என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கே.ஜி.எஃப் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த நடிகர் யாஷ், தன் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கே.ஜி.எஃப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 உருவாகி வருகிறது. நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் பல பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

    யாஷ்

    இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகனான யாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை படக்குழுவினர் படப்பிடிப்புக்கு செல்லாமல் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி பார்க்கும் ஆர்வத்தில் படப்பிடிப்புக்கான ஷாட் ரெடி ஆகியும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்றை நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    அதில், இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசி நேர ஆட்டத்தை சதீஷ், அசோக் செல்வன், நடிகை பிரியா பவானிசங்கர் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து ’ஷாட் ரெடி’ என்று கூற ’நாங்களும் ஒரே ஒரு ஷாட்டுக்கு தான் வெயிட்டிங், கொஞ்சம் பொறுங்கள்’ என்று கூறி மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், புதிய சேவையை ஆரம்பித்து வைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

    வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார்.

    தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் தொடங்கியுள்ளார். சோனுசூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற ஒரு ஆம்புலன்ஸ் சேவையை அவர் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சோனு சூட்

    இந்த ஆம்புலன்ஸ் சேவை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இருமாநில மக்களுக்கும் மிகப்பெரிய வகையில் உதவும் என்றும் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. 

    பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். தான் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். 

    பூனம் பாஜ்வா

    தற்போது பூனம் பஜ்வா கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவற்றுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து லைக்குகளை குவித்து வருகிறது.
    கோமாளி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை தனது தாயை தூக்கி வைத்து கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
    ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் நடித்திருந்தார்.

    சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பகிர்ந்து வருவார்.

    சம்யுக்தா ஹெக்டே

    இந்நிலையில் தற்போது தன் தாயை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கொஞ்சிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
    கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது சினிமா தான் என்று இயக்குனர் ஆர்வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.
    ரேகா புரடக்‌ஷன்ஸ் சார்பில் சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வெட்டி பசங்க. மஸ்தான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வித்யூத் விஜய், கவுஷிகா நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, ’கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். 

    எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். 

    இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’. இவ்வாறு அவர் பேசினார்.

    இயக்குனர் சிவாவின் தம்பியும், தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, வீரம் படங்களில் நடித்த நடிகருமான பாலாவுக்கு, மனிதாபிமான செயல்பாடுகளுக்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
    தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

    இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.

    பாலா

    ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

    தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. திரு.பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார். மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார்.
    இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ’அயலான்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று நாயகி ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    சிவகார்த்திகேயன்

    இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் குறிப்பாக நீங்கள் என்னை படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு மிகவும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கின்றேன்’ என்றும் அவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.
    இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் ஸ்ரேயா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமனம் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக ‘கமனம்’ படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

    இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

    ரைசா வில்சன்

    தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் போன்ற படங்களை நடிகை ரைசா, கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில், நடிகர் ஆரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அபின் இயக்கும் அந்தப் படத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

    அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    படக்குழுவினருடன் ஆரி

    இதுதவிர ராஜ மித்ரன் இயக்கியுள்ள அலேகா, களிங்கன் இயக்கியுள்ள பகவான் போன்ற படங்களில் ஆரி நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.
    ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாம்.
    அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    அஜித்

    தற்போது புனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதையடுத்து முக்கிய சண்டைக் காட்சியை படமாக்க வலிமை படக்குழு அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் வலிமை படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ×