என் மலர்
சினிமா

சோனா
குடிப்பதை நிறுத்திவிட்டேன் - சோனா
ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் பிரபலமான நடிகை சோனா, குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:-
சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பதை நிறுத்தி விட்டேன். 2020ம் ஆண்டு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






