என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் அனுஷ்கா, தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை டோலிவுட்,பாலிவுட் பிரபலங்களும் பார்த்து பாராட்டினர்.

    மஞ்சு வாரியர், தனுஷ்


    அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
    மேகி என்ற படத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை நிம்மி, படத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்டிருக்கிறார்.
    'மேகி' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நிம்மி, திரையில் தான் அறிமுகமான அனுபவம் பற்றிப் பேசுகிறார்:

    'மேகி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது. என்னுடைய டப்மாஷ் பார்த்து விட்டு என்னை அழைத்தார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. உடனே முடிவை சொல்ல சொன்னார்கள்.

    யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றேன். அவசரம் என்றார்கள். சிந்திக்க இரண்டு நாள் வேண்டும் என்றேன். ஏனென்றால் சினிமாவில் போலிகள் அதிகம். யார் படம் எடுப்பவர்கள்? யார் எடுக்க முடியாதவர்கள்? என்று கணிப்பது கடினம். அதனால் என் மனம் நம்ப மறுத்தது. ஆனால் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்றார்கள் அதையும் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்று விட்டேன். படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? இந்த படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா? என்று கேட்டேன்.

    நிம்மி

    நான் அறியாமையில் அப்போது கேட்டிருந்தாலும் அப்படி நான் கேட்டிருக்க கூடாது தான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சியூட்டியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் அதை எதிர்கொண்டு விரைவில் வெளியிடுவோம் என்று தேதி சொன்னார். அதன்படி அடுத்தடுத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன. எனக்கு நம்பிக்கை துளிர்த்தது. மேகி ஒரு பேய்ப் படம் என்றாலும் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும். விறுவிறுப்பு, காமெடி, திகில் எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கும்.

    இந்த நேரத்தில் முதல் படத்திலேயே இவ்வளவு விரைவாக படத்தை எடுத்து இவ்வளவு விரைவாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இப்போது அந்தக் கேள்வி கேட்டதை நினைத்து வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் சொன்னதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி என்னை உணர வைத்த அனுபவம் தான் மேகி படம் ." இவ்வாறு நடிகை நிம்மி கூறினார்.
    96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கும் சமந்தா, அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தேன் என்று பேட்டியளித்திருக்கிறார்.
    தெலுங்கில் ரீமேக் ஆகும் திரிஷாவின் 96 படத்திலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘சினிமாத்துறை நமக்கு பயனுள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. நடிக்க வந்த புதிதில் அதிக வாய்ப்புகள் வந்தன. ஓய்வில்லாமல் நடித்தேன். படங்கள் வெற்றியும் பெற்றன. எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். திருமணத்துக்கு பிறகு குடும்பமே உலகம் என்று ஆகி விட்டது. ஆனாலும் சினிமாவை விடக்கூடாது என்று நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

    எவ்வளவு வெற்றி கொடுத்தாலும் ஏதோ ஒரு சுமையை சுமந்து கொண்டு இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. சினிமாவுக்கு வந்த புதிதில் கதாநாயகிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் சில நிர்ப்பந்தங்கள் இருந்தன. அந்த வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற நிலைமையும் இருந்தது.

    சமந்தா

    அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தேன். யாரோ ஒருவரை பின் தொடர்வது மாதிரி இருக்குமே தவிர நமது தனி முத்திரையை பதிக்க வாய்ப்பே இருக்காது. அந்த மாதிரி நிலையில் இருந்து இப்போது மாறி இருக்கிறேன். அதனால் முன்பு இருந்த பாரம் சுமை நெருக்கடி எல்லாமே பஞ்சுபோல் பறந்து விட்டது. சினிமா துறையில் ஏற்பட்ட மாற்றமும் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களுமே இதற்கு காரணம்’ என்றார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்திற்காக நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

    அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இளமை தோற்றத்தில் இருக்கும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது வேற கெட்-அப்பில் அஜித்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

    அஜித்தின் புதிய தோற்றம்

    இதில் வேதாளம் படம் பாணியில் மொட்டையடித்து கொஞ்சம் முடி வைத்தும், மீசை வித்தியாசமாகவும் வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வலிமை படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதே பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

    பிரபுதேவா

    பொங்கல் தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    சக்சஸ் பிஸ்னஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது நடிகர் தினேஷ், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
    தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. அதியன் ஆதிரை இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் இயக்குனர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ், நடிகை ஆனந்தி உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பால் பா.இரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துக் கொண்டனர்.

