என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தான் இன்னும் பயத்தில் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
    நடிகை தமன்னா கொரோனா தொற்றில் சிக்கி மீண்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    நான் உடற்பயிற்சியில் ரொம்ப அக்கறை எடுப்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதும் உடற்பயிற்சிகள், யோகா செய்து கொண்டே இருப்பேன். படப்பிடிப்போடு உடற்பயிற்சியும் எனது வாழ்க்கையில் ஒன்றாக இருந்தது. கொரோனா ஊரடங்கிலும் உடற்பயிற்சிகள் செய்து புகைப்படங்களை வெளியிட்டேன். ரசிகர்கள் நண்பர்களுக்கும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வந்தேன்.

    தமன்னா

     ஆனால் எனக்கு கொரோனா தொற்று வந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது திரும்பி விட்டேன். மறுபடியும் உடற்பயிற்சியை ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனது வேகம் குறைந்து விட்டது. முன்புபோல் செய்ய முடியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே சோர்வாகி விடுகிறேன். இதனால் மிகவும் பயந்து போய் இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறேன். 

    கொரோனா வந்தால் மிகவும் சோர்வாகி விடுவோம். மீண்டும் சக்தியை கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். எனவே குணமான பிறகும் உடற்பயிற்சியை விட்டு விடாமல் பழைய நிலைக்கு மாற உழைக்க வேண்டும்.

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    சூப்பர் ஹிட்டான கேஜிஎப் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்திய கருடா தற்போது புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளார்.
    யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎப்’. இதில் வில்லனாக கருடா என்ற கதாபாத்திரத்தில் ராம் என்பவர் நடித்திருந்தார். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பெரிதளவு ஈர்த்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது கேஜிஎப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், கருடா ராம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘13ம் நம்பர் வீடு’ என்ற படத்தில் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் கருடா ராம். இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த பாடல் படத்திற்கு பலம் சேர்க்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கருடா ராம்

    13ம் நம்பர் வீடு படத்தில் ரமணா, சஞ்சீவ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை விவி கதிரேசன் இயக்கியுள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, கால் டாக்ஸி என்னும் படத்திற்கு உதவி செய்து இருக்கிறார்.
    கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

    இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

    கால் டாக்ஸி படக்குழுவினர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலின் திருமணம் இன்று வீட்டிலேயே நடைபெற்றுள்ளது.
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிவானது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். 

    கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை இன்று பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே எளிமையாக நடத்தி இருக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

    காஜல் அகர்வால்

    இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, அடுத்த படத்திற்காக பயிற்சி எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் திரிஷா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை ஆகிய படங்கள் உருவாகி இருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷா நடிக்கிறார்.

    சரித்திரம் படம் என்பதால் இதற்காக நடிகை திரிஷா தற்போது குதிரை பயிற்சி செய்து வருகிறார். குதிரையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கும் திரிஷாவிற்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    திரிஷா

    பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கலையரசன், குதிரை வால் என்ற படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
    பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கலையரசன். இப்படத்தை அடுத்து டார்லிங், கபாலி, அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘குதிரை வால்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இதில் கலையரசனுடன் காலா பட புகழ் அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. குதிரைவால் திரைப்படம் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இதன் டீசர் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது கலையரசனுக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குதிரை வால் படத்தில் கலையரசன்

    அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். ராஜேஷ் கதை எழுதியிருக்கிறார். இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக உருவாக்கி இருக்கும் படக்குழுவினர், படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தை தவிர பா.ரஞ்சித் இயக்கி வரும் சல்பெட்டா படத்திலும் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வந்த மீரா மிதுன் பலரின் முகத்திரை கிழிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த மீரா மிதுன், கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, உள்ளிட்டோரைப் பற்றி சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்தார்.

    தற்போது, மீரா எனும் தமிழ்ச்செல்வி என்ற புதிய படத்தை இயக்குவதாக மீரா மிதுன் அறிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் மூலம் தான் ஒரு பிரபலம் என்று  பீத்திக்கொள்ளும் பலரின் முகத்திரை கிழிக்கப்படும்... உண்மை ஒருபோதும் தோற்பதில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

    மீரா மிதுன்

    இந்த படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மீரா மிதுன் வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
    நடிகை மேக்னா ராஜுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைக்கு செல்லப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
    கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மறைந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு கடந்த 22-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

    சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜ் தம்பதியின் குழந்தை

    இந்நிலையில், அந்த குழந்தையை ‘சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருகிறார்களாம். கவலைகளை மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளதாக மேக்னாராஜின் தந்தை தெரிவித்துள்ளார். விரைவில் மேக்னா ராஜ் குழந்தையின் பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும், அதனை பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பாதியில் வெளியேறினார்.
    தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வாரம் அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார். 

    தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆன நிலையில் நேற்று போட்டியாளர்களில் ஒருவரான நோயல் சீன் பாதியில் வெளியேறினார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். பரிசோதனையின் முடிவில் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

    நோயல் சீன்

    இதற்கு முன்னர் கங்கவா என்ற போட்டியாளர் 34-வது நாளிலேயே உடல் நலக்குறைவால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். இவர்கள் இருவருக்கும் கொரானோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 8 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர். இதுதவிர உடல்நலக் குறைவால் 2 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது வெறும் 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் 47 நாட்கள் இருப்பதால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சிலரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை ஹன்சிகா டுவிட்டரில் நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது.

    கடந்த மாதம் அரசு அனுமதி அளித்ததையடுத்து மஹா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. 

    ஹன்சிகாவின் டுவிட்டர் பதிவு

    இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, இப்படம் சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி, படக்குழுவுக்கு நன்றி, குறிப்பாக சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என பதிவிட்டுள்ளார். மஹா படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    அட்லீயின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாகவும், அதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ. 

    இந்நிலையில், இப்படத்தை வருகிற நவம்பர் 24-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக அட்லீ அறிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

    விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

    கோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியுள்ளார்.
    நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். 

    இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார். அக்‌ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘அத்ரங்கி ரே’ படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், ‘இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியதும், அவருடன் பேசியதும் இனிமையான தருணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தனுஷ் இதற்கு முன்னர் பல படங்களில் பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்போது தான் முதன்முதலாக பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×