என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கண்டங்கள் வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். 

    வழக்குபதிவு

    இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் திடீர் அறிக்கையை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.

    இப்படத்தை அடுத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், நடிகர் சிம்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் வியாழக்கிழமை (22-10-2020) முதல் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் இணைய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    சிம்புவின் அறிவிப்பு

    இதற்கான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
    மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும்  இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். 

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிரபல பாடகி ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

    இதையடுத்து கடந்த வாரம் நடிகை ரேகா எலிமினேட் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரும் உள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகளை பெறும் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். 

    சுசித்ரா

    இந்நிலையில், அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதனால் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக புதிய போட்டியாளர்களை களம் இறக்கி நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது. 

    பிரித்விராஜ்

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜுக்கும், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

    அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என நம்புவதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
    டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.  

    சின்மயியின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
    பேய்மாமா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு தான் சம்பளமே வாங்காமல் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
    விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் யோகிபாபு பேசியதாவது: “ஷக்தி சிதம்பரம் என்னை கதாநாயகனாக நிறுத்தி உள்ளார். மிகவும் பயமாக இருக்கிறது. இந்தப்படம் முதலில் வடிவேல் நடிப்பதற்காக பண்ணியது என்று ஷக்தி சொன்னார். உடனே நான் “வடிவேல் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி செட்டாகும்” என்று கேட்டேன்.

    இந்தப்படம் வெற்றி அடைய எல்லோருடைய ஆதரவும், அன்பும் வேண்டும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. சமீபத்தில் கூட ஒரு பெண் உதவி இயக்குனர், ஒரு கதை பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக் கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. 

    பேய்மாமா இசை வெளியீட்டு விழா

    நான் உடனே “இலவசமாக நடித்து தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். படத்தின் டிரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான்.” இவ்வாறு அவர் பேசினார்.
    ‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான அதிதிராவ், தற்போது அப்படத்திலிருந்து திடீரென விலகி உள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது. 


    இதில் கதாநாயகியாக காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதிராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் கலந்துக் கொண்டார். தற்போது ஊரடங்கு தளர்வால் துக்ளக் தர்பார் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

    அதிதிராவ், ராஷி கண்ணா, விஜய் சேதுபதி

    இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதிராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் தற்போது இன்னொரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும், இதனாலேயே விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. 

    இதையடுத்து அதிதிராவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராஷி கண்ணாவை தேர்வு செய்துள்ளனர். நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தனர் தெரிவித்தனர்.
    மும்பை :

    பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர் கூறியிருந்தது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் சஞ்சய் தத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    சஞ்சய் தத் ஒருவகையான நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மும்பையில் சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணருகிறார். அவர் இன்று (நேற்று) மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முடிவு மிகச்சிறந்ததாக அமைந்தது. கடவுள் கருணை மற்றும் அனைவரது ஆசியாலும் அவர் நன்றாக உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கடந்த 14-ந் தேதி சஞ்சய் தத் வெளியிட்ட வீடியோ பதிவில், “தற்போது இது எனது வாழ்வின் அச்சுறுத்தல். ஆனால் அதை நான் வெல்வேன். புற்றுநோயில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்“ என்று தெரிவித்து இருந்தார்.

    வருகிற நவம்பர் மாதம் ‘கே.ஜி.பி. சாப்டர் 2‘ படத்தில் நடிக்க சஞ்சய் தத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் டிரைலர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’சூரரைப் போற்று’படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிரைலரின் ரன்னிங் டைம் ஒரு நிமிடம் 52 வினாடிகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ’சூரரைப் போற்று’திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூரரைப்போற்று அப்டேட்

    இப்படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
    தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார்.

    அதன்பின் மிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது பத்திரிக்கையாளர்கள் நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான். இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு படம் வருகையிலும் உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது. விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும் நல்லா இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன். 

    மிஷ்கின்

    எனது புதிய படம் பிசாசு 2 குறித்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன். இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, அவருடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது’ என்றார். 
    கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியதை தொடர்ந்து, பிரபல இயக்குனர் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாக இருந்தது. இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. இந்த படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்தார். மேலும் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

    சீனு ராமசாமி பதிவு

    விஜய் சேதுபதி விலகியதை தொடர்ந்து, ‘தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல் எப்போதும் போல எளிமையாக நன்றி வணக்கம் என்று தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்’ என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.
    ×