞ்சமாக அவர்கள் அனுமதிக்கும் அநீதியான சம்பாத்தியம், பின்னர் அதையே நம்பி இருக்கும் அளவுக்கு அவர்களை சாத்தான் இழுத்துச் சென்றுவிடுகிறான்.
அதுபோலத்தான் இச்சையைத் தூண்டும் படங்கள், பாடல்கள், காட்சிகளை பக்தியின் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்க்கும் பக்தன், போகப்போக பக்திக்கான தனிப்பட்ட ஒழுங்குகளை பின்பற்றுவதில் சற்று தொய்வடையும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த காலகட்டத்தில் லேசாக அவற்றின் பக்கம் பார்வையைத் திருப்புகிறான்.
உடனே அவை அவனது மனதில் பதிந்துகொண்டு சிந்தனைக்குள் நுழைகிறது. பின்னர் சிந்தனை தூண்டப்படுவதும், அந்த சிந்தனைக்கு இரை போடுவதற்காக மீண்டும் கவர்ச்சிக் காட்சிகளை நோக்கி கண் போவதும் நிகழ்கிறது.
இப்படி இச்சை ரீதியான பார்வை, பேச்சு, சிந்தனை ஆகியவற்றை விலக்க முடியாத அளவுக்கு பக்தன் போய்விடுகிறான். இப்படி ஒவ்வொரு குணத்திலும் பக்தனுக்கு வீழ்ச்சி நேரிடும் சூழல் வருகிறது.
ஆனால் இப்படிப்பட்ட வீழும் நிலையை ஆரம்பத்திலேயே உணர்ந்துகொள்ளும் பக்தனே ஞானவான். அவன் அதில் நீடிக்காமல் மீண்டும் தன்னை சீர்படுத்திக்கொள்வதற்கு கடும் போராட்டத்தை மேற்கொள்கிறான்.
உபவாசம், ஜெபம் என பல்வேறு பக்திக்கான சுயகட்டுப்பாடுகளை தனக்கென்று நியமித்து மெல்ல மெல்ல மேலேறுவான்.
ஆனால் பலர் அதை உணருவதில்லை. பாதிப்புகள் தொடர்ந்து விடுவதால் பக்தர்கள், இறைப்பணியாளர்கள் பலர் நெடுகச்சென்று அநீதிக்குள் சிக்கிவிடுகின்றனர். பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் போய்விடுவதால், அநியாய சம்பாத்தியம், மனதளவிலான இச்சைகள் ஆகியவற்றை தனக்குத்தானே நியாயப்படுத்தும் நிலைக்கு அவர்கள் போய்விடுகிறார்கள்.
இதுதான் பக்தியில் இருந்து அவர்கள் முழுமையாக வீழ்வதற்கான தொடக்கமாக அமைந்து விடுகிறது. பாவம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை பக்தன் முழுமனதோடு எதிர்த்தால், அதற்குத் துணையாக இறைவன் அளிக்கும் பலம் கிடைக்கிறது.
ஆனால் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அந்தப் பாவத்தை நியாயப்படுத்திவிட்டால், அதை எதிர்ப்பதற்கு பக்தனின் சுயபலம்கூட துணைக்கு வராது. எனவேதான் படிப்படியாக அவனை அறியாமலேயே அதைப் பின்தொடர்ந்து ஒரு கட்டத்தில் இச்சையை சரீர ரீதியாகவும் நிறைவேற்றும் சூழ் நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகிறான். இதற்காக சாத்தான் ஆங்காங்கே கண்ணிகளை தயாராக வைத்திருக்கிறான்.
‘பிசாசின் கண்ணியில் விழாதபடிக்கு’ என்று எச்சரிக்கும் வேதம் (1 தீமோ.3:7), ‘நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்’ என்றும் (எபே.6:11) கூறுகிறது.
பாவங்களை அண்டாமல் வெற்றி கொள்ளக் கூடிய ஆவியின் பட்டயங்களையே, இறைவன் தரக்கூடிய ஆயுதங்கள் என்று வேதம் கூறுகிறது.
‘நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகியவற்றை மார்புக்கவசம், தலைக்கவசம் என்று வேதம் வர்ணிக்கிறது’ (1 தெச.5:8). இவையெல்லாம் தடுப்பு ஆயுதங்கள்.
கிறிஸ்தவ பக்திக்குள் வரும் ஒவ்வொருவரும் சோதனை போன்ற கடின பாதையை கடந்து செல்வது அவசியம் என்றாலும், எந்தக்கட்டத்திலும் பக்திக்கான சுயஒழுக்க நிலையில் இருந்து மாறுவதை கொஞ்சமும் அனுமதித்துவிடக்கூடாது.
