என் மலர்
சினிமா செய்திகள்
அண்மையில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த உடனே புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம், ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பிரபல பாடகி ஒருவர் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றுள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். சுசித்ராவின் என்ட்ரியை பார்த்து சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர். பாடகி சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் பட நடிகை ஒருவர் தான் 3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். .
இந்நிலையில், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில் அவர் கூறியதாவது: “3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிகம் விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்துள்ளேன்.

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிலர் பரிந்துரை செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பாத்திமா சனா ஷேக்கின் இந்தப் பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்ட நடிகர் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாக அவரது தங்கை இலக்கியா கூறியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்". இவ்வாறு இலக்கியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த தளர்வுகளில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நம்பவர் 30-வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொரோனாவால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் திரிஷ்யம் படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளார்.
இதே படத்தில் நடிக்கும் மீனாவும் சம்பளத்தை குறைத்து இருக்கிறார். நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்துக்கு சம்பளத்தை குறைத்து இருக்கிறார். டாப்சியும் குறைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவும் சம்பளத்தை குறைத்துள்ளார்.

தற்போது தெலுங்கில் தயாராகும் புதிய படத்துக்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளம் கேட்டதாகவும், கொரோனா பாதிப்பினால் தயாரிப்பாளருக்கு உதவ ரூ.20 லட்சம் குறைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாறா படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல் நடிகராக நடித்த ஷான் கானெரி 90 வயதில் காலமானார்.
ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி.

இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்படங்களை அடுத்து துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. லாஸ்லியாவின் பெற்றோர் கனடாவில் இருக்கும் தங்கள் நண்பரின் மகனுக்கு லாஸ்லியாவை கட்டிவைக்க பேசி வருவதாகவும், இதற்கு லாஸ்லியா விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இந்த செய்தி உண்மை என்றால், லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திருமணம் நடக்க இருப்பதாக வந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
பிரபல பிண்ணனி பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி, மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
LR Eshwari amma, the LEGEND. Look at her insane energy and enthusiasm at 80..! Honoured and proud to have her sing and act in our film 😍😍😍 #MookuthiAmman shooting stories ❤️❤️❤️ pic.twitter.com/u0OXbS3j9r
— RJ Balaji (@RJ_Balaji) October 31, 2020
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜியுடன் எல்.ஆர்.ஈஸ்வரி ஆட்டம் போடுகிறார். இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடி நடிக்கவும் செய்திருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்து வருகிறார்.
அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த "டூ லெட்" திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.
தமிழில் டூலெட், திரௌபதி படங்களில் நடித்த ஷீலா, மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த "கும்பளங்கி நைட்ஸ்" என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் அளித்த பேட்டியில், தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். அதுமட்டுமல்ல, கிரைம் திரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
"டூ லெட்", "கும்பளங்கி நைட்ஸ்", படங்களுக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். நானும் எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார்.






