என் மலர்
சினிமா செய்திகள்
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக உள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது.

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்க உள்ளார். ராமாயண கதைப்படி சீதாவின் கதாபாத்திரமும் முக்கியமானது தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவுக்கு அவரது தாயார் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் சிம்பு தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில், அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்துள்ளார்.

நீண்ட நாளாக நடிகர் சிம்பு விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார். தனது தாயின் பாசமிகு பரிசை பெற்றுக்கொண்ட நடிகர் சிம்பு தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்.
விக்னராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அந்தகாரம்’ படத்தின் விமர்சனம்.
சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் தாசின் தொலைபேசியில் அடிக்கடி ஒரு மர்மமான அழைப்பு வந்து அவரை பயமுறுத்துவதும், உடலில் இருந்து ஆத்மாவை பிரிக்கப்போவதாக மிரட்டுவதுமாய் தொல்லை கொடுக்கிறது. வீட்டிலும் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் நடுங்குகிறார்.
இன்னொரு புறம் பார்வை இழந்த வினோத் கிஷன் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி மாற்று சிறுநீரகம் பொருத்த பணத்துக்கு அலைகிறார். பேய் ஓட்டும் மாந்திரீகம் அவருக்கு தெரியும். தொழில் அதிபர் வாங்கிய பங்களாவில் உள்ள ஆவியை விரட்டினால் பெரிய தொகை தருவதாக கூறுகிறார்கள். அதை ஏற்று பேய் பங்களாவுக்குள் செல்கிறார். அங்கே அவர் கடுமையாக தாக்கப்படுகிறார்.

மற்றொரு பக்கம் மனநல மருத்துவரான குமார் நடராஜனை ஒரு மனநோயாளி சுடுகிறான். இதனால் பேசும் திறன் இழக்கும் மருத்துவர் வேறொரு முடிவை எடுக்கிறார். இப்படி மூன்று பேரின் கதைகளை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி ஒரே புள்ளியில் கொண்டு வருவதும் அர்ஜுன் தாஸை பயமுறுத்துவது யார்? வினோத் கிஷன் என்ன ஆகிறார்? மருத்துவரின் இன்னொரு முகம் என்ன? போன்ற மர்மங்களுக்கு விடை கொடுப்பதே படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் மெருகேறி இருக்கிறார். வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பார்த்து பதறுவது, பேய்க்கு பயந்து குளியல் அறையில் ஒளிந்து நடுங்குவது, மர்மத்தை கண்டுபிடிக்க அலைவது என்று தேர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். இனி அவருக்கு அதிக வாய்ப்புகள் வரலாம்.
வினோத் கிஷன் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். தேர்வு எழுதும்போது நேர்மையாக நடப்பது, கஷ்டத்திலும் தந்தை வாழ்ந்த வீட்டை விற்க மறுப்பது என்று யதார்த்தம் மீறாத நடிப்பை கொடுத்துள்ளார். முடிவு, பரிதாபம். மன நல மருத்துவராக வரும் குமார் நடராஜனின் வில்லத்தனம் அதிர வைக்கிறது. பூஜா, மிஷா ஆகிய இருவரும் வசீகரிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதையை உள்வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. போகப்போக பயம் திகிலுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் அறிமுக இயக்குனர் விக்னராஜன். பிரதீப்குமாரின் பின்னணி இசையும், எட்வின் சகாய் ஒளிப்பதிவும் திகிலுக்கு உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘அந்தகாரம்’ மிரட்டல்.
ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினியிடமும், விஜய்யிடமும் தான் எந்தவித பந்தாவையும் பார்த்ததில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதேபோல், ஷூட்டிங்குக்கு வந்து விட்டால் அந்த கதாபாத்திரத்தை தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை என தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான் என்பதை, தான் அப்போதுதான் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் ரஜினி, விஜய்யுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘பிகு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 18 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், இர்பான் கான் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘பிகு’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னணி இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தயாரிப்பாளர் தாணு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக கலைப்புலி தாணுவின் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கில் இருந்து டுவிட் செய்யப்பட்டது. அந்த டுவிட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள தாணு, அந்த டுவிட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

மற்றொரு டுவிட்டில், எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும் என பதிவிட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகா, தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

15 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பலனாக அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்த்ரா படத்தின் முன்னோட்டம்.
ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது.
“பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
உதய் சங்கர் ( ஸ்டார் & டிஸ்னி இந்தியா சேர்மன் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் முதன்மையான படமாக இருக்கும் என்று கூறினார்.
தர்மா புரடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது என்றும் செய்திகள் வெளியானது.
இதை அறிந்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் தியேட்டரில் வெளியாவதை படக்குழுவினர் உறுதி செய்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார்.
தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’தலைவா’ தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்ஸூ மரணம்’ என்ற பாடலின் பின்னணி ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் என் பெயர் ஆனந்தன் படத்தின் விமர்சனம்.
நாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல் நாளில் மர்மநபர்களால் கடத்தப்படுகிறார்.


இதனால் படப்பிடிப்பு நின்று போய்விடுகிறது. மனைவி அதுல்லா ரவியும் சந்தோஷ் பிரதாப் காணவில்லை என்று வருத்தப்படுகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சந்தோஷ் பிரதாப் மீண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிற்பாதியில் அவரை முழுவதும் கட்டி வைத்து விடுகிறார்கள். நடிப்பையும் கட்டி வைத்தது போல் இருந்தது.
நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, ஒரு காட்சியில் சிரித்துவிட்டு 2 காட்சியில் அழுதுவிட்டு செல்கிறார். அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆகியோர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

கூத்து, நாடக கலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சொல்லவந்ததை கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். நவீன உலகத்தால் கூத்து நாடகம் ஆகியவை அழிந்து விட்டதாகவும் அவர்களுக்குள்ளும் நல்ல கதைகள் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். சிறந்த கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூத்து பாடல் ரசிக்க வைக்கிறது. மனோ ராஜாவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் 'என் பெயர் ஆனந்தன்' தெளிவு இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






