என் மலர்
சினிமா செய்திகள்
சின்னத்திரை மற்றும் பெரியத்திரைகளில் நடித்து வரும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். மெட்டி ஒலி, சித்தி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸின் மகன் சந்தோஷ் நேற்று திடீரென மரணமடைந்திருக்கிறார். மாரடைப்பால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாகச் சொல்கிறார்கள். விருகம்பாக்கத்தில் வசித்து வந்த சந்தோஷுக்கு வயது 34. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அங்குதான் எனக்கு நிம்மதி என்று கூறியுள்ளார்.
கங்கனா ரனாவத்தை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்கின்றன. அவருக்கும் மராட்டிய மாநில அரசுக்குமான மோதல் பெரிதாகிக்கொண்டே போகிறது. தற்போது அவர் கையில் இருக்கும் படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படப்பிடிப்புத் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கங்கனா கூறியிருப்பதாவது: வணக்கம் நண்பர்களே, அன்பான மற்றும் மிகவும் திறமையான இயக்குநரான ஏ.எல்.விஜய்யுடன் திரைப்படம் குறித்து உரையாடியபோது எடுத்த சில படங்கள் இவை. உலகில் எத்தனையோ அற்புதமான இடங்கள் இருக்கலாம்.

ஆனால், படப்பிடிப்புத் தளங்களே எனக்கு மிகவும் நிம்மதியான, இனிமையான இடங்களாக இருக்கின்றன.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவாக கங்கனா நடிப்பதற்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே எதிர்ப்புகளும் கிண்டல்களும் எழுந்தன. தற்போதைய படங்களுக்கும் அதே கிண்டல்கள் வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஸ்டைலில் நடிகை வனிதா பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்ட பின்னர் மக்களிடம் மீண்டும் பிரபலமானார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் மட்டும் அல்லாது அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை பக்கம் பிசியாக இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

கொரோனா ஊரடங்கில் விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்ட வனிதாவை சர்ச்சைகள் துரத்தின. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்த வனிதா விஜயகுமார், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட கோவா சென்றுள்ளார். வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் நயன்தாரா கோவா பயணம் சென்றிருந்த நிலையில், தற்போது பீட்டர்பால் - வனிதா ஜோடியின் பிறந்தநாள் பயணமாக கோவா சென்றுள்ளனர்.
மனோபாலாவை தலைவராக தேர்வு செய்தது தவறு, சங்கத்துக்கு எதிரானது என்று ரவி வர்மா பேட்டி அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவிவர்மா மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக நடிகர் மானோபாலாவை தேர்வு செய்தனர். இதனை கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, ரிஷி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர். ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அவர்கள் கையெழுத்து வாங்கிய சில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள். ரவிவர்மாவை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்கே உண்டு. கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன.

சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மா சங்கத்தின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார். சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை என்பதால் அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்தததும் தவறு. சங்கத்துக்கு எதிரானது.
இவ்வாறு கூறினர்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் மைத்ரேயா, துஷாரா விஜயன், சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்புள்ள கில்லி’ படத்தின் முன்னோட்டம்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார்.
இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, ‘அன்புள்ள கில்லி’ படத்தில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார்.

இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் தான் நாய்க்கு சூரியை குரல் கொடுக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தார். இதுதொடர்பாக சூரியிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். அவரது பின்னணி குரல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது: வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் எனது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தை தத்ரூபமாக எடிட் செய்த கரண் ஆச்சார்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோது அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழச்செய்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், பிரபல ஓவியரும், கிராபிக் டிசைனருமான கரண் ஆச்சார்யாவிடம் ரசிகர் ஒருவர், மேக்னா ராஜின் வளைகாப்பில் சிரஞ்சீவி சர்ஜா இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து தருமாறு கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று தனது கைவண்ணத்தை காட்டிய கரண் ஆச்சார்யா, கர்ப்பிணி மனைவியை சிரஞ்சீவி சர்ஜா கைதாங்கலாக கூட்டிச் செல்வது போல் தத்ரூபமாக எடிட் செய்து அசத்தி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
🙏🙏🙏 pic.twitter.com/sH0DCQkkyx
— karan acharya (@karanacharya7) October 5, 2020
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது: ”திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கமண்ட் போட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் காஜல் அகர்வால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது, விரைவில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






