என் மலர்
சினிமா செய்திகள்
வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படத்தின் விமர்சனம்.
வில் ஸ்மித்தும் மார்டினும் சேர்ந்து கடந்த பாகங்களில் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களை கண்காணித்து கைது செய்து வந்தார்கள். தற்போது இவர்கள் ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், முன் விரோதம் காரணமாக அர்மாண்டோ ஆர்ம்ஸ் வில் ஸ்மித்தை கொல்ல முயற்சிக்கிறான்.
இதில் வில் ஸ்மித் படுகாயம் அடைகிறார். சிகிச்சை முடிந்து வரும் வில் ஸ்மித், நண்பர் மார்டினுடன் இணைந்து தன்னை கொல்ல வந்ததன் பின்னணியையும் அவர்களை பிடிக்கவும் அழைக்கிறார். ஆனால், மார்டினோ வர மறுக்கிறார்.

இறுதியில் வில் ஸ்மித், மார்டினுடன் இணைந்து எதிரிகளை கண்டுபிடித்தாரா? அவர்களின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
ஏற்கனவே வெளியான முந்தைய பாகங்களை விட இப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் கவனம் செலுத்தி ரசிக்கும் படி இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். வில் ஸ்மித், மார்டின் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இம்முறை ஆக்ஷனை விட காமெடியில் அசத்தி இருக்கிறார்கள்.

தற்போது பிரபலமான வசனங்களை சேர்த்து தமிழில் டப்பிங் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் பலாஹ். ரோப்ரெச் ஹேவர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. லார்ன் பால்ஃப் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ ஆக்ஷன் அதிரடி.
நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு பதிலாக பிக்பாஸ் தர்ஷன் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து எதிர்வினையாற்று படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது நடித்தவர் தர்ஷன். ‘பிக்பாஸ்’ சீசன் 3ல் பங்கேற்றதால் பிரபலம் ஆனார். இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப் பட்டதாகவும் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து இன்று தர்ஷன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நானும் சனம் ஷெட்டியும் காதலித்தது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முயற்சி செய்தது அவர்தான். கடந்த சீசனின் போது கலந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் சில நிபந்தனை இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
நான் முயற்சி செய்யவே இல்லை. ஒரு விளம்பரத்தை பார்த்து விஜய் டிவியில் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்த அன்று தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. என் வீட்டுக்கு தெரியாமல் தான் நிச்சய தார்த்தம் நடந்தது. படவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நான் பிக்பாஸ் செல்லும் போது எனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகித்துக் கொள்கிறேன் என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பின் என் தங்கையிடம் பேசி என் சமூகவலைத்தள கணக்கு பாஸ்வேர்டுகளை வாங்கிக் கொண்டார். அதில் அவரிட்ட சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகள் மூலமாகத்தான் எங்கள் காதல் வெளியில் தெரிய வந்தது.
பிக்பாஸ் முடித்து வந்தபின் அவருக்கு என் மீது பொஸசிவ் அதிகமானது. பிற பெண்களுடன் பேசக்கூடாது என்று பிரச்சினை செய்தார். முக்கியமாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்னுடன் போட்டியாளர்களாக இருந்த பெண்களுடன் நான் பேசக்கூடாது என்று சந்தேகப்பட்டார்.
அவர் சிங்கப்பூரில் வந்து தங்கியது சேர்ந்து பார்ட்டிக்கு சென்றது எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருடன் வாழமுடியாது என்று தெரிந்ததால் பிரிந்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் மீடியா முன்பு அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
ஆனால் நான் அவர் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசுவதாக சொன்னேன். அவர் இதற்காக இலங்கை வந்து என்னை சந்தித்தார். அப்போது என் அம்மா, என் தங்கை திருமணம் முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூட கூறினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு தான் எங்களுக்குள் சண்டை பெரிதானது. என்னை வைத்து படமெடுக்க திட்டமிட்ட தயாரிப்பாளர்களிடம் சென்று எனக்கு வந்த வாய்ப்புகளை தடுக்க முயற்சித்தார். அவர் ரூ. 15 லட்சம் எனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய். அவர் எனக்கு மூன்றரை லட்சம் பணம் கடனாக கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
நான் அவர் மீது எந்த வழக்கும் போட மாட்டேன். ஆனால் என் மீது தவறு இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். அவரை எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எனவே அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். ஒரு பெண்ணை எந்த சூழ்நிலையிலும் அசிங்கபடுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், தற்போது புதிய படத்திற்காக முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த ஆண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்துக்கும் மேலான படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார் மன்சூர் அலிகான். இப்படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பிரபல நடிகை ஒருவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் நயனமான நடிகை இருந்து வருகிறாராம். இவருடைய இடத்தை பிடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்களாம். ஆனால், வீரமான நடிகை மட்டும் அதிகமாக தீவிரம் காண்பிடித்து வருகிறாராம்.
நம்பர் ஒன் நடிகை நடிக்க முடியாத படங்களில் தாமாகவே முன் வந்து நான் நடிக்கிறேன் என்று கூறுகிறாராம். மேலும் அந்த நடிகையிடம் கால்ஷீட் இல்லை என்றால் என்னிடம் வாருங்கள். சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறிவருகிறாராம். எப்படியாவது நடிகையின் இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பிடிவாதம் பிடித்து வருகிறாராம்.
சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்தை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் நெட்டிசன்கள் கேலி செய்து மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் கங்கனா தற்போது தலைவி ஷூட்டிங்கில் மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டகால்டி’ படத்தின் விமர்சனம்.
மும்பையில் சின்ன திருட்டு செய்து வருகிறார் நாயகன் சந்தானம். இந்நிலையில், தொழிலதிபராக இருக்கும் ஒருவர், தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை எங்கு இருந்தாலும் கொண்டு வர சொல்லி ஊரில் இருக்கும் ரவுடிகளுக்கு உத்தரவிடுகிறார்.
அந்த பெண்ணின் புகைப்படம் பெரிய ரவுடியாக இருக்கும் ராதாரவியிடம் வருகிறது. ஒரு பிரச்சனையில் ராதாரவி, சந்தானத்தை கொல்ல நினைக்கிறார். அப்போது இதிலிருந்து தப்பிக்க ராதாரவியிடம் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் எனக்கு தெரியும் என்று சந்தானம் கூறுகிறார்.

