என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தன் அம்மாவின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் செய்து வருகிறார். விஷாலின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து மதம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது ஆரணி உள்பட 5 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரணியை சேர்ந்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய கோபி தலைமையில் பா.ஜ.க.வினர் ஆரணி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்தனர்.
அதில் டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இந்துக் கோவில்களில் நடக்கும் இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி உள்ளார். இதற்கு முன்பு சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதித்தல் சம்பந்தமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவர் பேசியதால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்தேன். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டில் ஆகம விதிகளை குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா போலீஸ் நிலையங்களில் இந்து அமைப்பினர் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்.
அதில் டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இந்துக் கோவில்களில் நடக்கும் இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி உள்ளார். இதற்கு முன்பு சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதித்தல் சம்பந்தமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவர் பேசியதால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்தேன். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டில் ஆகம விதிகளை குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா போலீஸ் நிலையங்களில் இந்து அமைப்பினர் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் சாய்பல்லவி, நக்சலைட் வேடத்திற்காக பயிற்சி எடுக்கவுள்ளாராம்.
தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்திலும் நடிக்கிறார்.
வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளதாம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நக்சலைட் வேடத்திற்காக பிரத்யேக பயிற்சி எடுக்க உள்ளாராம். இதற்காக படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ள முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் அவர் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறாராம்.
எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்தின் முன்னோட்டம்.
கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இதில், விமலும், வரலட்சுமியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதும் விமலும், வரலட்சுமியும் இடம் பெறும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்றார்.
கொரோனாவில் இருந்து மீண்ட பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
லண்டனில் இருந்து திரும்பி வந்த பாடகி கனிகா கபூருக்கு , கொரோனா தொற்று இருந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய அவர், கொரோனா சிகிச்சைக்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
பிளாஸ்மா தானம் செய்பவருக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு 12.5 புள்ளிக்கு அதிகமாகவும், எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். நீரிழிவு, இருதய நோய், மலேரியா உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கக் கூடாது. இந்நிலையில், கனிகாவின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரது பிளாஸ்மா மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்த ஏற்புடையதாக இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் டாக்டர் துலீகா சந்திரா கூறுகையில், ‘’கனிகாவின் குடும்ப மருத்துவ அறிக்கைையின்படி அவரது பிளாஸ்மா, தானமாக பெற ஏற்புடையதல்ல. மருத்துவ தர்மத்தின்படி, யாருடைய குடும்ப மருத்துவ அறிக்கையும் பகிர்ந்து கொள்ளப்படாது. அவரது பிளாஸ்மா சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என்றாலும், ஆய்வுக்கு உபயோகப்படும். ’ என்றார்.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனத்திடம் இரண்டு மடங்கு லாபத்தில் விற்றுள்ளனர். இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ்செய்ய தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படத்தை ரம்ஜான் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற மே 25-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சென்ற நடிகர் ராதாரவி அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தவர் ராதாரவி. இவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து பேச்சாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியில் மார்வளா செல்லும் சாலையில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு வந்தார். அங்கு அவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் நடிகர் ராதாரவியின் சொகுசு பங்களாவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் அனுமதி பெற்று வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

மேலும் நடிகர் ராதாரவி உள்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாலை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் பங்களாவுக்கு திரும்பி சென்றனர். சென்னையில் இருந்து கோத்தகிரி வந்த நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியன் 2 படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கப்பட்டது. இரண்டு இடங்களில் அதன் பணிகள் நடைபெற்று வந்தது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் 5 மணிநேரம் ஓடியதாகவும், அதை பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் வியப்படைந்ததாக கூறப்படுகிறது. அனைத்தும் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகள் என்பதால், அதற்கு கத்தரி போடாமல் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டாலாமா என்று ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு யோசித்துக் வருகிறார்களாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் டாப்சி, தான் ஒரு விளையாட்டு வீரரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் மற்றும் நாம் சபானா, பட்லா, மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். டாப்சிக்கு தற்போது 32 வயது ஆகிறது. இவர் வெளிநாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவரை பற்றிய விவரத்தை சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது காதலர் யார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாஸ் போயேவை காதலிக்கிறேன். இந்த காதலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் காதலரை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் ஏற்க மறுத்தால் காதல் பயனற்று போகும்” என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இந்த படம் ரம்ஜான் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதுபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். படங்களை ஒடிடி தளங்களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும், இந்த ஊரடங்கு சமயத்தில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்துகிறாராம்.
தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகைகளுக்கு சமையல் நன்றாக தெரியும். பழம்பெரும் கதாநாயகியான சவுகார் ஜானகி, சமையல் கலையில் தேர்ந்தவர். அவரை, ‘சமையல் ராணி’ என்றே அழைப்பார்கள். இவருக்கு ஓட்டல் நடத்திய அனுபவமும் உண்டு. இவரைப்போல் ராதிகா சரத் குமார், குஷ்பு, சுஹாசினி, மீனா, ரோஜா, ரேகா ஆகியோரும் சமையல் தெரிந்த நாயகிகள்.
சமையல் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு கூட, சமையலறை பக்கம் ஒதுங்காத அந்த நடிகைகள், ‘கொரோனா மற்றும் ஊரடங்கு புண்ணியத்தில் சமையல் கற்றுக்கொண்டார்கள்’. அவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

நடிகர்களில் சமையல் கலையில் தேர்ந்தவர், அஜித்குமார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரை, ‘நள மகாராஜா’ என்று நெருங்கிய நண்பர்கள் அழைப்பார்கள். அஜித் கையினால் சமைத்த பிரியாணியின் வாசனையையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் மறக்க முடியாதாம். அத்தனை ருசி!. ஆர்யா, விஷால், சூரி ஆகியோருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.
இந்த பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர், சிம்பு. இவருக்கு ருசியாக சமைக்க வருமாம். ஊரடங்கு விடுமுறையில் இவர் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார். “சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் மிக ருசியாக சமைப்பதில் தேர்ந்தவர், சிம்பு. அந்த வகையில், சிம்புவின் வருங்கால மனைவி கொடுத்து வைத்தவர்தான்” என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.