    பா.இரஞ்சித் - தினேஷ் - அதியன் ஆதிரை

    தினேஷ் பேசும்போது, ‘சக்சஸ் பிஸ்னெஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது. ஒரு படம் ஜெயித்தபிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குனர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. இந்தப்படத்திற்காக பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி’ என்றார்.
    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தி, அவர்கள் அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
    நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர், தயாரிப்பாளர், பா.இரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

    ஆனந்தி பேசும்போது, ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன்ஸ் என் சொந்த கம்பெனி மாதிரி. இவர்கள் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் நல்ல இயக்குனர், அதைவிட மிகச்சிறந்த மனிதர். 

    குண்டு இசை வெளியீடு

    இந்தப்படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றியடையும்" என்றார்.
    சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் ஜோடி சேர இருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சூர்யா அடுத்ததாக அவரது 39-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஹரி இயக்குவதாக பேசப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் படங்களும் சிங்கம் படத்தின் 3 பாகங்களும் வந்துள்ளன. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் ஆகிய படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    சூர்யா - அனுஷ்கா

    இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் 11 வருடங்களுக்கு முன்பு வாரணம் ஆயிரம் படம் வெளிவந்தது. மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே சிங்கம் படத்தின் முதல், இரண்டாம் பாகங்களிலும் மூன்றாம் பாகத்திலும் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சமூக வலைத்தளமான ட்விட்டரில் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்ததற்காக அவரது பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
    இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். ட்விட்டரில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அதையும் ட்விட்டரில் வெளியிட்டார். தனக்கு போனில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

    காயத்ரி ரகுராம் - திருமாவளவன்

    இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டு உள்ளது. விதி முறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    நடிகை நிவேதா பெத்துராஜ் டோலிவுட்டில் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், அவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் தெலுங்கில் சித்ரலகரி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்து புரோசேவரெவருரா படத்தில் நடித்தார் அந்த படமும் ஹிட்டானது. 

    இதையடுத்து நிவேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன. தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் சமீபகாலமாக குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடிக்கின்றனர். மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் தற்போதைக்கு இந்தி படத்தில் கவனம் செலுத்துவதால் டோலிவுட்டில் போட்டி குறைந்திருக்கிறது. 

    நிவேதா பெத்துராஜ்

    அந்த வாய்ப்புகளை தற்போது நிவேதா, ராஷ்மிகா, ராசி கண்ணா, சாய் பல்லவி போன்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர். டோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகள் போட்டியில் இணைந்திருக்கும் நிவேதா பெத்துராஜ் அங்கு முன்னணி கதாநாயகியாக மாறி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிக்கும் அல வைகுந்தபுரமலோ, ராம் நடிக்கும் ரெட் போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
    நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. 

    சாய் பல்லவி

    அந்த வகையில் ஒரு பிரபல துணி விற்பனை மால்கள் வைத்துள்ள நிறுவனம் சாய் பல்லவியை தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியுள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரவும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் சாய் பல்லவி மறுத்துவிட்டார். 
    குழந்தை பிறக்கும் தேதி, நேரம் மற்றும் வருடத்தை நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான். 

    சமந்தா, நாக சைதன்யா

    இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, ’வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். நடிகை சமந்தா தனது செல்ல நாய் குட்டியின் முதலாவது பிறந்தநாளை சமீபத்தில் கணவருடன் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    ×