என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்த சாய் தன்ஷிகா தற்போது குறும்படத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் சாய் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம் சினம்.

பெரிய படங்களில் பிசியாக இருக்கும் போதே குறும்படத்தில் நடித்தது ஏன் என்று கேட்டதற்கு சாய் தன்ஷிகா கூறியதாவது, 'தன் மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள் என்றவுடன், அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது' என்றார்.
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் முன்னோட்டம்.
8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றூம் சகோதரர் செல்வராகவனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அந்தராங்கி ரே எனும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
அசுரன் படம் வெற்றி அடைந்தால், திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பதாக வேண்டி இருந்தாராம். வேண்டுதலை நிறைவேற்ற, நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன், நேற்று, திருப்பதி திருமலைக்கு சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார். மனைவி ஐஸ்வர்யா, சகோதரர் செல்வராகவனுடன் திருப்பதி சென்ற அவரை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

தரிசனம் முடித்து திரும்பிய அவரை, ரங்க நாயகர் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர். கோவிலை விட்டு வெளியில் வந்த தனுஷ், அனைவரையும் பார்த்து கையசைத்து விட்டு சென்றார்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஆர்யா - சாயிஷா தம்பதி இன்று முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு திருமணநாள் பரிசு கொடுக்கும் வகையில், டெடி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
Here’s the #Teddyteaser on a very special day of my life. Thanks my wifey @sayyeshaa for being You 🤗😍😘😘 Happy birthday to my dear brother confidant @ShaktiRajan who has given me this memorable film
— Arya (@arya_offl) March 10, 2020
😘https://t.co/AY9Vjnv0fj@immancomposer@StudioGreen2@K9Studioz
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.
விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இதனால் பிற மொழி படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்தார்.
தற்போது தெலுங்கு திரையுலகில் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து இந்தி படத்தில் அமீர்கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படப்பிடிப்பின் இறுதி நாளில் மரம் நட்ட நடிகர் விஜய்யை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டி உள்ளார்.
விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்பின் இறுதிநாளில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய்யின் இந்த செயலுக்கு ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பில் டியூக் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கமல், சிவாஜியை மிஞ்சும் வகையில் இப்படத்தில் விக்ரம் அதிக கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தனது 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் 64-வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதேபோல் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வரும் 15-ந் தேதி நடைபெறும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், படங்கள் நடிப்பதில் விஜய்சேதுபதியை மிஞ்சியுள்ளார்.
தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன.
அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்று விஜய்சேதுபதி பெயர் எடுத்து வருகிறார். அதை முறியடிக்கும் வகையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. ஏற்கனவே இந்த வருடம் தொடக்கத்தில் டகால்டி படம் வந்தது.

தற்போது சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய 6 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்த வருடமே அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
ஏ1 படத்தை எடுத்த ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ராஜேஷ்.வி இயக்கும் படமொன்றிலும் நடிக்க உள்ளார். வஞ்சகர் உலகம் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.
கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம், காசி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காவேரி கல்யாணி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் கண்ணுக்குள் நிலவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காவேரி கல்யாணி. இப்படத்தை தொடர்ந்து சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படம் ‘பூமி’. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார்.
விவசாயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் ‘பூமி’ படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.






