என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சிரஞ்சீவி  - பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ (உள்படம்)
    X
    நடிகர் சிரஞ்சீவி - பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ (உள்படம்)

    பெண் போலீசை நெகிழ வைத்த சிரஞ்சீவி

    தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பெண் போலீசுக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி நெகிழ வைத்திருக்கிறார்.
    கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. இதில் ஆண், பெண் என பேதம் இல்லாமல் இரவு பகலாக போலீசார் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஓடிசா மாநிலத்தில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டரான சுபஸ்ரீ நாயக் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மனநலம் குன்றிய வயதான ஒரு பெண்மணிக்கு தான் வைத்திருந்த உணவை பெண்ணுக்கு ஊட்டிவிட்டார். அந்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிரஞ்சீவி, அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, அவரது தொலைபேசி எண்ணை பெற்று வீடியோ சாட்டிங்கில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார். 
    Next Story
    ×