என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் படத்தின் முக்கியக் காட்சிகள் சில இணையத்தில் கசிந்தன.

    இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு இது, யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

    விஜய்

    இதனிடையே, இந்தக் காட்சிகள் எங்கிருந்து எப்படி வெளியாகின என்ற விசாரணையைத் தொடங்கியது படக்குழு. இதில் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் மூலம் காட்சிகள் லீக்காகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க படக்குழு தீவிர ஆலோசனை நடத்தியது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக ‘மாஸ்டர்’ படக் காட்சிகளை பதிவேற்றியதற்காக ரூ.25 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார். இந்த சீசனில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.

    சிவானி

    நடிகை சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி உள்ளார். சிவானியின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். 

    டாப் ஹீரோ என்ற இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

    விஜய் சேதுபதி

    இவ்வாறு தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.

    சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.

    யோகிபாபு

    ரஜினி முருகன் பட இயக்குனர் பொன்ராமும் இதில் ஒரு பகுதியை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் விலகியதால் அவருக்கு பதிலாக தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் இயக்கும் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தைப்பூசத்தன்று ரிலீசாக உள்ளது.
    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். 

    மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். 

    அருள்நிதி, ஜீவா

    கொரோனா பிரச்சனையால் ரிலீசாகாமல் முடங்கியிருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தைப்பூசத்தன்று (ஜனவரி 28) தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 
    வெட்டி பசங்க படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.ராஜன், நடிகைகள் நயன்தாராவும், ஆண்ட்ரியாவும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதாக கூறியுள்ளார்.
    மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வெட்டி பசங்க’. இந்தப் படத்தை பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், சக்கரவர்த்தி, வாராகி, கே.ராஜன் இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசியதாவது: “கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள். நடிகை நயன்தாரா தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார். 

    அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி உள்ளது. அவரது மேக்கப் மேன் உதவியாளர்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1½ லட்சம் செலவிட வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது. 

    கே.ராஜன்

    தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார். நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப்பட்டால்தான் சினிமா வாழும். வெட்டி பசங்க படம் வெற்றி பெறும.'' இவ்வாறு அவர் கூறினார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

    எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார்.

    எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன்.

    ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார்.

    ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

    எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?'' என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார்.

    உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

    இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன்.

    எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில்

    இருக்கிறான்.தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

    இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், "தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்'' என்பதுதான்.

    நான் அவரிடம், "நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா' என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்'' என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

    இவ்வாறு கூறினார், லதா.

    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில்

    ஈடுபட்டார்.1998-ல் நடந்த "எம்.பி'' தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

    திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

    "திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க' சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த

    30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். "தலைவர்

    (எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு'' என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். "உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா'' என்றார்கள்.

    வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

    சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள "குழாயில் தணணீர் வரவில்லை'' உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், "மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க'', "இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்'' என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

    இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் "ஹாய்! ஹலோ'' சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

    இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

    மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.''
    முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
    முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக மீம்ஸ்கள் அதிக அளவில் சமூகவலைத்தளத்தில் வருகின்றன. இதற்கு காரணம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க பாடகரை திருமணம் செய்துக்கொண்டாது தான்.

    நிக் ஜோன்ஸ் உடனான திருமண உறவு மற்றும் கலாச்சார இடைவெளி வெளிப்படையாகவே பேசி வருகிறார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி அளித்தபோது இந்த வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா கூறியதாவது, ‘எனக்கும், நிக்கிற்கு இடையேயான உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. வயது ஒரு பிரச்சனையே இல்லை, இந்திய கலாச்சாரத்தை நிக், புரிந்துக்கொண்டுள்ளார். எங்கள் உறவு சாதாரண ஜோடிகளை போல ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதுவும் ஒன்றல்ல, ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பெற்றுக்கொள்ள ஆசை’ இவ்வாறு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு பிரபல நடிகை ஒருவர் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். நேற்று முன் தினம் விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள். இதை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    விஜய் சேதுபதி - குஷ்பு

    இந்நிலையில் நடிகை குஷ்பு விஜய் சேதுபதியை சந்தித்தது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ‘விஜய் சேதுபதி மதிய உணவை எங்களுடன் சேர்ந்து சாப்பிட இங்கே வந்திருந்தார். சாதாரண நாளை மிக சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி’ என்று கூறி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
    கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.

    பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2019ம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.

    கீர்த்தி சுரேஷ்

    கவர்ச்சி அல்லாமல் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
    மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

    சிம்பு

    சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான், 'பத்து தல' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தான் இப்படத்திற்கு இசையமைப்பதாக உறுதி செய்திருக்கிறார்.
    சிறிய படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் பட விழாவில் கூறியிருக்கிறார்.
    வித்யூத் விஜய், கவுஷிகா நடிப்பில் உருவான ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் கலந்துக் கொண்டார்.

    அதன்பின் பேசும்போது, இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். விருதுகள் பெற்று, சிறந்த விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே என் படம் சென்றடையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயல்வடிவில் செய்தால் தான் அப்படம் வெற்றியடையும். இயக்குனர் மஸ்தான் என்னுடைய குடும்ப நண்பர்.’. இவ்வாறு அவர் கூறினார். 

    போஸ் வெங்கட்

    இயக்குனர் போஸ் வெங்கட் சமீபத்தில் கன்னி மாடம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் டொரோண்டோ தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×