மிகச்சிறிய பொய், கவர்ச்சியானவற்றின் மீது சின்னப்பார்வை, சிறிய வெகுமதிகளையும் பெறும் ஆசை உள்ளிட்ட சிறிய பாவங்களைக்கூட அனுமதிக்கமாட்டேன் என்று பக்தியை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் சுயஒழுக்க முறையும், பாவத்தை ஜெயிப்பதற்கு இறைவன் தரும் தடுப்பு ஆயுதங் களில் ஒன்றுதான்.
சின்னப்பாவத்தையும் நியாயப்படுத்தினோம் என்றால், அதை வெல்வதற்கு இறைவன் தரும் ஆயுதங்களால் பயனில்லாமல் போய்விடும். பின்னர் பெரிய பாவங்களை எதிர்கொள்ளும்போது நிராயுதபாணியாகி, அதனிடம் சரணடைந்து, பக்தியை தொலைக்க வேண்டியதாகிவிடும்.
சிந்திப்போம், எச்சரிக்கை அடைவோம்.

செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை ஆகியன நடந்தன. 9-ம் திருநாளன்று தேர் பவனி நடந்தது.
உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ், பாளையங்கோட்டை ஆயர் இல்ல பங்குத்தந்தை ராபின், அகரகட்டு பங்குத்தந்தை செல்வராஜ், கடையம் பங்குத்தந்தை மனோ, செங்கோட்டை பங்குத்தந்தை பிளேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் ஊர் பொறுப்பாளர்களும், இறை மக்களும் செய்திருந்தனர்.

நற்செய்தி நமக்குக் காட்டும் இந்தச் செய்திகள், நம்மிடமும் இப்பண்புகள் வளர வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. நாமும் அன்பிலும், பண்பிலும், தாழ்ச்சியிலும், பொறுமையிலும் சிறந்து வாழ முற்படுவோம்.
புனித லூக்கா என்ற நற்செய்தியாளர் எழுதிய இந்த நற்செய்தியைப் பற்றி சிந்திப்போம்.
அந்நாட்களில் மரியா, ‘யுதேயா’ என்ற மலை நாட்டில் உள்ள, ஓர் ஊருக்கு வேகமாகச் சென்றார். அங்கிருந்த சக்கரியாசின் வீட்டை அடைந்தார். ‘எலிசபெத்’ என்ற பெண்மணியை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத் கேட்டார். அப்பொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை, ‘அக்களிப்பால் (மகிழ்ச்சியால்) துள்ளியது’. அந்நேரம், எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்பொழுது எலிசபெத், மரியாவைப் பார்த்து, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம்முடைய வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. என் ஆண்டவரின் அன்னை, என்னிடம் வர ‘நான் யார்?’. உம் வாழ்த்துரை, என் காதில் விழுந்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை பெரு மகிழ்வால் துள்ளியது. ஆண்டவர், உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நீர், பேறு பெற்றவர்” என்றார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மரியா, பின் வருமாறு கூறுகிறார்:
“ஆண்டவரை எனது உள்ளமானது, போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என்னுடைய மீட்பராக இருக்கக் கூடிய கடவுளை எண்ணி, என் மனம் பேருவுவகை கொள்கின்றது. ஏனென்றால், அவர் தம் அடிமையின் தாழ்ந்த நிலையைக் கண்ணோக்கினார். இது முதல், எல்லாத் தலைமுறையைச் சார்ந்தவர்களும், என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராக இருக்கக்கூடிய கடவுள், எனக்கு அரும்பெரும் செயல்களைச் செய்துள்ளார். ‘தூயவர்’ என்பதே, அவரின் பெயராகிறது. அவருக்குப் பயந்து நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய், அவர் தன் இரக்கத்தைக் காட்டி வருகிறார். அவர் தன்னுடைய தோள் வலிமையைக் காட்டியுள்ளார். மனதில் செருக்குடன் இருப்பவரைச் சிதறடித்து வருகிறார்.
வலிமை உடையவர்களை, அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்ந்த நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை பல்வேறு நலன் களால் நிரப்பியுள்ளார். செல்வந்தர்களை வெறுங்கையராக அனுப்பி விடுகிறார். தம் மூதாதையருக்குச் சொல்லியபடியே, அவர் ஆபிரகாமையும், அவர் தம் வழி மரபினரையும், என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் வைத்துள்ளார். தம் ஊழியராகிய இஸ்ரவேலுக்கு என்றும் துணையாக இருந்து வருகிறார்”.
