என் மலர்
சினிமா

நடிகை சாந்தி வில்லியம்ஸ்
நடிகை சாந்தி வில்லியம்ஸ் வீட்டில் நடந்த சோகம்... பிரபலங்கள் அதிர்ச்சி
சின்னத்திரை மற்றும் பெரியத்திரைகளில் நடித்து வரும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். மெட்டி ஒலி, சித்தி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸின் மகன் சந்தோஷ் நேற்று திடீரென மரணமடைந்திருக்கிறார். மாரடைப்பால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாகச் சொல்கிறார்கள். விருகம்பாக்கத்தில் வசித்து வந்த சந்தோஷுக்கு வயது 34. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story






