என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.
    நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நகைச்சுவை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். கடவுள் நமக்கு கொடுத்து இருக்கிற சிறப்பு போனஸ் தான் சிரிப்பு. அது போல யாருமே வாய்விட்டு சிரிக்க மாட்டேங்கிறாங்க. அவர்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் எல்லோரும் சினிமாவில் இரவு பகலாக யோசித்து எப்படி எழுதலாம் எப்படி சிரிக்க வைக்கலாம் எந்த காட்சியை காட்டினால் சிரிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறோம்.

    கலைத்துறை என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு ஆயுதமாகும். சினிமாவில் நடிக்கிற நடிகைகள் பொதுமக்கள் வெறுப்பு வராத அளவுக்கு ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும். அப்போது தான் நமது தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றதாகும். 

    கொரோனாவுக்கு பயந்து மக்கள் சினிமா தியேட்டருக்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு சென்று சினிமா தொழிலை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு நடிகர் சிங்கமுத்து கூறினார்.
    அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‘எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
    சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். 

    அலெக்ஸ், சனம் ஷெட்டி

    அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது இவர் நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப் தொடர் வருகிற ஜனவரி 22-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

    குருதிக்களம் பட போஸ்டர்

    மேலும் அசோக், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜபாண்டி மற்றும் தனுஷ் இணைந்து இயக்கி உள்ளனர். கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த வெப் தொடர் உருவாகி இருக்கிறது. இன்று வெளியான ‘குருதிக்களம்’ வெப் தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
    சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இளம் நடிகை, அடுத்ததாக ‘சூர்யா 40’ படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பிரியங்கா மோகன்

    இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. நடிகை பிரியங்கா ‘சூர்யா 40’ படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
    நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    நஸ்ரியா

    இந்நிலையில், நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை உறுதி செய்த நஸ்ரியா, “சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள். அதனால் சில நாட்கள் என் அக்கவுண்டில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார். 
    தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வரும் லோகேஷ் கனகராஜுக்கு பாலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ளதாம்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன.

    அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். 

    மாநகரம், கைதி, மாஸ்டர் பட போஸ்டர்கள்

    லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டர் பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவரான சிபிராஜ், முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்க உள்ளார்.
    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தீரன் சின்னமலை. அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க உள்ளனர். இயக்குனர் ஸ்ரீராம் இயக்கும் இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க நடிகர் சிபிராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். சினிமா நடிகரான சிபிராஜ், மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். 

    இதுகுறித்து சிபிராஜ் கூறியதாவது: “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதுவும் மேடை நாடகத்தில் நடிப்பது என்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.

    சிபிராஜ்

    சினிமாவில் நடிக்கும்போது ஏதாவது தவறு செய்தால் மறுபடியும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது டப்பிங்கில் சரிசெய்துவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் அப்படி செய்ய முடியாது. எனவே இது எனது வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

    எம்.ஜி.ஆர், சிவாஜி, எனது தந்தை சத்யராஜ் உள்பட பெரிய நடிகர்கள் பலர் மேடை நாடகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் நடிகர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது முற்றிலும் குறைந்து விட்டது. இதை உணர்ந்துதான் நான் மேடை நாடகத்தில் நடிக்க சம்மதித்தேன்” என சிபிராஜ் தெரிவித்துள்ளார்.
    ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்புவின் ஆட்டத்தைக் காண ஆவலோடு இருப்பதாக ஆரி தெரிவித்துள்ளார்.
    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் டீஜே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    பத்து தல பட போஸ்டர்

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரி, சிம்புவின் ஆட்டத்தை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார். பத்து தல படத்தின் இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணா, முன்னதாக இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் ஆரி ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அருண் விஜய்

    அதேபோல் அஜித்தின் என்னை அறிந்தால், பிரபாஸின் சாஹோ போன்ற படங்களில் வில்லனாக நடித்த அருண் விஜய், அடுத்ததாக தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதனை அருண் விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இது வெறும் வதந்தி எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
    ஓராண்டு காத்திருந்து படத்தை திரையரங்குகளில் வெளியிடும் சல்மான் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை கடந்தாண்டு ஈகைத் திருநாளன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனிடையே படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டு என கோரிக்கை வைத்தனர்.

    பரத், சல்மான் கான்

    இந்நிலையில், ராதே படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என சல்மான் கான் அறிவித்துள்ளார். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இப்படம் இந்தாண்டு ஈகைத் திருநாள் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு காத்திருந்து படத்தை திரையரங்குகளில் வெளியிடும் சல்மான் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், இயக்குனர் சிவா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடிக்கிறது. கடந்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

    எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளனர். ரஜினி ஏப்ரல் மாதம் வரை ஓய்வெடுக்க உள்ளதால் அதுவரை படப்பிடிப்பை நடத்த வாய்ப்பில்லை. இதனால் இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் செய்து முடித்துள்ளார் சிவா.

    சிவா, சூர்யா, ஞானவேல்ராஜா

    இனி அண்ணாத்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் தொடங்கப்படும் என்பதால், இயக்குனர் சிவா, சும்மா இருக்க வேண்டாமே என்று தான் அடுத்ததாக இயக்கும் சூர்யா நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளாராம். அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம் சிவா. சூர்யா - சிவா இணையும் படத்தை கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா, இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என கூறி உள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு: ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். 

    நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும். இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ள மாட்டேன். 

    சமந்தா

    புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற உணர்வும், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற வெறியும்தான் அந்த பயத்துக்கு காரணம். 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.'' இவ்வாறு சமந்தா கூறினார்.
    ×