என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பாணியை மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் பின்பற்றி அசத்தி வருகிறார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பதையும் தாண்டி பைக் ரேஸ் கார் ரேஸ் என கலந்துகொண்டு தனித் திறமையை நிரூபித்து வருகிறார்.

    பைக்ரேஸ் ஓட்டுவதற்கான முயற்சியில் மாளவிகா மோகனன்

    தற்போது இவரது பாணியில் மாஸ்டர் படத்தின் கதாநாயகி நடிகை மாளவிகா மோகனன் பின்பற்றி வருகிறார்.

    ஏற்கனவே புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது அஜித் பாணியில் பைக்ரேஸ் ஓட்டுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். பைக் ஓட்டும் வீடியோவையும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் மாளவிகா பதிவு செய்திருக்கிறார்.
    தன்னுடைய தம்பி செய்த காரியத்தால் தற்போது வருத்தத்தில் இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்
    தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு பையனிடம் பேசினேன் என்றால், உடனே வீட்டில் சென்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவான்.

    நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், " ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ' என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ' என்றார்.
    தரமணி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வசந்த் ரவி, அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.
    தரமணி படத்திற்குப் பிறகு ராக்கி படத்தில் நடிக்கிறார் வசந்த் ரவி. இவர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் நலனுக்காக உழைக்கும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை வழங்கினார்.

    வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது, இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறி விட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமாக பாதுகாப்பாக இருப்போம்.

    நடிகர் வசந்த் ரவி சுகாதார கருவிகளை கமிஷனரிடம் வழங்கிய காட்சி

    பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன். இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாற்றுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன். இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.
    ரஜினிகாந்தின் 'உள்ளே போ' என்ற பன்ச் டயலாக் இப்போது தாஜ்நூர் இசையில் கொரோனா பாடலாக உருவாகி உள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற "உள்ளே போ" என்ற வசனத்தின் பெயரில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில்  வெளிவந்துள்ள  கொரோனா விழிப்புணர்வு பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்த பாடலை பற்றி இசையமைப்பாளர் தாஜ்நூர் கூறும்போது,

    இசையமைப்பாளர் தாஜ்நூர்


    கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றை தயார் செய்யலாம் என முடிவு செய்தேன்.

     முதல் வார்த்தை அனைவருக்கும் பழகிய ஒரு வார்த்தையாக இருக்க வேண்டும்  எனவும், கொரோனாவினால் சோர்ந்து போய் இருப்பவர்களை  உற்சாக மூட்டும் வகையில் இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'பாட்ஷா' படத்தில்  இடம்பெற்ற "உள்ளே போ"என்ற பன்ச் டயலாக்கை முதல் வார்த்தையாக வைத்து உருவாக்கலாம் எனும் முடிவுக்கு வந்தேன்.

    அதன்படி முதல் மூன்று வரிகளை நானே எழுதி விட்டு கவிஞர் பா. இனியவன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த பாடலை முழுமையாக எழுதி தர கேட்டு கொண்டேன். அவரும் அன்றே பாடலை எழுதி கொடுத்து விட்டார்.

    பாடகர்கள் வேல்முருகன், தீபக் மற்றும் ஷிவானி ஆகியோர் பாடலைப் பாடினர். பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு அவர்கள் பாடலுக்கு நடனமாடியுள்ளார். கமலக்கண்ணன் எடிட்டிங் செய்திருக்கிறார்” என்றார்.
    பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தற்போது சமையல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாகவும், ஊரடங்கு சமயத்தில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது குறித்தும் பல்வேறு பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது கையால் அம்மியில் மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை அரைத்து அவரே ரசம் வைக்கும் காட்சியின் வீடியோ அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை திரிஷா, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வந்த நடிகை திரிஷா, கேமரா முன் நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

    டிக் டாக் வீடியோவில் நடிகை திரிஷா

    திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட் தொடங்கி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்திலும் டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரின் வலது காலை மருத்துவர்கள் துண்டித்தனர்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31-ந்தேதி மயங்கி விழுந்தார். மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.

    கொரோனா பாதிப்பால் அவரது காலில் ரத்தம் உறைந்தது. வலது கால் விரல்களுக்கு ரத்தம் செல்லவில்லை. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடலுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டு, உள் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வலது காலை துண்டிக்க வேண்டும், இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்று குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து குடும்பத்தினரின் அனுமதியின் பேரில், நிக் கோர்டரோவின் வலது காலை மருத்துவர்கள் துண்டித்தனர். தற்போது நிக் கோர்டரோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக அவரது மனைவி அமண்டா கூட்ஸ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கும் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் முன்னோட்டம்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  உருவாகி வருகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கும் அனிருத், மீண்டும் கமலுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ்  போன்ற முன்னணி நடிகர்கள் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் அடுத்ததாக கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் படத்தின் 2-ம் பாகத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் பணியாற்றி வந்த ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார். அதேபோல் கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறை.

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று உருவாகி உள்ளது. இப்பாடலை அனிருத்தும், கமலும் பாடியுள்ளனர். இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது. 
    நடிகை சுவாதி தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இரண்டால்.. உன் கண்கள் இரண்டால்... என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காட்சியில் அவர் நிஜமாகவே கட்டி இழுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    ஐதராபாத்தில் வசித்த சுவாதி 2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமான பைலட் விகாஷ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். 

    இதனிடையே, சுவாதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென்று நீக்கி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களோ? என்று பட உலகில் பேச்சு கிளம்பியது. இருவருக்கும் கருத்து வேறுபாடா? என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பினார்கள்.

    கணவருடன் சுவாதி

    இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சுவாதி, தனக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை. திருமண புகைப்படங்களை பிறருக்கு காண்பிக்காதவாறு இன்ஸ்டாகிராமில் மறைத்து வைத்து இருப்பதாகவும் கூறினார். ஆனாலும் கணவர் புகைப்படங்களை மறைத்து வைத்தது ஏன் என்று ரசிகர்கள் விடாமல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
    சமீபத்தில் சமூக வலைதளத்தில் இணைந்த நடிகை நதியா, முதன்முறையாக தனது மகள்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
    தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

    மகள்களுடன் நதியா

    சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது குடும்பத்தினருடன் ஜப்பான் சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மகள்களோடு இருக்கும் புகைப்படங்களும் உள்ளன.

    இதுவரை மகள்களை வெளியுலக்குக்கு காட்டாமல் இருந்த நதியா, முதல் தடவையாக அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவை வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
    உலகப்புகழ் பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி எனும் கார்ட்டூன் தொடரை இயக்கிய ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
    துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடர், வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார். இவர் இதைத்தவிர பாப்பாய் எனும் கார்ட்டூன் தொடரின் சில எபிசோடுகளையும் இயக்கி உள்ளார். தனது ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்க வந்துவிட்டார். ஜீன் டெய்ச் 'மன்றோ' என்ற கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்றுள்ளார்.

    வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 16-ந் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    ×