என் மலர்
சினிமா செய்திகள்
கமலின் இளைய மகள் அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில் பிரபல நடிகையின் மகன் விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அக்ஷரா ஹாசனின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையானது. சிலர் அர்ப்ப சுகத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று அக்ஷரா ஹாசன் கண்டித்தார். முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்ஷரா ஹாசனும் காதலித்ததாகவும் தனுஷ் விர்வானிதான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தனுஷ் விர்வானி கூறும்போது, “அக்ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார்.

அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின. இதனால் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம். எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் எனது தாய் ரதி அதிர்ச்சியாகி அக்ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் பேச முயன்றார். நான் தடுத்து விட்டேன்” என்றார். ரதி தமிழில் கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது

அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவான்மியூர் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த வேதிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டாப்சி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமந்தா என பல நடிகைகள் கடந்த சில வாரங்களாக மாலத் தீவிற்கு சென்று பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். சமந்தா வெளியிட்ட பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது. நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடினார்.

அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார் பிரபல நடிகை வேதிகா. விடுமுறையை கொண்டாடி வரும் வேதிகா கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் காளை படத்தில் நடித்திருந்தார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.
நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சந்துரு என்பவர் இயக்கும் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது நடிகர் விஜயின் யூடியூப் சேனல்.

விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிட்டு பரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாக இருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் முன்னோட்டம்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன.
ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.
தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் சினிமா காட்சிகளும் அவ்வப்போது ரத்து செயப்படுகின்றன.
இதனால் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. எனவே சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தயங்கி வருகிறார்கள்.

புது படங்களை ஓ.டி.டி. யில் வெளியிட்டால் படம் எடுக்க செலவழித்த பட்ஜெட்டைவிட லாபம் பார்க்கலாம், ரசிகர்களும் அதிகம்பேர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்து விடுவார்கள் என்று கருதுகின்றனர்.
ஏற்கனவே சூர்யா நடித்த ‘சூரரைபோற்று’, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’, நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாயின. இதில் தயாரிப்பாளர்கள் லாபமும் பார்த்தார்கள்.
இதையடுத்து சுமார் 18 படங்களை ஓ.டி.டி.யில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பாரீஸ் பாரீஸ்’, ‘கர்ஜனை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘திகில்’, ‘ஜிந்தா’, ‘ஆட்கள் தேவை’, ‘மாமாகிகி’, ‘யாதுமாகி நின்றாய்’, ‘ஹவாலா’, ‘மதம்’ உள்பட 18 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வெளிவர தயாராகி வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’, சித்தார்த் நடித்துள்ள ‘சைத்தான் கா பச்சா’, மாதவன் நடித்துள்ள ‘மாறா’ ஆகிய படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் அஜித்தின் பழைய படங்களுக்கு பாலிவுட்டில் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் தமிழை தவிர்த்து பிறமொழியில் நடித்துள்ளார் என்றால் அது இந்தியில் மட்டும் தான். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான அசோகா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். இதன்மூலம் பாலிவுட்டிலும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். இதனால் அவரது படங்கள் தற்போது இந்தியில் டப் செய்து வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில், அஜித் நடித்த வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால், அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி அஜித்தின் பில்லா, வரலாறு, வீரம், என்னை அறிந்தால் உட்பட பல படங்கள் இந்தியில் டப் செய்யப்படும் என தெரிகிறது.
நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை சிவகுமார், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
அவர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் அவரது குடும்பத்தினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனித்துவமான அமைப்பாகும். சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்கி வருகிறது.
இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சினிமா, டி.வி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்பு இதில் இருக்கும்.

இந்த அமைப்புக்கு ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவு அளித்துள்ளது. சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
அஜித் பட ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான பிங்க் , தமிழில் நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டு ரீமேக் செய்யப்பட்டது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பதிலாக நடிகர் அஜித்குமார் நடித்திருப்பார். இந்தப் படம் இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வருமானத்தை ஈட்டியது.
ஆனால் இந்தியில் இல்லாத ஒரு வேறுபாடு தமிழில் என்னவென்றால் அஜித்துக்கு ஒரு மனைவி இருந்தது தான். இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி இருக்காது. ஆனால், நேர்கொண்ட பார்வையில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்து இருப்பார். இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

பொதுவாக தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் படங்கள் எல்லாம் தமிழில் உள்ள கதையை தான் அப்படியே பிரதிபலிக்கும். அதனால் தமிழில் வித்யாபாலன் இடம்பெற்றதைப் போன்று தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்திற்கு நடிகை சுருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் யாருமே முன்வரவில்லையாம். கடைசியில் இந்த படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒத்துக் கொண்டதால் அவருக்கு சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் முழு சம்பளம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.வீரகுமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேஸிங் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் பட உலகின் துணிச்சல் மிகுந்த கதாநாயகிகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். இவர் நடித்திருக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘சேஸிங்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். கே.வீரகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாசி இசையமைத்துள்ளார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் கே.வீரகுமார் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். சண்டை காட்சிகளில் வரலட்சுமி ‘டூப்’ போடாமல் நடித்தார். படுபயங்கரமான ‘கார் துரத்தல்’ காட்சியை மலேசியாவில் படமாக்கினோம். அந்த காட்சியிலும் துணிச்சலாக வரலட்சுமி நடித்துள்ளார்.

சண்டை காட்சிகளையும், கார் துரத்தல் காட்சியையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் படமாக்கினார். படத்தில் இடம்பெறும் 70 சதவீத காட்சிகள், மலேசியாவில் படமாக்கப்பட்டன. கதைக்கு தேவைப்பட்டதால், மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தினோம்.
இது, திகிலான கதையம்சம் கொண்ட படம். பெண்களை கடத்தி ஆசைகளை தீர்த்துக் கொண்டபின் கொலை செய்கிறது, ஒரு கும்பல். இளைஞர்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்குகிறார்கள். அவனை பிடிக்க துப்பறிகிறார், வரலட்சுமி. அப்போது சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார், அவன் கொலை குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? என்பதே கதை.”






