என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீசான மாஸ்டர் படம் கொடுத்த தைரியத்தால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை ஓடிடி-யை தவிர்த்து திரையரங்குகளில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.

    சக்ரா பட போஸ்டர்

    அந்த வகையில், நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், அதனை கைவிட்டு தற்போது திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

    சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
    1972-ல் "வெள்ளி விழா'' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

    அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

    "ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, "கண்ணா நலமா'' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

    கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த "புன்னகை'' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

    "வெள்ளி விழா'' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், "தெய்வத்தாய்'' முதல் "வெள்ளி விழா'' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் "அரங்கேற்ற''த்தில் தொடங்குகிறது.

    இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. "ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

    "இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே "அரங்கேற்றம்.''

    வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

    "களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். "கலாகேந்திரா'' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

    இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

    கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

    திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

    ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

    ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

    எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

    எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

    கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

    "அரங்கேற்றம்'' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

    தமிழ்த்திரை உலக வரலாற்றில் "அரங்கேற்றம்'' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
    சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஆத்மியாவுக்கு திருமணம்.
    சிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்தை தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணி புரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.

    இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜன., 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். ஜன., 26ல் ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது. 

    ஆத்மியா

    திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க சனூப் சம்மதம் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆத்மியா.
    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஐதராபாத்தில் படப்பிடிப்புக்காக வந்த தமன்னா கொரானா தொற்று உறுதியானது. கொரானாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். கொரானாவிலிருந்து மீண்டு உடல் நிலை தேறியபிறகும் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார்.

    பின்னர் உடல் பூசிய நிலையில் சில படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா அறிமுகமானது முதலே ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடு இருந்துவந்தார். இந்நிலையில் தன் உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

    தமன்னா

    அப்படி உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை ரசிகர்களுக்கு தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அறிவுரை சிலவற்றை கூறியுள்ளார். அதில் நீங்கள் உச்சபட்ச பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்தவேண்டாம். 2 மாதம் சாதாரண பயிற்சியை மேற்கொண்டாலே போதும், பழைய ஆரோக்கியத்தை பெறலாம். தினமும் பயிற்சி செய்யுங்கள், என்னைபோல் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளார்.
    குடி போதையில் தகராறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த நான்கு மாதமாக இரண்டாம் தளத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து அங்கேயே தங்கி வருகிறார். இரண்டாம் தளத்தில் கீழே தொழிலதிபர் ரங்க பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு நடிகர் விஷ்ணு விஷால் மது குடித்து விட்டு தங்களிடம் பிரச்னையில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ரங்கபாபு 100-க்கு கால் செய்துள்ளார். மேலும் காவல் கூடுதல் ஆணையரிடம் ஆன்லைனிலும் புகார் அளித்துள்ளார்.

    விஷ்ணு விஷால்

    இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் கூறும்போது, தான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு டயட்டில் இருந்து வருகிறேன். டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? தன்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய தொழிலதிபர் குடும்பத்தினர் இதுபோன்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள் என்று கூறினார்.

    இந்த பிரச்சினை தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் மரணமடைந்தது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் சில்லுக்கருப்பட்டி. இதில் மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவனீதனாக நடித்தவர் ஸ்ரீராம். தற்காப்பு கலையின் நிபுணராக இருக்கும் ஶ்ரீராம், இன்று பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

     தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு ஶ்ரீராம் தற்காப்பு கலையை கற்பித்து வந்தார். தவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஹலிதா ஷமீமின் சில்லு கருப்பட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
    நீலம் புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் முன்னோட்டம்.
    பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்‌ஷன்ஸ். 

    இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். 'பொம்மைநாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. 

    யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம்.குமார், ஹரி, ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு- அதிசயராஜ், இசை- சுந்தரமூர்த்தி, எடிட்டர் - செல்வா RK, கலை - ஜெயரகு, பாடல்கள்- கபிலன், அறிவு, இணை தயாரிப்பு-
    யாழிபிலிம்ஸ், வேலவன், லெமுவேல். தயாரிப்பு- பா.இரஞ்சித்.
    ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் என்று பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.
    ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ”. சங்கை குமரேசன் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    அதில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது.. "இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். 

    நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்கு கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும்.

    முன்னா பட விழா 

    நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்" என்றார்.
    அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை என்று பிரபல நடிகை ரெஜினா பேட்டி அளித்துள்ளார்.
    தமிழில் அதிக படங்களில் நடித்துள்ள ரெஜினா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “வித்தியாசமான கதை, கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். கவர்ச்சியாக எப்போது வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்தால்தான் பெயர் கிடைக்கும்.

    கொஞ்ச காலத்துக்கு பிறகு ரெஜினா என்ற திறமையான நடிகை இருந்தார் என்று பேசும்படி இருக்க வேண்டும். இந்தி படத்தில் லெஸ்பியனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. 

    ரெஜினா

    கதை கேட்டதும் அதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதில் நடித்த பிறகு சாவாலான கதாபாத்திரம் கொடுத்தால் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளது. எனவே இனிமேல் கவர்ச்சியை தவிர்த்து வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    இந்தநிலையில், அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.

    சமந்தா

    மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த சீரியஸின் தொடர்ச்சியாக ஃபேமிலி மேன் - 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது. அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர் அறிமுகப்படுத்தியது. இது இந்திய நடிகைகளில் சமந்தாவிற்கு தான் முதல் முறையாக அமைந்துள்ளது.
    உலக சினிமா ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் தள்ளிப் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை' தயாராகி உள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து கொரோனா பரவலால் பல தடவை தள்ளிப்போனது.

    இந்த நிலையில் சமீபத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நோ டைம் டூ டை படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

    ஜேம்ஸ் பாண்ட்

    இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படம் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக வருகிற அக்டோபர் மாதம் ‘நோ டைம் டூ டை' படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர்.
    சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு திடீரென வருகை தந்தார்.

    ஆனால் அவரை முதலில் யாரும் கவனிக்கவில்லை. இதனால் அவர் பொதுமக்களோடு நின்று கோவிலுக்குள் சென்று தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர் அவர் விநாயகர், பாடலீஸ்வரரை தரிசனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு சன்னதிகளுக்கு சென்று வழிபட்ட அவர் கோவிலை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள், அங்கு கடை வைத்திருக்கும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அவருடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    யோகி பாபு

    சற்று நேரத்தில் நடிகர் யோகிபாபு கோவிலுக்கு வந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் அவரை காண ஏராளமானோர் கோவிலுக்கு வரத்தொடங்கினர். இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
    ×