என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஒருவர், கொரோனா நிவாரணத்துக்காக டிக்டாக்கில் நடன நிகழ்ச்சி நடத்தி ரூ.5 கோடி நிதி திரட்டி உள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் கூலித் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்தொலாவும் ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளார். தமிழில் வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி-4, பகல் பந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் உடல் எடையை குறைப்பதற்காக இணையதளத்தில் நடன வகுப்புகளை நடத்தினார். ஸூம்பா, லதின், டபாடா நடனங்களை சொல்லி கொடுத்தார். இது டிக்டாக் மூலம் அதிகமானோரை சென்றடைந்தது. இதன் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ளது. அந்த தொகையை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனா பாதிப்புகளுக்கு அனைவரும் உதவ வேண்டும். எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அதை குறைத்து மதிப்பிட கூடாது. நிவாரணம் வழங்கிய அரசியல்வாதிகள், நடிகர்களை பாராட்டுகிறேன்” என்றார்.
நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களிடம் பேசும்போது அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை என்று கூறி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தந்தையிடம் பெற்ற மோசமான தண்டனை எது என ஒரு ரசிகர் கேட்டார். ‘அப்பா என்னிடம் கோபப்பட்டு கத்தியதில்லை, தண்டனையும் அளித்ததில்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது.
எப்போதும் காரணம், தர்க்கத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை நான் தவறு செய்தேன். அதற்கு, நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என்றார் அப்பா. அவர் தற்போது சென்னையில் நலமாக உள்ளார். பாதுகாப்புக்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஊரங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவதை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன். கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டும் போக்கு பற்றி படிக்கிறேன்.
இது வருத்தம் அளிக்கிறது. சிலர் பயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் நடக்கிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா நோயாளிகளிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது’ இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியை நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல் முந்தி இருக்கிறார்.
ரஜினிகாந்த் 2013ம் ஆண்டு டுவிட்டருக்குள் வந்தார். அவர் வந்தபின் சுமார் மூன்று வருடங்கள் கழித்து 2016 இல் தான் கமல்ஹாசன் டுவிட்டருக்குள் வந்தார். ஆனால் அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.
டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்றுகூட கமல்ஹாசன் மீது அடிக்கடி அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் களத்தில் இறங்கி தேர்தலில்போட்டியிட்டு கணிசமான வாக்குகளும் பெற்றார்.
இந்நிலையில் டுவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள்.
கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த 4 பேர் ஓ அந்த நாட்கள் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.
இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.
அனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டி.சிவா தலைமையிலான ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானது.
அதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், முரளிதரன் ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்த அறிக்கையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அணியில் இருந்தும் இந்தக் குழுவில் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்தக் குழு பற்றி பாரதிராஜா கோபமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியல் ஒன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. நாகரிகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது.
தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை.
பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் திறக்காததால் பிரபல நடிகர் தன் மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக, நீண்ட தலைமுடியுடன் உள்ளனர். குழந்தைகளும் முடி வளர்ந்து அதை வெட்ட ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிவிட்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவி மட்டும் அல்ல மேலும் சில நடிகர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டிவிட்டுள்ளனர். ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் ஜெயம் ரவி மூத்த மகன் ஆரவுக்கு முடிவெட்டிவிட்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வரும் ராணா தன்னுடைய காதலி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. பாகுபலி படம் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார். மேலும் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் ராணா நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவர். இன்டீரியர் டிசைனிங் படித்தவர். ராணா - மிஹீகா காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் ராணா தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகாது என்று செய்திகள் வெளியானது.

தற்போது அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ரஜினியின் பேட்ட, தர்பார் படங்கள் பொங்கல் தினத்தில் தான் வெளியானது அந்த வரிசையில் தற்போது அண்ணாத்த திரைப்படமும் இணைந்து இருக்கிறது.
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நடிகை சன்னி லியோன் தனது கணவர் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இதை சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது தாயார் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார் என்ற கேள்விக்கு பதிலளித்து சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN விமானத்தில்தான் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது தாயார் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மஹத் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி போன்ற சிலரை தொடர்ந்து நடிகர் மஹத் ராகவேந்திராவும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்.
தனது சம்பளத்தை குறைத்துக்கொள்வது குறித்து மஹத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது ;
“இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்த திரையுலகில் இருந்து வருகிறேன்.. சில படங்களில் நடித்துள்ளேன்.. இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன்..
இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான். திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளதான் தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
பத்து பெர்செண்ட் இருபது பெர்செண்ட் குறைத்தாலும் பத்தாது. ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கு மேலான சுமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. எப்படி போட்ட பணத்தை எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்த சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது.
என்னைப் பொருத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன். என்றுமே ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கணும் என்பது தான் ஆசையாக இருக்கும்” என கூறியுள்ளார் மஹத் ராகவேந்திரா.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின்படி நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ஜெ.எம்.பஷீர் கதாநாயகனாகவும் மீனுகார்திகா, சௌந்திகா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ராதாரவி, பவர்ஸ்டார், தாடிபாலாஜி, ஆனந்த்நபாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், AM.சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அந்த படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகளுக்கு தயாரானது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் தற்போது வரை லாக்டவுன் தொடர்ந்து அமுலில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் சினிமா சம்பந்தப்பட்ட அறிவிப்பாக போஸ்ட் புரோடக்ஷன் எனும் திரைப்படம் படப்பிடிப்புக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ பணிகளை 5 பேர் கொண்ட டெக்னீஷியனுடன் சமூக இடைவெளி விட்டு பணிபுரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
சினிமா வட்டாரத்தில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதில் ஜெ.எம்.பஷீர் நடிக்கும் குற்றாலம் படத்தின் டப்பிங் பணி அதன் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடீயோவில் தொடங்கியது.

சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி படத்தின் முன்னோட்டம்.
பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி' என அவர் கூறினார்.