என் மலர்
சினிமா செய்திகள்
அருவி படத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமீபத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின.
ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட அதிதி பாலன், அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் நரகாசூரன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் வெளியிட்டிருக்கிறார்.
துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘நரகாசூரன்’. கவுதம் மேனன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே முடிந்துவிட்ட நிலையில், சில பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

இதேபோல் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த மாதம் ரிலீசான நிலையில், ரசிகர் ஒருவர் கார்த்திக் நரேனிடம் எனை நோக்கி பாயும் தோட்டா படமே ரிலீசாகி விட்டது, நரகாசூரன் படத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என கேட்டார். இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், அடுத்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாகும் என தெரிவித்தார்.
நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத் இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 16-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விவேக் மெர்வின் இசையில் ஏற்கனவே சில் புரோ மற்றும் முரட்டு தமிழன்டா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 3-வது பாடல் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத் பாடியுள்ளதால், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிவா இயக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள குஷ்பு, ரஜினியுடன் இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
தமிழில் ரஜினி - பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தான் குஷ்பு அறிமுகமானார். அந்த படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168வது படத்தில் நடிக்கிறார்.

இதே படத்தில் மீனா, கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள். இந்தநிலையில் தனது டுவிட்டரில், டிசம்பர் 22-ந் தேதி முதல் ஐதராபாத்தில் நடக்கும் தலைவர் 168வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா புதிய அவதாம் ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வெளியூர் செல்லும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடியதாக தெரிகிறது. அவர் பாடும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காஜல் அகர்வால், ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வருபவரைத்தான் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழின் முன்ணனி நடிகையாக கடந்த சில வருடங்களாக வலம் வந்த காஜல் அகர்வால் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நண்பர்களுடன் பிசியாக இருப்பதால் திரைப்படங்களைத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறார். கிரிக்கெட், சுற்றுலா இப்படி தன்னுடைய வாழ்வை இனிமையாக அனுபவித்து வருகிறார் காஜல் அகர்வால்.

சமீபத்தில் தன்னுடைய ஆண் நண்பருடன் மைதானத்தில் நெருங்கி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் அல்லாமல் கூட வந்த ஆண் நண்பரின் தோளில் ஏறி உட்கார்ந்தப் படி இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வளவு நெருக்கமாக புகைப்படங்களை யாருடனும் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்டதில்லை. இந்த ஆண் நண்பருடன் தான் தற்போது தொடர்ந்து காஜல் அகர்வால் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. வரும் புது வருடத்தில் காஜல் அகர்வால் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. எனவே இவர்தான் திருமணம் செய்யும் நபர் என்று கூறப்படுகிறது.
பட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், தனக்கு சம்மன் வந்ததுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் "டம்மி ஜோக்கர்". வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள். நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: "புதையலையும் தந்தையையும் தேடி ஊருக்கு வரும் நாயகனுக்கு திகில் சம்பவங்கள் நடக்கின்றன. இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் காமெடிக்கு மாறும்" என்றார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியதாவது:- பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளதாக கூறினார்கள். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று ஜாக்குவார் தங்கம் பேசும்போது பெண்களே மது அருந்துகிறார்கள் என்று சொன்னார். அவருக்கும் ஒரு சம்மன் வரும் என்று நினைக்கிறேன்.
அதுபற்றி பேசி நான் இன்னொரு சம்மனை வரவைத்துக்கொள்ள விரும்பவில்லை. இங்கு இருக்கும் பெண்களுக்கு நான் பேசியது தவறு இல்லை. ஆனால் இங்கு இருக்கும் சிலர் போட்டுக்கொடுத்ததால் ஆந்திராவில் உள்ள பெண்கள் அமைப்பு தான் அனுப்பினார்கள். அதுதான் சம்மன் வர காரணம். என்னிடம் விளக்கம் கேட்டார்கள். கொடுத்தேன். பெண்கள் ஒருவர் வருத்தப்பட்டு இருந்தால் கூட நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றேன். ஏற்றுக்கொண்டார்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார்.
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதலாமாண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம் என்று நடிகர் விஜய்யின் தாய் ஷோபா கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. சமீத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ள ஷோபா சந்திரசேகர் விஜய், அஜித் நட்பு பற்றி கூறியிருக்கிறார் ’விஜய் - அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாலினியை கூட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான். அன்று முதல் இன்று வரை இந்த உறவு நீடித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் தான் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் பிரபலமான நடிகை சோனா, குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:-
சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பதை நிறுத்தி விட்டேன். 2020ம் ஆண்டு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் செல்வன் இயக்கத்தில் உதய், லீமா நடிப்பில் உருவாகி இருக்கும் “உதய்” படத்தின் முன்னோட்டம்.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் அடுத்ததாக இயக்கும் படம் உதய். உதய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி லீமா நடிக்கிறார். இப்படத்திற்கு தீபக் ஹரிதாஸ் இசையக்க, ஏ.எஸ்.ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய வேண்டும் என நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதல் சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே படம்.
மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான போராட்டம் நாடு முழுவதும் பரவியது. களத்தில் மாணவர்களும் இறங்கினார்கள்.
மாணவர்களின் போராட்டம் குறித்து நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும், பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகியான சின்மயி ஒய்.ஜி. மகேந்திரனின், இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவரது பதிவில் ‘இந்த மனிதர் சொல்லும் கருத்தை எல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான்’ என்று சாடியிருக்கிறார். சின்மயியின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.






