என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.

    கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.
    சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தைப் பற்றிய ஒரு அலசல்.
    குடும்பம் என்கிற அமைப்பின் சர்வாதிகாரத்தையும், அது எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. 

    பொங்கலுக்கு தென்னிந்தியாவில் மாஸ்டர் படம் பற்றிய பேச்சுகளே அதிகம் இருந்த வேளையில், சைலன்டாக வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
     
    மலையாளப் படமான இது கடந்த 15ந் தேதி ஓடிடி-யில் வெளியானது. ஜோ பேபி என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக சூரஜ் வெஞ்சரமுடு, நாயகியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். சுமார் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த சினிமா இந்திய பெண்களின் நூறாண்டுகால வலியை பேசுகிறது. 

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    நாயகன் சூரஜ், கேரளாவில் ஒரு அழகான கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கும், நடன ஆசிரியராக இருக்கும் நாயகி நிமிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டுக்கு செல்லும் நிமிஷா, காலை, மதியம், இரவு என மூன்று வேளை சமைப்பதும், பின்னர் பாத்திரங்களை கழுவுவதும், இரவில் கணவருடன் தாம்பத்யம் கொள்வதுமாக அவரது வாழ்க்கை தினசரி நகர்கிறது. ஒரு கட்டத்தில் இயந்திரம் போல் நகரும் அந்த வாழ்க்கை மீது அவருக்கு சலிப்பு ஏற்படவே, அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது தான் மீதிக்கதை. 

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை எந்த அதீத காட்சிகளுமின்றி யதார்த்தமாக அதன் போக்கில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜோ பேபி. சமைப்பதை விட சமையலுக்கு பின் இருக்கும் வேலைகள் தான் கஷ்டமானது என நிறைய இடங்களில் உறக்க சொல்லி இருக்கிறார். பெண்களுக்கு நாம கொடுக்க வேண்டிய மரியாதை வேற, நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை வேற என்பதையும் ஆணி அடிச்ச மாதிரி சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜோ பேபி.

    கணவன், மனைவியாக நடித்துள்ள சூரஜ், நிமிஷா ஆகியோரின் நடிப்பு எதார்த்தத்தின் உச்சம். நிமிஷாவின் மாமனார் கதாபாத்திரத்தில் வரும் சுரேஷ் பாபு, ஆணாதிக்கம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். 

    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    குறிப்பாக, ‘வெளியே செல்லும் போது செருப்பை எடுத்துக் கொடுக்க மனைவி வர வேண்டும். விறகடுப்பில் தான் சோறு சமைக்க வேண்டும், குக்கர்ல வச்சா பிடிக்காது. வாஷிங் மெசின்ல துணி துவச்சா கெட்டுப் போயிடும். மருமகள் வேலைக்கு போகட்டுமா என கேட்கும்போது, பி.ஹெச்.டி படிச்ச என் மனைவியையே வேலைக்கு அனுப்பல’ என காட்சிக்கு காட்சி அசல் ஆணாதிக்க முகமாக தெரிகிறார் சுரேஷ் பாபு. 

    படத்தின் நீளமே 100 நிமிடம் தான், அதில் 60 நிமிடம் சமையல் அறையை தான் காட்டுகிறார்கள். சாலு கே தாமஸின் ஒளிப்பதிவும், பிரான்சிஸ் லூயிஸின் படத்தொகுப்பும் ஒவ்வொரு காட்சியையும் சலிப்பு ஏற்படாதவாறு கச்சிதமாக கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

    இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும், நாமும் இப்படி தான் இருக்கோம்ல என ஏதோ ஒரு இடத்தில் தோன்றும். அதுவே இந்தப் படத்தின் வெற்றி. கட்டாயம் அனைத்து ஆண்களும் பார்க்க வேண்டிய படம். இது படம் மட்டுமல்ல, ஆண்களுக்கான பாடம் என்றே சொல்லலாம்.
    எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எண்ணித் துணிக’ படத்தின் முன்னோட்டம்.
    ஜெய் நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரயிருக்கும் படத்துக்கு ‘எண்ணித் துணிக’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது ஒரு திகில் படம். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    படத்தைப் பற்றி இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் கூறியதாவது: “எண்ணி துணிக படத்தின் வில்லன் கதாபாத்திரம், சர்வதேச கடத்தல்காரன். இந்த வில்லன் வேடத்துக்காக பல நடிகர்களை தேர்வு செய்து பார்த்தோம். மிக ஸ்டைலாகவும், கலக்கலானதாகவும் அந்த கதாபாத்திரம் இருப்பதால் யாரும் பொருந்தவில்லை. வம்சி கிருஷ்ணா கச்சிதமாக பொருந்தினார்.

    படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருப்பதால், வில்லன் கதாபாத்திரத்துக்கான உடைகளை அங்கேயே வாங்கி அனுப்பி வைத்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ‘சீதக்காதி’ பட புகழ் சுனில்ரெட்டி அரசியல்வாதியாக வருகிறார்.

    வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. சண்டை காட்சிகள், சென்னை சுற்றுப்புறங்களில் படமாகி வருகின்றன. பாடல் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்”. என கூறினார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம்.
    மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதன்படி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

    பாரிஸ் ஜெயராஜ், ஜகமே தந்திரம் பட போஸ்டர்கள்

    இந்நிலையில், அதற்கு போட்டியாக அதே நாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இப்படத்தை இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் சந்தானம் தாதாவாக நடித்துள்ளார். தனுஷ், சந்தானம் படம் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிகில் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், காதலிக்க நேரமில்லை, பேச்சிலர், 4ஜி, டிராப் சிட்டி என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. 

    இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அதன்படி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார். 

    படக்குழுவினருடன் அம்ரிதா ஐயர்

    மேலும் ஆனந்த்ராஜ், பிக்பாஸ் பிரபலங்கள் ரேஷ்மா, டேனியல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘கடவுள் இருக்கான் குமார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார். 

    இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. 

    பொம்மை நாயகி பட போஸ்டர்

    இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பொம்மை நாயகி’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ஷான் இயக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
    மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
    விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான படம் புலிக்குத்தி பாண்டி. கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை இயக்கி இருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

    தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பட்ட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் புலிக்குத்தி பாண்டி படம் தான் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

    விக்ரம் பிரபுவின் டுவிட்டர் பதிவு

    பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பட்ட சூரரைப்போற்று படத்தைவிட புலிக்குத்தி பாண்டி படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளனர் என்பது டிஆர்பி மூலம் தெரியவந்துள்ளது. இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
    படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன், வைரலாகும் நடன வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக நடிப்பை வெளிப்படுத்தினார். 

    இந்நிலையில், கறுப்பு நிற உடையில் பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. அந்தப் பெண் பார்ப்பதற்கு அனிகா சுரேந்திரன் போலவே இருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவா இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். 

    தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்திருக்கும் அனிகா, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.

    அனிகா

    மேலும் தொடர்ந்த அவர், “உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், இது என்னை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது. இதைப் பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னது போல் இது நன்றாக மார்பிங் செய்யப்பட்ட வீடியோ. அதைப் பார்க்கும்போது, நான் கூட அதிர்ச்சியடைந்தேன். ஆன்லைனில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.
    நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில் ‘நடிகர்’ என இருந்ததை ‘அசுரன்/நடிகர்’ என மாற்றியுள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில் ‘நடிகர்’ என இருந்ததை ‘அசுரன்/நடிகர்’ என மாற்றியுள்ளார். இது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    ஏனெனில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தில் “நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா’ என்ற வசனத்தை சிம்பு பேசியிருப்பார். தனுஷின் அசுரன் படத்தைக் குறிப்பிட்டுத்தான் சிம்பு இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்பட்டது.

    தனுஷின் டுவிட்டர் பயோ

    தற்போது சிம்பு பேசிய வசனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் தனுஷ் ‘அசுரன்/நடிகர்’ மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் 10 நாளில் 200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அதன்படி 10 நாட்களில் இப்படம் உலகளவில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் வசூல் திரையுலகினர் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    மாஸ்டர் போஸ்டர்

    ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்கள் 200 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது மாஸ்டர் படமும் அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
    பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
    பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் படத்தை அபின் ஹரிஹரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர். இதில் ஆரி முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்தில் ஆரிக்கு வில்லனாக இளம் மலையாள நடிகர் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் எனும் படத்தில் அப்பாணி ரவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றதால் இவரை அப்பாணி சரத் என்றே அழைக்கின்றனர். 

    அப்பாணி சரத் என்கிற சரத்குமார்

    இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டோ சங்கர் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம், இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மூலம் இந்திக்கு போனார்.

    தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. பாகி 2, பாரத் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர தயாராகும் ராதே படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

    திஷா பதானி

    இந்நிலையில், நடிகை திஷா பதானிக்கு போனில் மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் திஷா பதானியை கொலை செய்யப் போவதாக மிரட்டி உள்ளார். இதுபோல் போலீஸ் நிலையத்துக்கும் திஷா பதானியை கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் போன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    போன் நம்பரை வைத்து விசாரித்தபோது அந்த அழைப்பு பாகிஸ்தானில் இருந்து வந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×