என் மலர்
சினிமா செய்திகள்
மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள மாறா படத்தை சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளனர்.
திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள ‘மாறா' படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு உலகம் முழுவதும் விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன.
மாறா படத்தில் அலெக்சாண்டர் பாபு, சிவாடா, பத்மாவதி, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். புரமோட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரதீக் சக்கரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மாறாபடத்தை 240 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் வீடியோ ஒளிபரப்பு செய்கிறது. மாறா படத்துக்காக சென்னை மற்றும் கோயம்புத்தூர் தெருக்களில் நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையை சேர்ந்த கலைஞர்கள் கிறிஸ் பிளேர் வின்சென்ட் மற்றும் லோட்டஸ் ஹெட் ஆகியோரால் இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

பேனர்களிலும் மாறா படத்தின் ஓவிய விளம்பரம் செய்து நகரத்தை அழகுபடுத்தி உள்ளனர். மாறா படத்தின் கதை சாரத்தை அந்த ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஓவியங்கள் சென்னையில் பெசன்ட் நகர், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வரையப்பட்டு உள்ளன. இந்த மாறா ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம்.
மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.
அந்தப் பள்ளியை விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நடிகர் விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற படத்தில் பார்த்த விஜய் போல் இல்லாமல் இதில் புதுவிதமாக தெரிகிறார். வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யின் நடனம் வேற லெவல்.
கடந்த சில ஆண்டுகளாகவே மது அருந்தும் காட்சிகளையும் புகைபிடிக்கும் காட்சிகளையும் தவிர்த்து வந்த விஜய் இந்த படத்தில் மதுவுக்கு அடிமையானவராக வருகிறார். ஆனால் சில காட்சிகளிலேயே அதன் ஆபத்துகளை உணர்த்துவதுடன் மதுவுக்கு அடிமையானவர்கள் மீண்டு வந்தால் சமூகத்துக்கு எப்படி பங்காற்ற முடியும் என்பதையும் விளக்கி இருப்பது அருமையான கருத்து.
விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம். அது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கி இருக்கிறார். படம் முழுக்க விஜய்யின் ராஜ்ஜியம் தான்.
நாயகி மாளவிகா மோகனன், அழகு, பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக அல்லாமல் விஜய்யின் மாற்றத்துக்கு காரணமானவராக வந்து நடிப்பிலும் அசத்துகிறார்.

பவானியாக வரும் விஜய் சேதுபதி. கொடூர வில்லனாக வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு இணையாக இவருக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிகம் பேசாமல் அவர் செய்யும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஜய்யுடன் மோதும் காட்சிகளில் தானும் ஒரு மாஸ் ஹீரோ என்பதை உணர்த்துகிறார்.
இவருக்கு பக்கபலமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் நடிப்பும் அற்புதம். இளம் வயது விஜய் சேதுபதியாக வரும் மாஸ்டர் மகேந்திரன், தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