மரியா மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பிறகு, தன் வீடு திரும்பினார்.
நீண்டதொரு நற்செய்தியைப் படிக் கின்றபொழுது, நம் கண் முன்னே, மரியாளின் தாழ்ச்சியைக் காண முடிகிறது.
இயேசுபிரானையே கருத்தாங்கி இருக்கும் ‘மரியாள்’, ‘எல்லாமே இறைவனின் சித்தம்’ என்பதை உணர்ந்தவராய்ச் செயல்படுகிறார்.
ஆம்! தன் உறவினரும், தோழியுமான ‘எலிசபெத்’தைச் சந்திக்கச் செல்லும்பொழுது, இருவருமே கருத்தாங்கி இருக்கின்றனர்.
ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்ற பொழுது, ‘இருவர் வயிற்றிலும் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது’ என்று படிக்கிறோம்.
முதல் வாழ்த்து, மரியாளிடம் இருந்து வருகிறது. அதற்குப் பதில் வாழ்த்தாக, ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர்’ என்ற வாழ்த்தை, எலிசபெத் மூலம் மரியா பெறுகிறார். அதோடு மட்டும் அவர் நின்று விடாமல், ‘உம்முடைய வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே’ என்ற கருத்தைப் பதித்து விட்டு, ‘என் ஆண்டவரின் அன்னை என்னிடம் வர நான் யார்?’ என்ற கேள்வியைத் தனக்குள்ளே எலிசபெத் கேட்டுக்கொள்கிறார்.
மரியாள், எலிசபெத்தை வாழ்த்தியவுடன், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை, மகிழ்ச்சியால் துள்ளியதாக எலிசபெத் கூறுகிறார்.
அதோடு மட்டும் அல்லாமல், மரியாளின் அடக்கத்தையும், நம்பிக்கையையும் அவரிடமே எலிசபெத் எடுத்துரைக் கிறார்.
ஆம்! இயேசு பிரான் தன் வயிற்றில் இருந்து வெளிப்படப் போகிறார் என்ற செய்தியைக் கேட்ட அன்னை மரியாள், ‘இதோ, நான் ஆண்டவரின் அடிமை. அவர் சித்தப்படியே ஆகட்டும்’ என்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் என்பது செய்தி.
அதனால்தான் இந்தச் சந்திப்பின்போது, எலிசபெத், ‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும்’ என்கிறார். அதோடு மட்டும் நின்று விடவில்லை. ‘நீர் பேறு பெற்றவர்’ என்ற வார்த்தையையும் கூறுகிறார்.
மரியாளின் அடக்கமும், பணிவும் நற்செய்தியின் இறுதிப்பத்தியில் வெளிப்படுவதைக் காண்போம்.
‘ஆண்டவரின் அடிமையான என்னை, அவர் தேர்ந்தெடுத்ததால், இனி வரக் கூடிய எல்லாத் தலைமுறையினரும், என்னைப் பேறு பெற்றவள் என்பர்’ என்கிறார்.
அதோடு ஆண்டவரின் செயல்பாடு களையும் விளக்கமாக எடுத்துரைக் கிறார்.
‘வலிமை உடையவர்களை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை உயர்த்துகிறார். செல்வரை வெறுங்கைய ராகவும், பசித்தோரை, நலன்களால் நிரப்பியும் அனுப்புகிறார்’ என்கிறார்.
இப்படியாக, ஆண்டவரின் வலிமை என்ன? அவரிடம் யார், யார், எப்படி, எப்படியெல்லாம் நன்மைகளை அடைகின்றனர். யார் யார், எப்படி எப்படியெல்லாம் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றெல்லாம் விரித்துரைக்கப்படு கிறது.
இந்த நற்செய்தியை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள்.
எலிசபெத் என்பவர் நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தபோது, வயது முதிர்ந்த சக்கரியாசுக்கு, குழந்தைப் பேற்றை ஆண்டவர் அருளியிருக்கிறார்.
இருவரும் இறைவனுடைய சித்தப் படியே நடப்பவர்கள். அவர்களுடைய நம்பிக்கையும், விசுவாசமும், தாழ்ச்சியும் அவர்களை, ஆண்டவரின் பார்வையில் நிலைநிறுத்தி விடுகிறது.
நற்செய்தி நமக்குக் காட்டும் இந்தச் செய்திகள், நம்மிடமும் இப்பண்புகள் வளர வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. நாமும் அன்பிலும், பண்பிலும், தாழ்ச்சியிலும், பொறுமையிலும் சிறந்து வாழ முற்படுவோம்.
