என் மலர்
சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை டுவிட்டர் நிறுவனம் உதவியுடன் படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க டுவிட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம்.
இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். அதன்பிறகு கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு முடங்கியது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது. இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாக பேசப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

கமல்ஹாசன் இல்லாமல் படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். தேர்தல் பணிகள் முடிந்ததும் தனது காட்சிகளை ஒரேகட்டமாக நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வினை பிரபல நடிகர் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியின் இறுதி நாளில் இந்திய வீரர்களின் ஆட்டம் பிரம்மிப்பை ஏற்படுத்தியது. 4-வது இன்னிங்சில் இந்திய அணி 130 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து தோல்வியில் இருந்து தப்பியது. குறிப்பாக 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின்-ஹனுமா விஹாரி 256 பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவை தகர்த்தது.

இந்திய அணியின் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக அஸ்வின் - விஹாரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நடிகர் சித்தார்த் அஸ்வினை பாராட்டி பதிவிட்டுள்ளதாவது: “நீ ஒரு லெஜண்ட் அஸ்வின். என்ன ஒரு தரமான அணுகுமுறை. என்னை பொருத்தவரை நீ தான் ஆட்டநாயகன். லெஜண்ட் மச்சி நீ” என கூறியுள்ளார். இதைப்பார்த்த அஸ்வின் நன்றி மச்சி என பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகர் ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு பிரபல நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும். தற்போதைய சூழலில் நடிகர் ஆரி வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு நடிகரும், ஆரியின் நண்பருமான செளந்தரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எல்லாருக்கும் ஓட்டு போடுங்க, என் நண்பன் ஆரிக்கு அதிக ஓட்டுக்கள் போட்டு ஜெயிக்க வைத்து டைட்டில் வின்னர் ஆக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.
என் நண்பன் நடிகர் @Aariarujunan ஆரி அர்ஜுனாவிற்கு @vijaytelevision இன் #bigboss விளையாட்டு போட்டியில் நிறைய ஓட்டு போட்டு ஜெய்க்க வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏 #bigbosstamil4#BigBossTamil#BigBoss4#bigboss#AariArujunan#VijayTVpic.twitter.com/aLBHp03EMr
— Soundara Raja Actor (@soundar4uall) January 11, 2021
ரஜினி பட நடிகை ஒருவர் தனக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா, உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பலிகொண்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் ஊரடங்குகளை கடைபிடித்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு தற்போது நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளன.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷிரோட்கர் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார். இவர் 1990-களில் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடித்த ‘ஹம்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் இருக்கிறார். அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தனக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், அதற்காக துபாய் அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷில்பா ஷிரோட்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.
இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.
இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.
"அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.
தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.
தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''
இவ்வாறு லதா கூறினார்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.
இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.
இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''
இரண்டிலும் நான் இருப்பேன்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.
ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.
உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க
பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.
மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.
நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.
ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.
தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.
தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.
அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம், வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

"மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!" என்று ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சிலம்பரசன் படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் ஈஸ்வரன் படக்குழுவினர் தங்களுடைய முடிவை மாற்றி இருக்கிறார்கள்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படம் வருகிற ஜன.14ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே அதே தினத்தில், இந்தியாவுக்கு வெளியே இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

அவ்வாறு செய்தால் படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சியை ஈஸ்வரன் படக்குழு கைவிட்டது.
பரத்மோகன் இயக்கத்தில் பரத், சோனாக்ஷி சிங் ராவத், ஜனனி நடிப்பில் உருவாகி வரும் ‘யாக்கை திரி’ படத்தின் முன்னோட்டம்.
முக்கோண காதல் கதையுடன் உருவாகும் புதிய படம், ‘யாக்கை திரி’. இதில் ஹீரோவாக பரத் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சிங் ராவத், ஜனனி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சோனாக்ஷி சிங் ராவத், கொல்கத்தாவைச் சேர்ந்தவராக நடிக்கிறார். பிரதாப்போத்தன் அப்பா வேடத்தில் நடிக்கிறார்.

பகவதி பெருமாள், பாண்டியராஜன், சுதாசந்திரன், ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரத்மோகன் இயக்கும் இப்படத்தை, எஸ்.சபரீஷ்குமார் தயாரிக்கிறார். இசைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நாட்களுக்குப்பின், பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை பிந்து மாதவியின் புது தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவர், தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான ஒரு நடிகையாக முத்திரை பதித்துள்ளார். அடுத்து சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் இந்த தோற்றத்துக்கு வந்துள்ளார். அவரது இந்த புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள், எப்படி இருந்த பிந்து மாதவி... இப்படி ஆயிட்டாங்களே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இதில் விஜய் சேதுபதி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடிகர் ரஹ்மான், பிசியாக நடித்து வருகிறாராம்.
2021-ம் ஆண்டு, நடிகர் ரஹ்மானுக்கு உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளதாம். தற்போது ஐதராபாத்தில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்.
இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அஹமத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்த படமான 'ஜன கன மன', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் 'சமரா' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசியான ஆண்டாக அமைகிறது.