இந்த பெண்ணை குறிப்பிட்ட நாளில் என்னிடம் ஒப்படைத்தால் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். மேலும் பணம் தருவதாகவும் ராதாரவி கூறுகிறார். இதையேற்ற சந்தானம், தெரியாத பெண்ணை கண்டுபிடித்தாரா? ராதாரவியிடம் ஒப்படைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடியென கலகலப்பூட்டி இருக்கிறார். முழு படத்தையும் தாங்கி செல்கிறார் சந்தானம். இவருடன் கூட்டணி அமைத்திருக்கும் யோகிபாபுவின் காமெடியும் பெரியளவிற்கு கைகொடுத்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சென், கொடுத்த வேலையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாக செய்திருக்கிறார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி ரித்திகாவை, ஏமாற்றி அழைத்து வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராதாரவி.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய் ஆனந்த், திரைக்கதையில் இன்னும் காமெடி காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். சந்தானம் - யோகி பாபு கூட்டணியை சிறப்பாக கையாண்டிருக்கிறார். தீபக்குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய் நரேனின் இசையும், பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘டகால்டி’ காமெடி கலாட்டா.
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth@directorsivapic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழில் பல படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான ஓவியா, ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்துள்ளார்.
ஓவியா சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்குகிறார். தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதுடன் அவ்வப்போது கருத்துக்களும் பகிர்கிறார். சமீபத்தில், 'வாழ்க்கைக்கு அர்த்தமில்லை' என்ற ஒரு பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதை கண்ட ரசிகர்கள், ஓவியா மனவருத்தத்தில் இருப்பதாக எண்ணினர்.
அவருக்கு ஆறுதல் கூறுவதுபோல் பதில் பகிர்ந்தனர். 'கவலை வேண்டாம், நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும்' என்று ஒரு ரசிகர் ஓவியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஓவியா, 'அடப் பாவிகளா.. நான் சொன்னது ஒரு தத்துவம். எனக்கு ஒன்றும் ஆகவில்லை' என பதில் அளித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தன்னைப் பற்றி வந்த தவறாக தகவல்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக யோகிபாபு வலம் வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் யோகிபாபு செல்லும் இடங்களில் எல்லாம் அவரது திருமணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. கடந்த மாதம் ஒரு நடிகையுடன் இணைத்து திருமண செய்தி வெளியாகி அதை மறுத்தார்.
இந்நிலையில் யோகி பாவுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்கள்.

அவரோ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறார். அவருக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரவே, தனது ட்விட்டர் தளத்தில் "என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தில் மாஸ்டர் பட நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்திருந்த கவுரி கிஷன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபல படகர் சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார்.