செம்பை சேவியர்.

மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா(மவுண்ட் மேரி) ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 8-ந்தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 8 நாட்களுக்கு ஆலய திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மலை மாதா ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று காலை 5.30 மணி முதலே திருப்பலி நடந்து வந்தது. இதில், காலை 11.30 மணிக்கு திருவிழா தொடக்க நாள் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருவிழாவையொட்டி காலை முதலே கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு பெருந்திரளாக வருகை தந்தனர். அவர்கள் மாதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் பிரார்த்தனை செய்தனர். பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல வசதியாக பாந்திரா ரெயில்நிலைய மேற்கு பகுதியில் இருந்து ஹில்ரோடு பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவிழாவையொட்டி பாந்திராவில் மாதா ஆலயத்தையொட்டிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சில சாலைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், வருகிற வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
திருவிழாவையொட்டி பாந்திரா மலை மாதா கோவில் மற்றும் அதை சுற்றிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் தொடங்குகிறது.
மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஆண்டு தோறும் செப்டம்பர் 8-ந்தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும். பாந்திரா மலை மாதா திருவிழாவிற்கு மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து மாதாவிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
குறிப்பாக தமிழர்கள் அதிகளவு வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. 17-ந்தேதி சிறப்பு திருப்பலியுடன் திருவிழா முடிவடைகிறது.
திருவிழா தொடக்க நாளையொட்டி நாளை அதிகாலை 5.30 மணி முதல் ஆங்கிலத்தில் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படும். காலை 11.30 மணிக்கு திருவிழா தொடக்கநாள் சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை நேரத்தில் திருப்பலி எதுவும் நடைபெறாது.
11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 12-ந்தேதி காலை 11.30 மணிக்கு கொங்கனியிலும், 13-ந்தேதி மராத்தியிலும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 14-ந்தேதி காலை 11.30 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும்.
15-ந்தேதி மலையாளத்திலும், 16-ந்தேதி குஜராத்தி மொழியிலும் காலை 11.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 17-ந்தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா நிறைவு நாள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
திருவிழாவையொட்டி பொதுமக்கள் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணிவரை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யலாம். திருவிழா நடைபெறும் 8 நாட்களும் பாந்திரா ரெயில்நிலையம் மேற்கு பகுதியில் இருந்து ஆலயம் அமைந்துள்ள ஹில்ரோடு பகுதிக்கு தினந்தோறும் 222 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 98 பஸ்கள் காலையிலும், 124 பஸ்கள் மதியத்திற்கு பிறகும் இயக்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய மாதா சொரூபம் கடந்த 1,717-ம் ஆண்டு வீரமாமுனிவரால், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது ஆகும். இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்களால் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. மேலும் ஆரோக்கிய மாதா சொரூபம் பிலிப்பைன்சில் இருந்து கொண்டு வரப்பட்டு 300 ஆண்டுகள் ஆனதையொட்டி, 300 மணிகள் கொண்ட ஜெபமாலையை சொரூபத்தில் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நேற்று காலை புள்ளம்பாடி முதன்மை பங்கு தந்தை ஹென்றி புஷ்பராஜ் தலைமையிலும், லால்குடி பங்கு குரு தனராஜ் தலைமையிலும் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கன்னியாகுமரி அருட்தந்தை தேவதாஸ் சிறப்பு நற்செய்தி வழங்கி தேரை புனிதப்படுத்தினார். இதில் டால்மியா சிமெண்டு செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பங்கு தந்தையர்கள் தன்ராஜ், தங்கசாமி, அடைக்கலராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டும் தோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் தினமும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தைகள் டேவிட்தனராஜ், ஆரோன், ஆண்டோஜேசுராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வாஎடிசன், ஜூலியட் அற்புதராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குருராஜ், வேளாங்கண்ணி அ.தி.மு.க. நகர செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெரு விழா தேர் பவனி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மரியாள் பிறப்பு பெருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறு சப்பர பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நேற்று மாலை மரியா-விடியற்காலத்தின் நட்சத்திரம் என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, அந்தோணிஜோசப், பூண்டி மாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் சுற்று வட்டார பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 10.05 மணிக்கு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை மரியாளின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகள் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது ஆலய மணிகள் ஒலித்தன. சிறப்பு வாணவேடிக்கை நடைபெற்றது. தேர்பவனியின் போது திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னை மரியாவை வழிபட்டனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மரியா- புதுமையின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
தேர்பவனியையொட்டி பூண்டி மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.