என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய ஓமர் லுலு இயக்கத்தில் உருவாகும் ‘தமாக்கா’ எனும் மலையால படத்தில் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.
    மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நிக்கி கல்ராணி. 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. இந்த ஆண்டு அவர் நடிப்பில் சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் அவர் மீண்டும் மலையாள திரையுலகை நோக்கி கவனம் செலுத்தியுள்ளார். பிரியா வாரியரின் கண் அசைவு காட்சிகள் மூலம் பிரபலமான ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கியவர் ஓமர் லுலு. படம் வெளியாவதற்கு முன் உண்டான அதிகபட்ச எதிர்பார்ப்புக்கு படக்குழுவினர் நியாயம் செய்யவில்லை.

    நிக்கி கல்ராணி

    படத்தின் தோல்விக்கு இயக்குநரும் நடிகர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். தற்போது ஓமர் லுலு ‘தமாக்கா’ என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அருண்குமார் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் தான் ஹீரோ. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். 

    ஹீரோ பட போஸ்டர்

    படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    டியர் காம்ரேட் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    நடிகை ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் டப்பிங் ஆகி நேற்று ரிலீசானது. இந்த நிலையில் எந்த மொழியில் நடிப்பது கஷ்டம் என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா கன்னடத்தில் பேசி நடிப்பதுதான் கஷ்டம் என்று கூறிவிட்டார்.

    ராஷ்மிகா

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர். இந்நிலையில் கன்னடம் தனக்கு கஷ்டம் என்று அவர் கூறியதை கேட்ட கன்னட அமைப்புகள் ராஷ்மிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியை புறம் தள்ளுவதா என்று கொந்தளித்துள்ளனர். இதனால் கடுப்பான கன்னடர்கள் டுவிட்டரில் பாய்காட் டியர் காம்ரேட் என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை, என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
    அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான். ‘ஆடை’ ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த ‘ஆடை’ பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம். 

    இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த வி‌ஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த கருத்துடன் அவர்களால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.

    அமலாபால்

    சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை படத்தில் கூறியிருக்கிறோம், இப்படத்தை பற்றிய செய்திகளில் தவறான தலைப்புகளை பதிவிட்டு வரும் தந்திரம் நடந்துக் கொண்டிருக்கிறது. இது நெறிமுறையற்ற வி‌ஷயம். நாங்கள் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை. நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.

    இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்’. இவ்வாறு அமலாபால் கூறினார்.
    அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தனுஷ், மஞ்சு வாரியர், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அசுரன்'. தாணு தயாரித்து வரும் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். 'வெக்கை' நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. கோவில்பட்டியை சுற்றி நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதையும் விரைவில் துவங்க படக்குழு தயாராகி வருகிறது. இதனிடையே தன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இதில் நாயகனாக நடிக்க நகைச்சுவை நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன் அணுகியவுடனே நாயகனாக நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக தன் திரையுலக பயணத்தை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சூரி. இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் முன்னோட்டம்.
    நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    நயன்தாரா

    எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். 
    விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பிகில்’. இதில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். 

    கடந்த 23-ந் தேதி ‘சிங்கப்பெண்ணே’  பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியிருந்தார். பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலானது.

    பிகில் பட போஸ்டர்

    தற்போது இந்த பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை வெளியான பாடல் வரி வீடியோவில் சிங்கப்பெண்ணே பாடல், 86 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் வேகமாக 7 லட்சம் லைக்குகளை பெற்று, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடலின் சாதனையை சிங்கப்பெண்ணே பாடல் முறியடித்துள்ளது.
    தன்னையும், தனது தாயாரையும் கொல்ல முயன்றதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    தமிழில் மாப்பிள்ளை கவுண்டர், வேதம், மானஸ்தன், ஆதிபகவன் உள்பட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி சிவானந்த். தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவரது தங்கை ஷில்பா சிவானந்த். இவரும் நடிகைதான். தன்னையும், தனது தாயாரையும் அக்காவின் மாமியார் கொல்ல முயன்றதாக, தனது பேஸ்புக்கில் பரபரப்பான புகார் கூறியுள்ளார் ஷில்பா சிவானந்த். 

    ஷில்பா சிவானந்த்தின் பேஸ்புக் பதிவு

    அவர் கூறியிருப்பதாவது: ‘சில மாதங்களுக்கு முன் எனது சகோதரியின் மாமியார் பாவனா பிரம்பாஹாட் மீது எனது அம்மா போலீசில் கொலை முயற்சி புகார் அளித்தார். மறுநாளே பாவனா அமெரிக்கா சென்றுவிட்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் பலமுறை எனது அம்மாவை அழைத்து தகவல் கேட்டு வருகின்றனர். எப்போது இந்தியா வந்தாலும் கொலை முயற்சி வழக்கை நீங்கள் (பாவனா) எதிர்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ராஜராஜ சோழன் பற்றி பேசி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய நிலையில் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் அதேபோல் பேசியுள்ளார்.
    ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றவர் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். 2 நாட்களாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி  கையெழுத்திட்டு விட்டு சென்னை திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியபோது ராஜராஜன் குறித்து தான் பேசியதை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார் என்றார். 

