என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை சாய் பல்லவி, தற்போது நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார்.
    மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார்.

    தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் வருகிறார். போலீஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து தயாராகிறது. அதிரடி சண்டையும் அரசியலும் படத்தில் உள்ளன.

    சாய் பல்லவி

    சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பின. வளர்ந்து வரும் நடிகை இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்றும் பலர் அறிவுரை சொன்னார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தெலுங்கானாவில் உள்ள வாராங்கல்லில் நடக்கிறது.
    பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் ஒருத்தர் மட்டுமே நடித்து வெளியாகி இருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் விமர்சனம்.
    புதிய பாதை படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராகி இன்று வரை தனக்கென ஒரு புதிய பாதையை கொண்டு அதில் ராஜாவாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் இவரின் கிரீடத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 சத்தமாய் இன்று முதல் ஜொலிக்க போகிறது.

    காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள். அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று முன்கோபக்காரர். இவர்கள் பார்த்திபனை மிகவும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர். 

    ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன்

    இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து பார்த்திபனே நடித்து இருக்கிறார். கேமரா பார்த்திபனை மட்டும் காட்டுகிறது. ஆனால் இவர் மூலமாகவே அனைத்து கதாபாத்திரங்களும் நம் கண்முன் வந்து நிற்கிறது.

    எதற்காக பார்க்க வேண்டும் என்று சிந்தித்து திரையரங்குக்கு போகாமல், இந்தப்படத்தில் என்னதான் செய்திருக்கிறார் பார்த்திபன் என்று பொறுமையாக படத்தினை பார்த்தால் படம் உங்களை கவரும்.

    ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன்

    பல கேள்விகளை நம் முன் எழுப்பி அதற்கு காட்சிகள் மூலம் தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார். கேமரா பார்த்திபனின் எண்ணத்தை மிக தெளிவாய் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் தயாரிப்பாளராக வெற்றி பெறுவது சினிமா ரசிகர்களிடம் உள்ளது.

    பார்த்திபனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரசூல் பூக்குட்டி. துல்லியமான ஒலிகளின் மூலம் பார்த்திபனை சுற்றி இருக்கும் சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவும் அபார உழைப்பு. சுதர்சனின் படத்தொகுப்பில் கச்சிதம் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன், சத்யாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். இளையராஜாவின் பாடல்களை காட்சிகளின் பின்னணியில் சரியாக பயன்படுத்தியதில் பார்த்திபனின் புத்திசாலித்தனம் தெரிகிறது. காட்சிகளில் இடம்பெறும் சின்ன சின்ன பொருட்களுக்கு கூட கதையோடு தொடர்பு இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.
    பாலிவுட்டில் 20க்கும் மேற்பட்ட திகில் படங்களை இயக்கி பிரபலமான ஷியாம் ராம்சே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
    பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சே திடீர் மரணம் அடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.

    திகில் படங்களின் முன்னோடி என்று ஷியாம் ராம்சேவை அழைக்கின்றனர். இவரது முதல் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு துளசி என்ற திகில் படத்தை இயக்கினார். அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் தொடர்ந்து பேய் படங்களை டைரக்டு செய்தார். புரானி கவேலி, ஹஸ்கிஹானா, தர்வாஜா உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

    ஷியாம் ராம்சே

    இதுவரை 20 பேய் படங்களை டைரக்டு செய்துள்ளார். இவர் இயக்கிய அனைத்து திகில் படங்களும் வசூல் குவித்துள்ளன. சத்ருகன் சின்ஹா, பிருதிராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஷியாம் ராம்சே இயக்கத்தில் நடித்துள்ளனர். ஷியாம் ராம்சே மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்றார்.
    சென்னை:

    விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

    வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.

    விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.

    பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

    பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.

    என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க.

    நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க. 

    எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்.
    உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்.
    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ, விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி கூறினார்.
    விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 

    இந்த விழாவில் இயக்குனர் அட்லீ பேசியதாவது:-  விஜய் அண்ணா என்னை பிற நடிகர்களுடனும் பணியாற்றுமாறு அறிவுறுத்துவார். ஆனால் நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது விஜய் அண்ணா தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணா தான்.

    பிகில் பட போஸ்டர்

    என் அண்ணனுக்கு நான் தான் படம் பண்ணுவேன். தெறியை விட இரண்டு மடங்கு பெரியது மெர்சல். மெர்சலை விட பிகில் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். கமர்சியல் படமா விளையாட்டு படமா என்பதை தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும். 

    ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு. அதே சட்டை ராசினு தெறி கதை சொன்னேம் ஒகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் அப்போ இல்லை. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சல் ஒகே சொன்னார். அப்போ தான் புரிஞ்சது சட்டை ராசி இல்ல, விஜய் அண்ணன் தான் ராசின்னு. இவ்வாறு அவர் பேசினார்.
    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் டேனியல் பாலாஜி, இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதாக கூறினார்.
    விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 

    விஜய்

    இந்த விழாவில் நடிகர் டேனியல் பாலாஜி பேசியதாவது:- இது தளபதியோட எனக்கு ரெண்டாவது படம். எப்பவுமே என்னங்கனா எப்படி போகுது என்பார். இந்த படத்துல என்னை நண்பானு கூப்பிட்டு நண்பன் ஆக்கிட்டாரு. இந்த படத்துல நான் வில்லன் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.
    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன் என கூறினார்.
    விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 

    விஜய்

    இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:- இந்த இடத்திற்கு வர எனக்கு 3 மணி நேரம் ஆச்சு. அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன். பிகில் படத்தில் வரும் கால்பந்து போட்டி ஒலிம்பிக் போட்டியை போன்று சிறப்பாக இருக்கும். அட்லி உழைப்பு எனக்கு பிடிக்கும். சூரியனை மாதிரி பிரகாசமா சுடர்விட்டு இருக்கணும்னா, சூரியனை மாதிரி இடைவிடாம எரியனும் (உழைக்கணும்) அதனால தான் அட்லீ கருப்பா இருக்கார் போல. வெற்றி எப்பவுமே ஒரு போதை தரும் ஆனால் அது விஜய்க்கு ஏறுனதே இல்லை.  இவ்வாறு அவர் பேசினார்.
    பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கதிர், பிகில் பட வாய்ப்பு தனக்கு பம்பர் பரிசு என கூறினார்.
    விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    விஜய் 

    இந்த விழாவில் நடிகர் கதிர் பேசியதாவது:- தளபதி நெஞ்சில் குடியிருக்கும் நண்பர்களுக்கு வணக்கம். முதல் முறை இவ்ளோ கூட்டத்தை பார்க்கிறேன். பிகில் எனக்கு பம்பர் பரிசு. வெறித்தனமான பாசிட்டிவிட்டி விஜய் அண்ணாவிடம். அவரின் வெறித்தனமான ரசிகன் நான். பிகில் ஒரு உலக தர விளையாட்டு படமாக இருக்கும். விஜய் இந்த படத்தில் வெறித்தனமாக விளையாடியிருக்கார். 100 நாட்கள் படப்பிடிப்பில் 200% உழைப்பை தந்திருக்கிறார் அட்லி. இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழில் கமலின் ஆளவந்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் பாட்டியாகி உள்ளார்.
    இந்தி சினிமாவில் கதா நாயகியாக இருந்தவர் ரவீனா தண்டன். தமிழில் கமலின் ஆளவந்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இவருக்கு வயது (44). ரவீனாவின் கணவர் பெயர் அனில் தண்டரி. ரவீணா 21வது வயதில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். மூத்த பெண்ணான சாயாவுக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்தனர். 

    சாயாவுக்கு சில தினங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் ரவீனா பாட்டி ஆனார். ரவீனா 44 வயதிலேயே பாட்டியாகியுள்ள செய்தி பாலிவுட்டில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்ன குழந்தையை வரவேற்பதற்காக குடும்பத்தின் சார்பில் பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன.

    மகள்களுடன் ரவீனா தண்டன்

    அந்த பூஜையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரவீணா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிபுணரான பூஜா என்பவர் இன்ஸ்டா கிராமில், “பலரும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பாசத்தை பகிர வேண்டும் என்று கூறுவர். ஆனால் நீங்கள் மட்டுமே அதனை உங்களுடைய நிஜ வாழ்க்கையில் அமல் படுத்தியுள்ளீர்கள்” என்று ரவீனாவை புகழ்ந்து பதிவு செய்திருந்தார்‌.
    ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இமயமலை சென்றுள்ளார்.
    மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் பட்டியலில் மாளவிகா மோகனனும் இடம் பிடித்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் தற்போது தெலுங்கு பக்கமும் கவனத்தை திருப்பி இருக்கிறார். சமீபத்தில் இமயமலைக்கு சென்றவர், அங்கு விதவித போஸ்களில் புகைப்படம் எடுத்துள்ளார். 

    இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும்போது, ’இமயமலையில் நம்மை சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம்’ என குறிப்பிட்டிருப்பதுடன், என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது’ எனத் தெரிவித்திருக்கிறார். 

    மாளவிகா மோகனன்

    ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளிக் குவிக்கின்றனர். விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக்கூறி  ஜான் சார்லசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    விஜய்யின் 65-வது படம் குறித்த செய்திகள் பரவிவரும் நிலையில், அது குறித்து இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'.'பிகில்' தொடர்பான தனது அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 65-வது படத்தை இயக்குநர் பேரரசுவும், 66-வது படத்தை இயக்குநர் ரமணாவும் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை உடனடியாக இயக்குநர் ரமணா தனது பேஸ்புக் பக்கத்தில் மறுத்தார். ஆனால், இயக்குநர் பேரரசு தரப்பில் எந்தவொரு மறுப்பும் வெளியாகாத காரணத்தால், இருவரும் இணைவது உறுதி என்று பலரும் செய்திகளை வெளியிடத் தொடங்கினார்கள். 

    விஜய், பேரரசு

    தற்போது இந்தச் செய்தி தொடர்பாக இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது. 

    நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.
    ×