என் மலர்
ஆன்மிகம்

வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய மாதா சொரூபம் கடந்த 1,717-ம் ஆண்டு வீரமாமுனிவரால், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டது ஆகும். இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந் தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்களால் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. மேலும் ஆரோக்கிய மாதா சொரூபம் பிலிப்பைன்சில் இருந்து கொண்டு வரப்பட்டு 300 ஆண்டுகள் ஆனதையொட்டி, 300 மணிகள் கொண்ட ஜெபமாலையை சொரூபத்தில் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நேற்று காலை புள்ளம்பாடி முதன்மை பங்கு தந்தை ஹென்றி புஷ்பராஜ் தலைமையிலும், லால்குடி பங்கு குரு தனராஜ் தலைமையிலும் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கன்னியாகுமரி அருட்தந்தை தேவதாஸ் சிறப்பு நற்செய்தி வழங்கி தேரை புனிதப்படுத்தினார். இதில் டால்மியா சிமெண்டு செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பங்கு தந்தையர்கள் தன்ராஜ், தங்கசாமி, அடைக்கலராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்பவனியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story