    தனது பேச்சால், இந்து தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல சாதியில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாக கூறி சிரித்தார் அட்டகத்தி ரஞ்சித். ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க போவதில்லை என்றும் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் கூறினார்.

    பா.ரஞ்சித்

    நான் சாதிக்கு எதிராக பேசுகிறேன். இது எனது நேர்மையான மற்றும் நேரடியான முன்னோக்கு கருத்து மற்றும் மக்களின் மனநிலையின் பிரதிபலிப்பாகும். சாதி ஒழிப்பு தொடர்பான தலைப்புகள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் ரஞ்சித் தெரிவித்தார். ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கு ரஞ்சித்தை நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அதே பாணியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    மணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் தனுஷ் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. 

    ஐஸ்வர்யா லட்சுமி

    இந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது.
    பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தின் விமர்சனம்.
    தூத்துக்குடியில் வசித்து வருகிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். காம்ரேட் என்றால் எதற்கும் அஞ்சாமல், போராடுபவர்கள் என்று அர்த்தம். இந்த கொள்கையை பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வருகிறார்.

    இந்நிலையில், ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிறார் நாயகி ராஷ்மிகா. இவருடன் பழகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்து சென்னைக்கு செல்லும் நிலையில், ராஷ்மிகாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால், ராஷ்மிகா விஜய்யின் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

    விஜய் தேவரகொண்டா

    நாளடைவில் விஜய்யின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராஷ்மிகா. வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ. தம்பியுடன் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் விஜய்க்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் ராஷ்மிகாவும் விஜய்யுடன் காதலை முறித்துக் கொள்கிறார்.

    அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ராஷ்மிகாவிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

    இறுதியில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலில் இணைந்தார்களா? ராஷ்மிகாவின் பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

    விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது காம்ரேட் ஆக நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். 

    விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. இருவருக்குமான காதல், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா.

    விஜய் தேவரகொண்டா,

    முதல் பாதி காமெடி, காதல், கொஞ்சம் ஆக்‌ஷன் என்று திரைக்கதை நகர, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மெசேஜ் என்று நகர்ந்திருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். படம் பார்க்கும் போது நீண்ட நேரம் செல்வது போல் இருக்கிறது. இதை இயக்குனர் கவனித்திருக்கலாம். மற்றபடி, பெரியதாக குறை ஏதும் தெரியவில்லை.

    ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார். காட்சிகளை தனது கேமரா மூலம் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சராங்க்.

    மொத்தத்தில் ‘டியர் கம்ரேட்’ மிரட்டல்.
    சினிமா வாய்ப்புக்காக பலரிடம் ஏமாந்தேன் என்று பாகுபலி மற்றும் கார்த்தியின் தோழா படத்தில் நடித்த நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    கனடாவை சேர்ந்த நடிகை நோரா பதேகி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கவுரவ தோற்றத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடும் வேடங்களிலும் நடிக்கிறார்.

    பாகுபலி, கார்த்தியின் தோழா படங்களிலும் குத்துப்பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அவர் தற்போது இந்தியில் வருண் தவானின் ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியதாவது:-

    இந்தியாவில் வெளிநாட்டவர்கள் வாழ்வது எளிது அல்ல. நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம். அது யாருக்கும் தெரிவது இல்லை. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். எனக்கும் நடந்துள்ளது. என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி ரொம்ப மோசம், அவர்கள் என்னை சரியாக வழிநடத்தவில்லை. அதனால் அந்த ஏஜென்சியில் இருந்து வெளியேற நினைத்தேன்.

    நோரா பதேகி

    ஏஜென்சியில் இருந்து வெளியேறினால் உங்களின் ரூ. 20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்றார்கள். நான் விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்த ரூ. 20 லட்சத்தை இழந்தேன். இந்த பணம் போனால் என்ன கஷ்டப்பட்டு உழைத்து இதைவிட நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

    அடுத்து, 8 பெண்களுடன் சேர்ந்து ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்தேன். அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் தங்கி இருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடி விட்டனர். அதனால் என்னால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. அந்த அபார்ட்மென்ட்டில் வசித்தது எல்லாம் கொடுமை.

    பின்னர் நான் இந்தி கற்கத் தொடங்கினேன். ஆனால் நடிப்பு தேர்வு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் மனதளவில் தயாராகாததால் மிகவும் சிரமப்பட்டேன். என்னை சர்க்கஸ் கோமாளி போன்று கேலி செய்து சிரித்தார்கள். என்னை சீண்டிப் பார்த்தார்கள்.

    நடிப்பு தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் வழி எல்லாம் அழுது கொண்டே சென்றேன். ஒரு காஸ்டிங் ஏஜெண்டோ, நீ தேவையில்லை, திரும்பிப் போ என்றார். அதை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்’.

    இவ்வாறு நோரா பதேகி தெரிவித்துள்ளார்.
    ×