என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று "மெழுகுவர்த்தி.'' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

    அவர் பேசும்போது, "பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்'' என்றார்.

    அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க "தெய்வத்தாய்'' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

    அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

    அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

    ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

    இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

    அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார், பாலசந்தர்.

    "தெய்வத்தாய்'' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

    படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

    "தெய்வத்தாய்'' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

    நாடகமாக பெரிய வெற்றி பெற்ற "சர்வர் சுந்தர''த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    படம் பெரிய வெற்றி பெற்றது.

    அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த "பூஜைக்கு வந்த மலர்'' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த "நீலவானம்'' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.

    இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன்.

    "நீலவானம்'' சிறந்த படமாக அமைந்தது.

    இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது.
    தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.

    பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

    அப்பாஸ்

    சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
    மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

    சுஷாந்த் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனா அவரது புகைப்படங்களையும் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    அன்புள்ள சுஷாந்த், திரைப்பட மாஃபியா உன்னை தடை செய்தது, துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டிருக்கிறாய். அப்போது உன்னுடன் நான் உறுதுணையாக நிற்கவில்லையே என்று வருந்துகிறேன். சமூக வலைதள சித்ரவதைகளை நீயாகவே சமாளித்து விடுவாய் என்று நான் நினைத்திருக்க கூடாது என்று விரும்புகிறேன்.

    கங்கனா ரனாவத்

    சுஷாந்த் இறப்பதற்கு முன்னால், திரைப்பட மாஃபியா கும்பல் தன்னை சினிமாவிலிருந்து தூக்கியெறிய முயற்சி செய்தது என்றும் தன்னுடைய படத்தை வெற்றிபெறச் செய்யுமாறு தன் நண்பர்களிடம் உதவி கேட்டது குறித்தும் சுஷாந்த் எழுதியதை மறந்து விட வேண்டாம். அவர் தன்னுடைய பேட்டிகளில் வாரிசு அரசியலை பற்றி குற்றம்சாட்டியிருந்தார். அவருடைய ப்ளாக்பஸ்டர் படங்கள் எல்லாம் தோல்விப்படங்களாக அறிவிக்கப்பட்டன.

    யாஷ் ராஜ் பிலிம்ஸ் தன்னை தடை செய்தது பற்றியும், கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றி பின்பு ஒட்டு மொத்த உலகத்திடம் சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என்று அழுதது பற்றியும் சுஷாந்த் கூறியதை மறந்துவிட வேண்டாம்.

    இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் சுஷாந்த்தை கொன்றுள்ளனர். அதை தான் இறப்பதற்கு முன்னால் அவரே தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறக்கவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

    இவ்வாறு கங்கனா தன் பதிவில் கூறியுள்ளார்.
    தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்து பிரபலமான அதிதி ராவ் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதிராவ். செக்க சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “சினிமா முழுவதும் நானே இருக்க வேண்டும் என்று ஆசை இல்லை. திரையில் சில நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் தியேட்டரை விட்டு வீட்டுக்கு சென்ற பிறகும் அவர்கள் மனதை நெருடிக்கொண்டே இருக்க வேண்டும். நினைவிலும் நிற்க வேண்டும். சவாலான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். 

    அதிதி ராவ்

    இந்த விஷயத்தில் ஹாலிவுட் நடிகைகள்தான் எனக்கு முன் உதாரணம். அவர்கள் எண்ணங்கள் அப்படித்தான் இருக்கும். தங்களுடைய வேலையை அவர்கள் செய்து கொண்டு போவார்களே தவிர மற்றவர்கள் விவாதங்கள், விமர்சனங்களை கண்டு கொள்ளமாட்டார்கள். நானும் அப்படித்தான். என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் அதற்காக வருத்தப்படவோ அதை மனதில் வைத்துக்கொள்ளவோ அதையே நினைத்து கவலைப்படவோ மாட்டேன்.'' இவ்வாறு அதிதிராவ் கூறினார்.
    தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
    நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். 

    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

    ஶ்ரீதேவி மகள்

    இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
    'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'கே.ஜி.எஃப் 2' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் பிரபாஸை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

    இந்தப் படத்தையும் 'ஜே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜை முடிவுற்று, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    பிரபாஸ்

    இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிக்க இல்லை என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்காக படத்தின் கதையை படக்குழுவினர் மாற்றயிருக்கிறார்கள்.
    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. 

    இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். மோகன் ராஜா இயக்கவுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடித்த மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

    நயன்தாரா

    மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'தனி ஒருவன்' மற்றும் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். நாயகி கதாபாத்திரத்தைப் படம் முழுக்க வருவது போன்று மாற்றியமைத்து நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் வருமாறு கதையை மாற்றியுள்ளனர்.
    தமிழில் நேர்கொண்ட பார்வை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13 படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கலியுகத்தை ஆரம்பித்திருக்கிறார்.
    அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் இவரது நடிப்பில் மாறா படம் வெளியானது. தமிழில், இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13 என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தில் நடித்துள்ளார். 

    இந்த நிலையில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார்.

    ஷ்ரத்தா ஶ்ரீநாத்

    ஹாரர் திரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது. 
    90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடுத்துள்ளார்.
    சமூக வலைதளங்களின் மூலமாக புதிய புதிய சவால்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். 

    மீனா

    விஜய், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் என தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் இந்த சவாலில் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த சவாலில் பங்கெடுத்து மரம் நட்டு படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், மஞ்சு வாரியர் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இந்த சவாலை ஏற்கும் படி கூறி இருக்கிறார்.
    அஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட் வேண்டி முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

     இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படி அஜித் தரப்பில் அறிவிப்பு வந்தது. 

    அஜித் ரசிகர்கள்

     தற்போது தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். 

    மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

    அருள்நிதி, ஜீவா

    நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, சகுந்தலம் படத்தில் படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
    சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.  

    இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். 

    சமந்தா, தேவ் மோகன்

    சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    ×