மேலும் சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. படம் 3 மணி நேரம் ஓடினாலும் எந்த காட்சியிலுமே போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே வரும் ஒரு வரி காமெடி பன்ச் வசனங்கள் கைதட்டி ரசிக்க வைக்கின்றன. பூவையாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை திறம்பட கையாண்டுள்ளார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கான சில காட்சிகளை அமைத்திருந்தாலும், பெரும்பாலும் தனது ஸ்டைலில் தான் படத்தை நகர்த்தி இருக்கிறார் லோகேஷ்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், அதை காட்சிப்படுத்தியுள்ள விதம் பிரமாதம். அனிருத்தின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
அதேபோல் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு அட்டகாசம். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் மாஸாக எடுத்துள்ளனர். மெட்ரோ சீன் ஆகட்டும், விஜய், விஜய் சேதுபதி மோதும் காட்சி ஆகட்டும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளவிதம் சிறப்பு.
3 மணி நேர படம் எந்த இடத்திலும் சலிப்பே இல்லாமல் செல்ல பிலோமின் ராஜின் படத்தொகுப்பு முக்கிய காரணம்.ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். சரியாக எங்கே தொடங்கி எங்கே முடிக்க வேண்டும் என்று கச்சிதமாக வெட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘மாஸ்டர்’ மாஸ்.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
கமல், ரஜினி படங்களில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"கமலுடன் எனக்கு வாய்ப்பு வந்த முதல் படமே "வயநாடு தம்பான்'' என்ற மலையாளப்படம்தான். படத்தை வின்சென்ட் இயக்கினார். இந்தப்படம் மலையாளத்தில் பெரிய `ஹிட்' ஆனது.
இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த புதிய அனுபவம் மேக்கப் போடாமல் நடித்ததுதான். மலையாளப் படங்களில் பொதுவாகவே மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். கேரக்டர்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
தமிழ்ப் படங்களில் மேக்கப் போட்டே பழகிய எனக்கு, `மேக்கப் அவசியமில்லை' என்று டைரக்டர் வின்சென்ட் சொன்னதும் என்னவோ போலிருந்தது. அதன் பிறகு கேரக்டருடன் ஒன்றத் தொடங்கிய பிறகு சரியாகி விட்டது. படத்தைப் பார்த்தபோது, பிரமிப்பாக இருந்தது.
இந்த அனுபவம், இதற்கு முன்பே மலையாள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் எம்.ஜி.ஆரை இயக்கிய "நாளை நமதே'' படத்திலும் எனக்கு ஏற்பட்டது. மேக்கப் போட்டாலே அவருக்கு ஆகாதே. "எதற்காக இப்படி மேக்கப் போடவேண்டும்'' என்று கேட்பார். அதுவரை மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவரது கேள்வி அந்த நேரத்தில் எரிச்சலாகக் கூட இருந்தது.
கமலுடன் தமிழில் நான் நடித்த "நíயா'' படம் ரொம்பவே முக்கியமானது. இதில் கமலுடன் சேர்ந்து 5 ஹீரோக்கள்! டைரக்டர் துரை சொன்ன கதையில் என் கேரக்டருக்கு இருந்த முக்கியத்துவம் கருதியும், கமல் ஜோடி என்பதற்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படமும் பெரிய `ஹிட்.'
நான் ரஜினியுடன் நடித்த முதல் படம் "சங்கர் சலீம் சைமன்.'' இந்தப்படத்தில் நடிப்பது தொடர்பாக டைரக்டர் பி.மாதவன் என்னை சந்தித்தபோது, "ரஜினின்னு ஒருத்தர் புதுசா வந்திருக்கார். நல்லாவே பண்றார். இந்தப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். அவருக்குத்தான் நீங்க ஜோடியா நடிக்கறீங்க'' என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்.
முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. ரஜினி ஸ்கூட்டரில் என்னை ஏற்றிக்கொண்டு போவதாக காட்சி. இந்தக் காட்சி பற்றி டைரக்டர் பி.மாதவன் ரஜினியிடம் விவரித்துச் சொன்னபோது, "லதா மேடம் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! அவங்களை என் ஸ்கூட்டரில் ஏத்திட்டு போறதுன்னா எப்படி?'' என்று தயங்கியிருக்கிறார்.
இதனால் டைரக்டர் பி.மாதவன் என்னை அழைத்து, "ரஜினி ரொம்ப டென்ஷனாகிறார். `எம்.ஜி.ஆர். சார் கூட நடித்த பெரிய ஆர்ட்டிஸ்ட் நீங்க என்கிற மரியாதை இப்படி அவரை டென்ஷனாக்குகிறது' என்று நினைக்கிறேன்'' என்றார்.
உடனே நான், "சரி சார்! நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொல்லி விட்டு அப்போதே மேக்கப் ரூமில் இருந்த ரஜினியை சந்தித்தேன். "ஹலோ ரஜினி! எப்படி இருக்கிறீங்க?'' என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தேன். நான் சகஜமாக பேசியது அவருக்குள் இருந்த படபடப்பை குறைத்திருக்க வேண்டும். அடுத்து, ஸ்கூட்டர் காட்சியில் இயல்பாக நடித்தார்.
ரஜினியுடன் அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்போது பார்த்தாலும் அதே நட்பு பாராட்டும் ஒரு நல்ல நடிகர் அவர்.
ரஜினிக்கு திருமணமாகியிருந்த நேரம். ஒருநாள் மைலாப்பூரில் உள்ள `நீல்கிரிஸ்' கடைக்கு போனேன். அப்போது "லதா மேடம்! லதா மேடம்!'' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அருகில் வந்ததும்தான் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது.
நான் அவரிடம் "எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டேன். அவரோ மூச்சு விடாமல், "என் கணவர் (ரஜினி) உங்களைப்பற்றி ரொம்ப நல்லவிதமாக சொல்வார். உங்கள் மேல் அவருக்கு ரொம்ப மரியாதை'' என்றார். மகிழ்ந்து போனேன். அதுமுதல் லதா ரஜினிகாந்தும் எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதி ஆகிவிட்டார்.
இதன் பிறகு ரஜினி வீட்டில் நடக்கும் எந்தவொரு விசேஷத்திற்கும் எனக்கு அழைப்பு வந்து விடும். மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள். லேட்டஸ்ட்டாக ரஜினி நடித்த `சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சிக்கு கூட அழைப்பு வந்தது. நட்பை போற்றுவதில் ரஜினி தம்பதிகள் ரொம்பவே கிரேட்!
ரஜினியும் நானும் சேர்ந்து நடித்த படங்களில் மறக்க முடியாத ஒரு படம் "ஆயிரம் ஜென்மங்கள்.'' அதில் என் கேரக்டரின் தன்மை இரண்டு விதமாக இருக்கும். ஒன்று: இயல்பான கேரக்டர். அடுத்தது: `ஆவி' புகுந்த கேரக்டர்.
படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ என்றாலும், எனக்கும் ரஜினிக்கும் எங்கள் நடிப்புக்கு சவால் வருகிற மாதிரியான கேரக்டர்கள். பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடந்தது. ஒரு காட்சியில் நடித்து விட்டு வந்ததும் "லதாஜி! சரியா பண்ணினேனா?'' என்று ஆர்வத்துடன் கேட்பார் ரஜினி. இத்தனைக்கும் அப்போது அவர் `சூப்பர் ஸ்டாராய்' வளர்ந்து விட்ட நேரம்.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ரஜினியுடன் நடித்தபோது, "லதாஜி! இந்த கேரக்டர் உங்களை பெரிய அளவில் பேச வைக்கும்'' என்றார். அவர் சொன்னபடிதான் ஆயிற்று. படத்தில் எனது கேரக்டரும் பேசப்பட்டது. அதோடு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டும் எனது நடிப்புக்காக கிடைத்தது. ரஜினியுடன் "முள்ளும் மலரும்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இது இன்றளவும் எனக்கு வருத்தமே.''
இவ்வாறு லதா கூறினார்.

