என் மலர்
சினிமா செய்திகள்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தாலும், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அயலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் சித்தார்த் விபினுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘ஜுங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் விபினுக்கும் - ஷ்ரேயா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. சித்தார்த்தின் நண்பரும், நடிகருமான நகுல் நேரில் சென்று வாழ்த்தியதோடு, திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
"அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.
அதில் ஒரு விடுகதை:-
"தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.
அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.
அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.
வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.
இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.
மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.
ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.
மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!
கத்திமேல் நடப்பது போன்ற கதை.
கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!
கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!
தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.
"யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.
கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.
"ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
"மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.
ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.
மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.
பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-
"திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.
அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.
அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் என பதிலளித்த சுருதி, இந்த ஆண்டு திருமணமா? என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என கூறினார் சுருதிஹாசன்.
மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமுதாய அக்கறையோடு உருவாகும் இப்படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்களாம். எனவே, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடியதாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி டாக்டர் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நாட்டுப்புற இசை கலைஞரான அந்தோணி தாசன், புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் ‘போடா முண்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்குகிறார். இவர் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர். ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பிரபல நாட்டுப்புற இசை கலைஞரான அந்தோணி தாசன், ‘போடா முண்டம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். முன்னணி நாட்டுப்புற பாடகராக திகழும் அந்தோணி தாசன், ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன் படம் மூலம் அந்தோணி தாசன் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படத்தின் ரகசியத்தை நடிகை கசியவிட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகையான அலிசான் டூடி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வருகிற 2021-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி ரிலீசாக உள்ளதாக பதிவிட்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து அவர் உடனே நீக்கி விட்டார். இருப்பினும் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
‘நாங்க ரொம்ப பிஸி’, ‘புலிக்குத்தி பாண்டி’ போன்ற படங்களைப் போல் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமும் நேரடியாக டி.வி.யில் ரிலீசாக உள்ளதாம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஏராளமான படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டன. அதேபோல் சில படங்களை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினர். அந்தவகையில், கடந்த தீபாவளியன்று, யோகிபாபு, பிரசன்னா நடித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் டி.வி.யில் வெளியிட்டனர்.
அண்மையில் பொங்கலுக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் டி.வி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. டி.ஆர்.பி.யிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் ஒன்று நேரடியாக டி.வி.யில் வெளியிடுவதற்காக தயாராகிறதாம். இப்படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இயக்குகிறார். பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அல்லது உழைப்பாளர் தினம் (மே 1) அன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூன் படத்தின், ரீமேக்கில் ராஷி கண்ணா நடிக்க உள்ளாராம்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இப்படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அதேபோல் இப்படம் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் ஏற்கனவே மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளார்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 40-வது படமான இதை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமானின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களுக்கு இசையமைத்த இமான், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். அதேபோல் சூர்யா படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.