என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

சில மணிநேரங்களுக்கு முன்னதாக இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சரை நேரில் சந்தித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் தாயார் காலமானார். இவரது மறைவையொட்டி பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார்.
பெங்களூருவில் பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எனக்கு அந்த பழக்கம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
கன்னட திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது தோழர்கள் என 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நடிகை ஹரிப்பிரியா கூறியதாவது:-

எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நான் ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்துதான் கன்னட நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் செய்தியை தெரிந்து கொண்டேன். நான் எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கும் இதுவரையில் சென்றதில்லை. போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவர்களின் பெயர்களை போலீசார் வெளியிட வேண்டும். நான் மிகுந்த பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். தற்போது திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
முரளிதரன் பயோபிக்கான 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்
ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை டக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, தற்போது அவரை அடித்து துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கொண்டாட நடிகை வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் கோவாவில் பீட்டர் பால் நன்றாக குடித்துவிட்டு போதையில் வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பொறுத்துப்போன வனிதா, ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி பீட்டர் பாலை அடி வெளுத்துவிட்டாராம்.
இந்த தகவலும் பரபரப்புக்காக கூறப்பட்ட ஒன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து வந்த நிலையில், இது அனைத்தும் உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்தர் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பீட்டர் பால் - வனிதா பிரிவு குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆமா... உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி(பீட்டர் பால்) என பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் 4வது சீசனில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட நடிகை ரேகா, பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். 17வது போட்டியாளராக அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
முதல் வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாரம் நிச்சயம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா, ஷிவானி, சம்யுக்தா, கேப்ரியல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் இருந்து ரேகா வெளியேற்றப்பட்டார். ரேகா வெளியேற்றப் படுகிறார் என கமல் அறிவித்ததும் இதர போட்டியாளர்கள் கண்கலங்கினர்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகை ரேகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவில், தான் ஷிவானி மற்றும் பாலாஜியை மிகவும் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார். ரேகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்லுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழ் திரையுலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த இழப்புகளை ஈடு செய்யும் வகையில் தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வந்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணி செய்யுங்கள்.
திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.
தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்திலிருந்து 30 சதவீதம் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?
தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளத்தில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?
எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை (30%) விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளத்தைப் பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம்". இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது.
நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.
நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை” என கூறினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது.
பின்னர், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை சீரமைக்க தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை ஜோதிகா வழங்கி இருந்தார்.

இந்நிலையில், ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் இரா.சரவணன், “எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக தன்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்... அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு” என பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை வைத்து நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நானி, ரிதுவர்மா ஆகியோர் நடிக்கும் டக் ஜெகதீஷ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது.
இந்த படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஹர்வாடி என்ற இந்தி டி.வி. தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார். மேலும் படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் உருவாகும் ‘நிழல்’ என்ற திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டுவென்டி 20 படத்தில் ஒரு பாடல் காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர்.

இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என. தான் பரிந்துரைத்ததாக குஞ்சாக்கோ போபன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக, நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்கும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மோகன்லால், டோவினோ தாமஸ் உள்பட பல முன்னணி தங்கள் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகை நயன்தாராவும் சம்பளத்தைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் நடிகர்- நடிகைகளிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து பாலிவுட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அங்குள்ள சில டிவி சேனல்கள், திரைத்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்து வருகிறார்கள். இதையடுத்து இரண்டு டிவி சேனல்களுக்கு எதிராக 34 பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களும், 4 சங்கங்களும் இணைந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் சில டிவி சேனல்கள் திரைப்பட துறையினருக்கு எதிராக பொறுப்பற்ற, கேவலமான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் திரை உலகம் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பிரபல நடிகை ஹேமமாலினி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அவமானப்படுத்துவது மிகவும் அதிகமாக செல்கிறது. அனைவரும் கறைபடாதவர்கள் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் நம் அனைவரையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், தீமையானவர்கள் என்று முத்திரை குத்துவது வெட்கக்கேடானது. சகித்துக் கொள்ள முடியாதது. பாலிவுட் திரை உலகில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. யாரும் என்னிடம் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 புதிய படங்கள் ரிலீசாக உள்ளதாம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே அக்டோபர் 22-ம் தேதி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தமிழ் திரையுலகில் வேகமெடுத்துள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’, அருள்நிதி, ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளி ரிலீசை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