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பிக்பாஸ் ஆரிக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் - 4ல் யார் வெற்றியாளர் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்த ரேஸில் வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் தக்கவைத்திருப்பவர் நடிகர் ஆரி. முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு உருவாகியுள்ளது.

இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.
தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை நாளை மாலை வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை நாளை மாலை 7.10 மணிக்கு வெளியிட இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் நாளை வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தீவிரத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிக காட்சிகள் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு கிடைத்துள்ளது. 'மாஸ்டர்' படத்திற்கான எதிர்பார்ப்பு மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் ரவிவர்மா கூறும்போது, கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை நீடித்து ஒரு குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்த பிரச்சினை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் என் தலைமையிலான சங்கம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம்.டி.மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராக இருந்த மனோபாலா ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பி.வி.ஆர். சுப்பிரமணியம் என்கிற ஜெயந்த், கே.ரிஷி, விஜய் ஆனந்த், ஈஸ்வர், சிவ கவிதா, நீபா, ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இனி சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமாக தொடங்கி நடைபெறும். சங்கத்திற்குப் புதிய இடம் வாங்கி கட்டடம் கட்டித் திறப்பு விழா செய்யும் திட்டத்தோடு பணிகளைத் தொடங்குகிறோம். அன்று அந்தச் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அவர்களுக்கும் காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிக்கப்பட்டு விட்ட பின்னும் மனோபாலா தரப்பு குரல் எழுப்பிக் கொண்டிருந்தது.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அனைவரும் விரும்பினோம். மீண்டும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் கூடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பதினொரு வாக்குகள் வித்தியாசத்தில் ரவிவர்மாவாகிய நான் வெற்றிபெற்றேன். எனவே இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து விட்டது." இவ்வாறு ரவிவர்மா கூறினார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் நடிகர் சசிகுமார் கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய சசிகுமார், இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம். பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.
கொரோனா பலரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் சினிமா என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம். ஓடிடி என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல.

வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல சினிமாவை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘க/பெ.ரணசிங்கம் பட இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி சேஸ் படத்தின் முன்னோட்டம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் அடுத்ததாக நடிக்கும் திகில் படத்துக்கு ‘தி சேஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்து தி சேஸ் படத்தை உருவாக்கி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு தாய், மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை சுற்றி ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளனர். ஊரடங்கில் படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து எடுக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்டை அப்படத்தின் நடன இயக்குனர் ஜானி வெளியிட்டுள்ளார்.
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடன இயக்குனர் ஜானி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.
ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பைக் ரேஸராக நடிக்க உள்ளாராம்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்வதை தவிர்த்து, இந்தியாவிலேயே அந்தக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில், வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் பைக் ரேஸராக அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்களில், பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும். இந்நிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் செல்லவில்லை.
இதையடுத்து ரசிகர் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தியிடம், ஏன் நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
I am the only contestant not invited so far
— Suresh Chakravarthy (@susrisu) January 11, 2021