search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காஜல் அகர்வால்
    X
    காஜல் அகர்வால்

    திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்.... குவியும் வாழ்த்துக்கள்

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.


    இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது: வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் எனது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். 

    காஜல் அகர்வால், கவுதம் கிச்லு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×