என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

    சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார். 

    இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரித்திகா சிங், இன்ஸ்டாகிராமில் பாடிக்கொண்டே துணி துவைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என் அம்மா என்ன எதிர்பார்த்தார், ஆனால் நான் என்ன செய்துள்ளேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    ஆபாச வீடியோக்களை அனுப்பி நெட்டிசன்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடிவழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார். 

    இந்த நிலையில் அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின்தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன்.

    அனுமோள்

    ஒருவர் தனது ஆபாச வீடியோக்களை வெவ்வேறு கணக்கில் இருந்து எனக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும் தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுபோன்ற ஆபாச படங்களை அனுப்பினால் பெண்களுக்கு அறுவெறுப்புத்தான் வரும். வேறு எந்த உணர்வும் ஏற்படாது”. இவ்வாறு அனுமோள் கூறியுள்ளார்.
    அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் ரூ.7,500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    டைட்டானிக் படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த படம் ‘அவதார்’. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. இதற்கு 3 ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன. 

    அடுத்தடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் தயாராகும் என்று அறிவித்தனர். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன.  வருகிற டிசம்பர் மாதம் 2-ம் பாகம் திரைக்கு வரும் என்று அறிவித்து, பின்னர் தேதியை 2021 டிசம்பர் 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். 

    அவதார் பட போஸ்டர்

    இதுபோல் அவதார் 3-ம் பாகம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியும், அவதார் 4-ம் பாகம் 2025 டிசம்பர் 19-ந்தேதியும், அவதார் 5-ம் பாகம் 2027 டிசம்பர் 17-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த 4 பாகங்களுக்கான மொத்த பட்ஜெட் ரூ.7500 கோடி என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    நியூசிலாந்தில் அவதார் படத்துக்கான அரங்குகள் அமைத்து ஜேம்ஸ் கேமரூன் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்களையும் பட நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. தண்ணீருக்குள் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
    பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, தனது இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. விஜய்யின் குஷி படத்தில் ‘மெக்கொரீனா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. 2012-ல் ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  

    இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி-ராஜ்குந்த்ரா தம்பதியினர் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வாடகைத் தாய் மூலம் இரண்டாவது பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதற்கான காரணத்தை ஷில்பா ஷெட்டி தற்போது முதல்முறையாக வெளியிட்டு உள்ளார்.

     அவர் கூறியதாவது: “என் மகனுக்கு சகோதர உறவோடு இன்னொரு குழந்தை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் இரண்டுமுறை நான் கருத்தரித்தும் எனக்கிருந்த ஆரோக்கிய குறைபாடினால் கருச்சிதைவு ஏற்பட்டது. மீண்டும் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று யோசித்தேன். அதுவும் அமையவில்லை. இதைத்தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன்”. இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
    நடிகை சோனா தனக்கு இரண்டு முறை காதல் வந்ததாகவும், திருமணம் வரை நெருங்கி கடைசி நிமிடத்தில் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
    துணிச்சலாக பேசும் நடிகைகளில் சோனாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில், 125 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அவரிடம், “இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சோனா கூறியதாவது: “என் வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவருடன் 6 வருடங்கள் உயிருக்குயிராக பழகினேன்.

    இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன். அந்த 2 காதலும் தோல்வியில் முடிந்தது. 2 பேருடனும் திருமணம் வரை நெருங்கினேன். கடைசி நிமிடத்தில் ஏமாற்றி விட்டார்கள். இதனால் திருமண வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. “சீக்கிரமே திருமணம் செய்து கொள்” என்று நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். 

    சோனா

    எனக்கு 2 கடமைகள் இருக்கிறது. அதில் ஒன்று, என் தங்கை திருமணம். இன்னொன்று, ஒன்றுவிட்ட இன்னொரு தங்கையின் திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்து இருக்கிறேன். தத்து எடுத்து வளர்ப்பவர்கள் மீது அந்த குழந்தைகள் பாசமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். 

    என் சுயசரிதையை நான் எழுதி முடித்து விட்டேன். அதில், நிறைய முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அதை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறேன். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், வெளியில் எங்கும் போக முடிவதில்லை. நான்கு சுவர்களை பார்த்தபடி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். இப்போதைக்கு அந்த 4 சுவர்கள்தான் என் நண்பர்கள்”.

    இவ்வாறு சோனா கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கவினை தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா மற்றும் கவின். இவரது காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர்.  ஆனால் நிகழ்ச்சிக்கு பின் இவர்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் அவரவர் வேலைகளை மட்டும் பார்த்து வருகின்றனர். 

    லாஸ்லியா தற்போது பிரண்ஷிப் படத்திலும், கவின் லிப்ட் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்கள். 

    சமீபத்தில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு செல்பி எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா எப்பயாது உதவும், லிப்ட் படத்தின் போது எடுத்தது என்று பதிவிட்டிருந்தார். 

    தற்போது இதை போன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று செல்பி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்களது தவறுகளை ஏற்றுக் கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

     லாஸ்லியாவின் இந்த கருத்து கவினை மறைமுகமாக கூறுகிறாரோ என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
    தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் டிரிப் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை பற்றி எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய், தான் இளவயது நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி கடந்த 2014-ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு டூர் சென்றபோது எடுத்த போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
     நடிகர் சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்.
    விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்" என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 
    தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி பிரபல நடிகையின் மகள் மாஸ் காண்பித்திருக்கிறார்.
    கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இப்படத்தை அடுத்து அஜித்துடன் அசல்', 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

     தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் சமீரா நடித்துள்ளார்.
    ரஜினி
    சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையான மகள் நைரா ரஜினிகாந்த் ஸ்டைலில் கண்ணாடி அணியும் வீடியோவை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபலங்கள் முதல் குழந்தையின் ஸ்டைலை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
    மே 18-ஆம் தேதி புதிய படத்தின் தலைப்பை அறிமுக இயக்குனர் சபரிநாதன் முத்து பாண்டியன் வெளியிட இருக்கிறார்.
    இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் தங்களது படைப்பைப் பற்றி பேசும்போது :

    கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் காரணமாக பல பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா துறையில் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு 144 தடை உத்தரவை தளர்த்தி சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான ரீ ரிக்கார்டிங் டப்பிங் போன்ற நிலைகளில் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி ரீரெக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 18-ஆம் தேதி முதல் பார்வையை வெளியிடவுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கதையோடு உங்களை விரைவில் சந்திப்போம். என்றார்.
    தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பெண் போலீசுக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்.
    கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. இதில் ஆண், பெண் என பேதம் இல்லாமல் இரவு பகலாக போலீசார் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஓடிசா மாநிலத்தில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டரான சுபஸ்ரீ நாயக் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநலம் குன்றிய வயதான ஒரு பெண்மணிக்கு தான் வைத்திருந்த உணவை பெண்ணுக்கு ஊட்டிவிட்டார். அந்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிரஞ்சீவி, அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, அவரது தொலைபேசி எண்ணை பெற்று வீடியோ சாட்டிங்கில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார். 
    பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், மாணவி எரித்துக் கொன்ற சம்பவத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்? 

    ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு? 

    முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவிப் பெண் சிறுமதுரை ஜெயஶ்ரீக்கும், மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம்  கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். 

    இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது. 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது என்று கூறியுள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன்.

    சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும். எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

    நடிகை ரம்பா


    அது மட்டுமின்றி, மேலும் மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
    ×