என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதனிடையே பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அப்படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அதர்வா ஏற்கனவே பாலா இயக்கிய பரதேசி படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தா மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.
இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சாந்தா, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா டுவிட்டரில், “கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி. மனம் உருகும் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சந்தானம், தான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் சந்தானத்திற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சந்தானம் தான் நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘சபாபதி’ என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சபாபதி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் திரைக்கு வரும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக நடிகை நதியா தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நதியா, “80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பை பிகில் படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அப்படத்தில் இடம்பெறும் வெறித்தனம் பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியும் அசத்தி இருப்பார் பூவையார்.
இதையடுத்து விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் மாஸ்டர் படத்திலும், பூவையார் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடனே பயணிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்திலும் பூவையார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய்யுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பூவையார் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகரும், இயக்குனருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2, தர்னா ஸ்ருதி யெ போன்ற இந்தி படங்களை இயக்கியவரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 2005-ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள்.

இந்தி திரையுலக மாபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தனர்.
நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல, ஹேம்நாதின் 10 ஆண்டுகால நண்பர் என்று கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவரும், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கைதானவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் சையது ரோஹித்துக்கு அடிப்படை உரிமை இல்லை. அதனால் அவரது மனுவை ஏற்க முடியாது” என்று கூறி மனுவை நிராகரித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, “சித்ரா தூக்குப்போட்டு மூச்சு திணறலால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பட்டுப்புடவையில் தூக்குப்போட்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை. மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஹேம்நாத் திட்டியதால், அவர் தற்கொலை செய்ததாக நசரத்பேட்டை போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து, அதற்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சித்ராவின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘சித்ராவின் கழுத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடம் எதுவும் பதியவில்லை. அவரது உடலில் 2 இடங்களில் ரத்தக்காயம் உள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, “சித்ரா தூக்குப்போட்டு மூச்சு திணறலால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பட்டுப்புடவையில் தூக்குப்போட்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை. மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஹேம்நாத் திட்டியதால், அவர் தற்கொலை செய்ததாக நசரத்பேட்டை போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து, அதற்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்
பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.
சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.
அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.
படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.
ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.
கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.
"பி.எஸ்.சி'' பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.
அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், "மாதிரி சட்டசபை'', "மாதிரி பாராளுமன்றம்'' ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.
சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.
மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். "இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?'' என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.
அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.
ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, "இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு'' என்று கூறினார்.
அதற்கு அதிகாரி அனுமதியளித்தார்.
உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.
சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் "சினிமா விசிறி.'' எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.
இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.
நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.
(இந்த நாடகம்தான் பிற்காலத்தில் "எதிர்நீச்சல்'' என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)
"சினிமா விசிறி'' நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.
"சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்'' என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் "உயிருள்ளளவும்'' என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!
வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.
வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக "ராகினி ரிக்ரியேஷன்ஸ்'' என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.
அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. "புஷ்பா'', "லதா'' என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!
பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் "மேஜர் சந்திரகாந்த்.''
இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!
நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார்.
இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.
ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் மோஷன் கேப்சர் முறையில் உருவாக இருக்கிறது.
ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் கோச்சடையான். இப்படம் மோஷன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது மற்றொரு பிரமாண்ட படம் மோஷன் கேப்சர் முறையில் படமாகிறது. இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஆதி புருஷ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ராமாயணத்தை மையமாக வைத்து புராணக் கதை வடிவில் உருவாகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மோஷன் கேப்சர் முறையில் தொடங்குவதற்கான பணிகள் ஸ்டுயோவில் தொடங்கி இருப்பதாக பிரபாஸ் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் பிரபாஸ் குறைந்த நாட்கள் மட்டுமே நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி மோஷன் கேப்சர் முறையில் உருவாகிறது. பிப்ரவரி 2ம் தேதி இதன் உத்தேச படப் பூஜை நடக்க உள்ளது.
ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தை பிரசாந்த் பூஷண், பிரசாட் சுதர், ராஜேஷ் நாயர், ஓம் ரவுத் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ‘விசித்திரன்’ என்ற அதே டைட்டிலை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் விசித்திரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார்.
கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்.
கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணமடைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தற்போது லேடீஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.
கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான 'பானு ஸ்ரீ ரெட்டி' இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.